செல்வ செழிப்போடு வாழ வேண்டுமா? குபேரருக்கு இந்த மந்திரத்தைச் சொல்லி இப்படி பூஜை செய்யுங்கள்!

kuberanl

நம்முடைய வாழ்க்கை செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்றால், நிச்சயம் குபேரரது வழிபாடு அவசியம் தேவை. இன்றைய காலகட்டத்தில் பல பேர் வீட்டில் குபேரர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. சில பேர் அதை தங்களுடைய பூஜை அறையிலேயே வைத்து வழிபடுகிறார்கள். எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் குபேரரை சிறப்பாக வழிபடுவதற்காக ஒரு சில வழிமுறைகள் உண்டு. குபேரரின் சிலையை வீட்டின் பூஜை அறையிலோ அல்லது வீட்டின் அலமாரியிலோ, வைப்பதை விட இப்படிப்பட்ட சில பூஜைகளை செய்தால் நல்ல பலன் இருக்கும் என்று சில சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

kuberan

முதலில் உங்களது வீட்டில் இருக்கும் குபேரரது சிலையை நன்றாக துடைத்து, சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின்பு வடக்கு திசையில் இருக்கும், ஒரு ஓரத்தில் தரையை பன்னீர் தெளித்து துடைத்து விட்டு, அதன்மேல் அரிசிமாவில் கோலம் போட்டு, மூன்று ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து, அந்த நாணயத்தின் மேல் சிகப்பும் வெள்ளையும் கலந்த பூக்களை வைக்க வேண்டும். அதன் பக்கத்தில் இந்த குபேரரது பொம்மையையும் வைத்துவிடுங்கள். நாணயமும், குபேரரின் பொம்மையும் நீங்கள் போட்டிருக்கும் அரிசி மாவு கோலத்தின் மேல் இருக்கும்படி வைத்து விடவேண்டும். குபேரரின் திருஉருவ சிலைக்கு பூவால் அலங்கரித்து விடுங்கள். திருஉருவ சிலைக்கு முன்பாக ஒரு நெய் தீபம் ஏற்றி குபேரரது இந்த மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான குபேரரின் மந்திரம் இதோ.

குபேர மந்திரம்:
ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம் க்லீம் வித்தேஸ்வராய நமஹ.

kubera

இந்த மந்திரத்தை உச்சரித்த பின்பு குபேரருக்கு நைவேத்தியமாக கற்கண்டு, உலர்திராட்சை, அல்லது ஏலக்காய், முந்திரி, பாதாம் எதுவாக இருந்தாலும் படைக்க வேண்டும். தீப தூப ஆராதனை காட்டி உங்களது பூஜையை நிறைவு செய்து விடலாம். இந்தப் பூஜையை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்யலாம். மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்யலாம். இப்படி குபேரரை தொடர்ந்து இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்துவர உங்களது பண தேவையும் பூர்த்தியாகும். செல்வ செழிப்போடு வாழ என்ன வழிகள் உள்ளதோ அவை அனைத்தையும் குபேரர் உங்களுக்கு காண்பித்து தருவார் என்பது உறுதி.

English Overview:
Here we have Kubera mantra in Tamil. We can also call it as panam sera manthiram, Selvam sera manthiram in Tamil.