வருமானம் பெருக இந்த குபேர மந்திரத்தை 7 முறை உச்சரித்தால் பெரிய பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

coins-kuberan

போதிய வருமானம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்படுபவர்கள் மத்தியில் ஒருசிலர் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது ஏன் இந்த முரண்பாடு ஏற்படுகிறது? என்று தோன்றும். இந்த உலகத்தில் தினமும் குண்டான் குண்டானாக சாப்பாட்டை வீணடிப்பவர்களும் உண்டு. ஒரு கை பிடி சோற்றுக்கு கூட கஷ்டப்படுபவர்களும் உண்டு. ஒவ்வொருவரும் அவரவர்கள் செய்த கர்ம வினையின் அடிப்படையில் தான் பலன்களையும் அனுபவிக்கின்றார்கள்.

pichai-thanam

கர்ம வினையை நம்மால் தடுக்க முடியாவிட்டாலும் நிச்சயமாக குறைத்துக் கொள்வதற்கு ஆன்மீக ரீதியாக எவ்வளவோ வழிமுறைகள் உள்ளன. இந்த குபேர மந்திரத்தை தினமும் 7 முறை உச்சரிப்பவர்களுக்கு வருமான உயர்வு உண்டாகும். என்ன மந்திரம் அது? எப்படி உச்சரிக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளப் போகிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது ஏழு முறையாவது உச்சரிக்க வேண்டும். உங்களால் முடிந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் தாராளமாக உச்சரிக்கலாம். ஆனால் குறைந்தது 7 முறை உச்சரிப்பது மிகவும் நல்லது. இந்த மந்திரம் குபேர தேவனுடைய மந்திரமாகும். அவரை மனதில் நினைத்து வருமான உயர்வுக்காக வேண்டியபடி இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

kubera

குபேர மந்திரம்:
ஓம் ஹ்ரீம் க்ளீம் சௌம்:
ஸ்ரீம் கும் குபேராய:
நரவாகனாயயக்ஷ ராஜாய:
தன தான்யாதிபதியே:
லக்ஷ்மி புத்ராய ஸ்ரீம்:
ஓம் குபேராய நமஹ!!

- Advertisement -

தீராத துன்பங்கள் இதனால் நீங்கப் பெற்று வாழ்வில் சுபீட்சம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், ஊதிய உயர்வு, பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள், உங்களுடைய ஏதாவது ஒரு துறை சார்ந்த வளர்ச்சியை நோக்கி பயணிப்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், சாதிக்க நினைப்பவர்கள் இந்த மந்திரத்தை தினம்தோறும் ஏழு முறை உச்சரித்தால் நல்ல வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் உண்டாகும். குபேர தேவன் செல்வத்தை மட்டுமல்ல நம்முடைய வாழ்க்கையில் நாம் அடைய வேண்டிய உயரத்தையும், வளர்ச்சியையும் தீர்மானிக்கிறார். நம்முடைய வளர்ச்சியே செல்வ வளத்தையும் நிர்ணயிக்கிறது.

kuberan

குபேர தேவன் படத்தை வீட்டில் வைத்து 108 முறை செல்வம் தரும் குபேர போற்றிகளை வெள்ளிக் கிழமைகளில் குடும்பத்தோடு அமர்ந்து பூஜை அறையில் குபேரனுக்கு வாசனை மிக்க மலர்களாலும், நாணயங்கள் கொண்டும் அர்ச்சனை செய்து வந்தால் சகல யோகங்களையும் பெறலாம். குடும்பத்தோடு குபேரனை வழிபடும் பொழுது அதற்குரிய பலன்களும் தனித்துவமானவை. இதற்கு பெரும்பாலும் பலரும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. ஆனால் இதை செய்து பார்த்தால் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்பது சாஸ்திர நியதி. முயற்சி செய்து பயன் அடையுங்கள்.

இதோ உங்களுக்கான 108 செல்வம் தரும் குபேரன் போற்றி:
செல்வம் தரும் குபேரன் போற்றி

இதையும் படிக்கலாமே
உங்களுடைய தங்கம், பரம்பரை தங்கமாக, அடுத்த தலைமுறை கைக்கு போய் பத்திரமாக சேரும். வீட்டில் இருக்கும் தங்கத்தை அடகில் முழுகாமல் பாதுகாக்க இத மட்டும் செஞ்சா போதும்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.