உங்களுடைய தங்கம், பரம்பரை தங்கமாக, அடுத்த தலைமுறை கைக்கு போய் பத்திரமாக சேரும். வீட்டில் இருக்கும் தங்கத்தை அடகில் முழுகாமல் பாதுகாக்க இத மட்டும் செஞ்சா போதும்.

gold

நம்முடைய வீட்டின் லட்சுமி கடாட்சத்தை நிர்ணயிக்கக் கூடியது, நம் வீட்டில் தங்கி இருக்கக்கூடிய தங்க நகைகள் தான். அந்த தங்கம் என்றைக்கு, நம் கையை விட்டு அடகு கடைக்கு செல்கின்றதோ, அன்றைக்கே நம்மைவிட்டு அதிஷ்டலட்சுமி வெளியே சென்று விட்டாள் என்று தான் அர்த்தம். இதற்காக அவசரத் தேவைகளுக்கு நகையை அடகு வைக்கவே கூடாதா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். ஒரு முறை நீங்கள் நகையை அடமானம் வைத்து விட்டீர்கள் என்றால், மீண்டும் மீண்டும் அது அடமான கடைக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.

ஏதோ ஒரு நல்ல நேரம் நகையை அடமானம் வைத்து விட்டு, மீட்டு விட்டோம். நமக்கு நேரம் நன்றாக இருந்தால் கூட, நாம் அடமானம் வைத்த இடம் சரியான இடமாக இல்லை என்றால், நிச்சயம் நாம் மீட்ட, நம்முடைய நகை நம் கைகளில் தங்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை உங்களது நகைகளை அடமானத்திற்க்கு எடுத்துச் செல்லாமல் இருப்பது நல்லது. அடமானம் வைப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.

ஒருவருக்கு ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் பலமாக இல்லை என்றால், நிச்சயம் வீட்டில் இருக்கக்கூடிய தங்க நகைகளுக்கு பிரச்சினை வரத்தான் செய்யும். சரி, இந்த குருவும் சுக்கிரனும் நமக்கு பலமாக இல்லை என்பதை ஜாதகம் பார்க்காமல் எப்படி தெரிந்து கொள்வது? வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் இருபாலரும் கோபத்தோடு இருப்பார்கள். சின்ன சின்ன பிரச்சினைகளுக்குக் கூட கோபம் அதிகமாக வந்து, அந்த கோபம் பெரிய பிரச்சனையாக மாறி, பெரிய குழப்பத்தை உண்டாக்கும் அளவிற்கு விபரீத பிரச்சினைகள் ஏற்பட்டு விடும். வீட்டில் இருக்கக்கூடிய பெண்களால் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். இப்படி ஒரு வீட்டில் தொடர் பிரச்சனை இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்களுடைய ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் பலமாக இல்லை என்பதும் ஒரு அர்த்தம்.

gold-pot

எவர் ஒருவருக்கு ராகு திசை, குரு திசை, சுக்கிர திசை, கேது திசை நடந்து கொண்டிருக்கிறதோ அவர்கள் தங்களுடைய தங்க நகைகளை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பு. இந்த சமயங்களில் தேவையற்ற செலவுகளுக்காக, சொந்த தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக, அனுபவமில்லாத வேலையை தொடங்குவதற்கு, உங்களது நகைகளை அடமானம் வைத்தீர்கள். திரும்பவும் உங்கள் கைக்கு தங்க நகை வராமல் போக கூட வாய்ப்பு உள்ளது. உஷாராக இருந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

எந்த நேரத்திலும் உங்களது நகை உங்களை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டுமென்றால், நகையை புதியதாக வாங்கியவுடன் இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு அணிந்து கொண்டால், அந்த நகை காலாகாலத்திற்கும் பரம்பரை பரம்பரையாக, உங்களது அடுத்தடுத்த பரம்பரையில் வருபவர்களும், அந்த நகையை பயன்படுத்தும் அளவிற்கு உங்களிடம் நகைகள் தங்கி இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. அது என்ன மந்திரம் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? உங்களுக்கான அந்த மந்திரம் இதோ!

Gold rate in Saravana stores

ஓம் சொர்ன காஞ்சன
மாதங்கி வசம் வா வசம் வா
ஸ்ரீம் மம மாமா தநூகரன புவாய நமோ நம

Today Gold rate

எவர் ஒருவர் புதிதாக வாங்கிய தங்கத்தை இந்த மந்திரத்தை உச்சரித்து அணிந்து கொள்கிறார்களோ, அந்த நகை அவர்களிடம் நிலைத்து நிற்கும். இன்றைய சூழ்நிலையில் அடுத்த பரம்பரையில் வரக்கூடிய குழந்தைகள், நகையை பரம்பரை பரம்பரையாக, பாரம்பரிய நகை என்று சொல்லி அணிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைப்பது என்பது இந்த காலத்தில் மிகவும் அரிதாகிவிட்டது. உங்களுடைய அடுத்த பரம்பரைக்கு உங்களது நகையை சேர்த்து வைக்க வேண்டும் என்பவர்கள், உங்கள் நகையை பரம்பரை சொத்தாக அடுத்த பரம்பரையின் கையில் ஒப்படைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம் என்று கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் அரிசி மூட்டையை வாங்கியதும், அதிலிருந்து முதல் கைப்பிடி அரிசியை இப்படி எடுத்து வையுங்கள்! அரிசி பானை நிரம்பி வழிவது போல, பணப்பெட்டியும் நிரம்பி வழியும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.