நாளை 28/4/2022 சித்திரை மாத குபேர பிரதோஷ காலம்! மாலையில் சிவனை இப்படி வழிபட்டால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

sivan-nandhi-pradosham
- Advertisement -

பிரதோஷத்தில் இருக்கும் ‘தோஷம்’ குற்றத்தை குறிக்கிறது. பிரதோஷம் என்றால் குற்றமற்ற என்று அர்த்தம் ஆகும். பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுபவர்களுக்கு எத்தகைய தோஷங்கள் இருந்தாலும், அது அகன்று குற்றமற்றவராக அவர்களை வாழச் செய்யும் அற்புதமான சக்தி வாய்ந்த ஒரு காலமாக இருக்கிறது. சுபகிருது ஆண்டின் சித்திரை மாதத்தில் வியாழன் கிழமை அன்று வரக்கூடிய இந்த பிரதோஷத்தை குபேர பிரதோஷம் என்று கூறலாம். வியாழன் கிழமை என்பது குபேரனுக்கு உரிய கிழமையாகும். இதனுடன் வரக்கூடிய இந்த குபேர பிரதோஷ காலத்தில் சிவனை மனதார வழிபடுபவர்களுக்கு அள்ள அள்ள குறையாத செல்வங்கள் குவியும் என்பது நம்பிக்கை. எனவே நாளை பிரதோஷ காலத்தில் எப்படி எளிமையாக சிவனை வழிபடலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

மற்ற நேரங்களை காட்டிலும் இந்தப் பிரதோஷ வேளையில் நாம் வைக்கும் வேண்டுதல் ஆனது மிக விரைவாக பலிக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உண்டு. சிவபக்தர்கள் பிரதோஷ காலத்தில் சிவனை தரிசித்து வந்தால் மோட்சம் நிச்சயம்! வரங்களை வாரி வழங்குவதில் வல்லவராக விளங்கும் ஈசனை பிரதோஷ காலை வேளையில் தெரியாமல் நீங்கள் வழிபட்டாலும் உங்களுக்கு அதற்குரிய பலன்கள் பன்மடங்கு கிடைக்கும். அப்படியிருக்க பிரதோஷ காலத்தில் தெரிந்தே நாம் வழிபடும் பொழுது நமக்கு எவ்வளவு பலன்கள் கிடைக்கும்? என்று யோசித்துப் பாருங்கள்.

- Advertisement -

வேடன் ஒருவன் பிரதோஷ காலம் என்பதை அறியாமலேயே, மரத்தின் மீது அமர்ந்து கொண்டு, கீழே அவனை வேட்டையாட காத்திருக்கும் புலிக்கு பயந்து, இரவு முழுவதும் தூங்காமல் சிவலிங்கத்தின் மீது வில்வ இலைகளை பறித்து போட்டான். உண்ணாமல், உறங்காமல் சிவனுக்கு பிரதோஷ காலம் முழுவதும் வில்வ இலைகளால் அர்ச்சித்து வந்ததால் புலியிடம் இருந்து உயிர் தப்பினான் அந்த வேடன்.

எனவே பிரதோஷ காலத்தில் உணவேதும் அருந்தாமல், ஈசனை நினைத்து முழு மனதாக உங்களுடைய வேண்டுதல்கள் யாவும் உடனே பலிக்க, உங்களுடைய எண்ணங்கள் யாவும் நடக்க வீட்டில் அல்லது கோவிலுக்கு சென்று ஈசனைத் துதிக்க வேண்டும். மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலகட்டத்தை ‘பிரதோஷ காலம்’ என்கிறோம். எனவே இந்த காலத்தில் சிவாலயம் சென்று சிவ மந்திரத்தை 108 முறை எளிமையாக ‘ஓம் நமச்சிவாய’ என்று உச்சரித்து வந்தால் உங்களை சுற்றி இருக்கும் எத்தகைய பிரச்சனைகளும், தானாகவே விலகி செல்லும் அற்புதம் நடக்கும்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் ஆல கால விஷம் அருந்தியது சனிக்கிழமை பிரதோசம் என்பதால் சனி பிரதோஷம் சிவனுக்கு இன்னும் விசேஷமானது. திங்கட் கிழமையில் வரக்கூடிய பிரதோஷம் சிவபெருமானுக்கு உகந்ததாக இருக்கின்றது. இதனை சோம வார பிரதோஷம் என்று கூறுவார்கள். அது போல நாளைக்கு வியாழன் கிழமையில் வரக்கூடிய இந்த பிரதோஷம் குபேர பிரதோஷம் என்று கூறப்படுவது உண்டு.

எனவே இந்த நாளை தவறவிடாமல் உங்களால் முடிந்த மட்டும் விரதம் இருந்து எளிய உணவுகளை உட்கொண்டு வீட்டில் சிவநாமங்களை ஜெபிக்க விடுங்கள். அதே போல சிவனுக்கு கண்டிப்பாக வில்வ அர்ச்சனை செய்யுங்கள். முடிந்தால் அந்நேரத்தில் சிவாலயங்களுக்கு சென்று அங்கு நடக்கும் பூஜைகளில் கலந்து கொள்ளுங்கள். அபிஷேக பொருட்களை வாங்கிக் கொடுங்கள். இல்லாத மற்றும் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். இவ்வாறு குபேர பிரதோஷத்தை வழிபட நீங்களும் விரைவில் கோடீஸ்வரன் ஆகலாம்.

- Advertisement -