உங்களுக்கு அதிக பணவரவு தொடர்ந்து கிடைக்க இந்த சுலோகம் துதியுங்கள்

kuberan-compressed

நமக்கு கிடைக்கும் பணத்தை செலவு செய்வது சுலபம். ஆனால் அத்தகைய பணத்தை சம்பாதிப்பதும், அப்படி சம்பாதித்த பணத்தை முறையாக சேமித்து வைப்பதும் பலருக்கு பெரும் சவாலாக இருக்கும் ஒரு செயலாக இருக்கிறது. ஒருவருக்கு மிகுந்த பண வரவு உண்டாக ஒரே வழியில் மிக குறைந்த அளவிலான தனவரவு இருந்தால் அது இயலாது. பொருளீட்ட பல வாய்ப்புகள் வருவதும், அப்படி ஈட்டிய பணத்திற்கு வீண் செலவுகள் ஏதும் ஏற்படாமலும் இருக்கு வேண்டும். அதற்கான குபேரனின் “குபேரன் ஸ்லோகம்” இதோ.

kuberan

குபேரன் ஸ்லோகம்

ஓம் ஸ்ரீம் ஓம் ஸ்ரீம் க்லீம்
ஸ்ரீம் விநேஸ்வராய நம

செல்வங்களின் அதிபதியாகிய குபேரன் பகவானின் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் வடக்கு திசையை பார்த்து நின்றவாறு 108 முறை துதிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக பூஜையறையில் குபேரனின் படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி இந்த ஸ்லோகத்தை 108 முறை துதிப்பதால் உங்களின் பணவரவிற்கு தடை, தாமதங்கள் ஏற்படாது. மிகுந்த பொருள் ஈட்ட புதிய வாய்ப்புகள் வரும். சேமித்த பணத்திற்கு வீணான செலவுகள் ஏதும் ஏற்படாது.

Kuberan

குள்ள உருவம், பானை போன்ற வயிறு, சதைப்பிடிப்பான அழகிய முகம் ஆகியவற்றை கொண்ட குபேர பகவான், பூலோக வாழ்க்கையில் மனிதர்கள் அதிகம் விரும்பும் செல்வத்திற்கு அதிபதியாக இருக்கிறார். இந்த குபேரன் இலங்கை வேந்தனான ராவணனின் சகோதரன் ஆவார். எனினும் தனது நற்குணங்களால் இறைவனின் அருள் பெற்று உலக செல்வங்கள் அனைத்திற்கும் அதிபதியாகும் வரத்தை பெற்றார். வாழ்வில் செல்வங்களை பெற தன்னை உண்மையாக வழிபாடும் பக்தர்களுக்கு அருள்புரிவார் குபேரன்.

இதையும் படிக்கலாமே:
ஸ்ரீ அனுமன் ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kubera slokam in Tamil. It is also called as Kubera mantra in Tamil or Kubera thuthi in Tamil or Selvam sera manthiram in Tamil or Kuberan mantram in Tamil.