பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்க, இந்த 2 பொருளை, 2 கையில் எடுத்து நெருப்பில் போட்டாலே போதுமே! எல்லோரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அந்த 2 பொருள் என்னென்ன?

husbund-and-wife

பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, அல்லது தாங்களாகவே முடிவு செய்து அவரவர் விருப்பப்படி செய்துகொள்ளும் காதல் திருமணமாக இருந்தாலும் சரி, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது இயல்புதான். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து, அனுசரித்து சென்றால் தான் இல்லம் இனிமையாக அமையும். நீ பெரியவரா? நான் பெரியவரா? என்று முட்டி கொண்டு சண்டை போட்டு, ஆளுக்கு ஒரு பக்கம் சென்றால், குடும்பம் சிதைந்து தான் போகும். குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால், தாந்திரீக ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

scolding-husband

இந்த பரிகாரம் மனைவியை விட்டு பிரிந்திருக்கும் கணவரும் செய்யலாம். கணவரை விட்டு பிரிந்திருக்கும் மனைவியும் செய்யலாம். அப்பா அம்மாவை விட்டு குழந்தைகள் பிரிந்து சென்று இருந்தாலும், உங்களுடைய உறவுகள், உங்களை விட்டு பிரிந்திருந்தாலும், இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். தவறாக இந்த தாந்திரீக பரிகாரத்தை பிரயோகப்படுத்தி பார்க்கக் கூடாது.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான 2 பொருள்கள். ஒரு கைப்பிடி அளவு வரமிளகாய், ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பு அவ்வளவுதான். முதலில் உங்களுடைய வீட்டில் பூஜை செய்யும் இடத்தை தவிர்த்து, வேறு ஏதாவது ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள், கணவராக இருந்து, மனைவியோடு சேர விரும்புகிறீர்களா? உங்களை விட்டு, உங்கள் மனைவி விலகி இருக்கின்றாரா? உங்களை புரிந்து கொள்ளவில்லையா?

ஒரு விரிப்பை விரித்து, நீங்கள் அதன் மேலே அமர்ந்து கொள்ளுங்கள். அதன் பின்பு நீங்கள் சேர நினைக்கும் உங்களுடைய பார்ட்னர் புகைப்படத்தை எடுத்து உங்கள் முன்பாக வைத்துக்கொள்ளுங்கள். உங்க லைஃப் பார்ட்னர் புகைப்படத்திற்கு கீழே ஒரு கைப்பிடி அளவு வரமிளகாயை, உங்களது இடது கையால், வைத்து விடுங்கள். சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய வலது கையில் கலப்பை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவேண்டும்.

- Advertisement -

இப்போது கையில் கல் உப்பை வைத்துக் கொண்டு, உங்களுடைய லைஃப் பாட்னர் புகைப்படத்தை பார்த்து ‘ஓம் நமசி வசி’ என்ற மந்திரத்தை எத்தனை முறை வேண்டுமென்றாலும் உச்சரிக்கலாம். நீங்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் கணக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு விரைவில் உங்களுடைய பாட்னர் உங்களிடம் வந்து சேர்ந்து விடுவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

லைஃப் பார்ட்னருக்கு மட்டும் இந்த பரிகாரம் அல்ல. உங்களது குழந்தைகள் அல்லது உங்களது நண்பர்கள், யாரேனும் உங்களுக்கு இஷ்டப்பட்ட உறவுகள் உங்களை விட்டுப் பிரிந்து இருந்தாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த வேண்டும். கட்டாயம் தவறாக யாரையும் வசியம் செய்து கொள்ள வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்தால் பலனளிக்காது.

salt1

இந்த பரிகாரத்தை வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று தொடங்குவது மிகவும் சிறப்பானது. தொடர்ந்து 11 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து வரும் பட்சத்தில் உங்களை விட்டுப் பிரிந்து சென்றவருடைய மனது மாறி மீண்டும் உங்களிடம் வந்து சேர்வதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது.

husbund-and-wife

சரி, பரிகாரத்தில் வைத்த வரமிளகாயையும், உப்பையும் என்ன செய்வது. தூபம் போடும் சாம்பிராணி தூபம் காலில் கொஞ்சமாக கொட்டாங்குச்சியை வைத்து நெருப்பு மூட்டி, அந்த நெருப்பில் போட்டு விடுங்கள். உங்கள் கையாலேயே போடவேண்டும். கல் உப்பை வலது கையிலேயே தூக்கி போட வேண்டும். வரமிளகாயை இடது கையாலேயே எடுத்து நெருப்பில் போட்டுவிட வேண்டும்.

fight2

இந்த பரிகாரத்தை எல்லாம் தாண்டி, சேரவேண்டும் என்ற எண்ணம் யாரேனும் ஒருவருக்காவது ஆழ்மனதில் உண்மையாக இருக்கவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. வளர்பிறை வெள்ளிக்கிழமை தொடங்கி தொடர்ந்து 11 நாட்கள், இந்த பரிகாரத்தை செய்தாலே பலனை உங்களால் உணர முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தினமும் குளிக்கும் முன் இந்த மந்திரத்தை சொல்லி விட்டு தண்ணீரை ஊற்றுங்கள்! பாவத்தை போக்கக்கூடிய கங்கையில், நீராடிய பலன் கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.