வியாழன் கிழமையில் குபேரனுக்கு இந்த 1 பொருளை வைத்து இப்படி வழிபட்டால் நாமும் அவரைப் போல் பணக்காரன் ஆகலாமா?

thamarai-sangu-kuberan
- Advertisement -

செல்வத்தின் அதிபதியாக திகழும் குபேரனுக்கு பல்வேறு பெயர்கள் இருந்தாலும் அவரை நினைவூட்டுவது என்னவோ அவர் கையில் வைத்திருக்கும் பணமூட்டை தான். பணம், பொருள், நகைகள் போன்ற அத்தனை செல்வங்களையும் வாரி வழங்கக்கூடிய குபேர பகவானுக்கு உகந்த கிழமை வியாழன் கிழமை ஆகும். இந்த வியாழன் கிழமையில் குபேரனுக்கு குபேர விளக்கு ஏற்றி வழிபடுபவர்களும் உண்டு. இப்படி அவரைப் போல நாமும் செல்வாதிபதி ஆக வியாழன் கிழமையில் முக்கியமாக வைத்து வழிபட வேண்டிய ஒரு பொருள் என்ன? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பிரம்ம தேவரின் குலத்தில் பிறந்தவர்கள் ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பநகை, விபீஷணன், குபேரன் ஆகியோர் ஆவர். பிரம்மர் இவர்களுக்கு கொள்ளுத்தாத்தா முறை ஆகிறார். இதில் ராவணனும், குபேரனும் தீவிர சிவ பக்தர்களாக இருந்து வந்தனர். இவர்களுடைய கடும் தவத்தினால் சிவபெருமான் ராவணனுக்கு மனிதரைத் தவிர வேறு யாராலும் அவனை அழிக்க முடியாத வரத்தை கொடுத்தார். அதே போல குபேரனுக்கு வடக்கு திசை முழுவதும் அரசாளும் பதவியை அளித்தார். வடக்கு திசைக்கு அதிபதியாக இருக்கும் குபேர பகவானுக்கு உலகத்தில் இருக்கும் எல்லா செல்வத்தையும் கொடுத்து மனிதர்களின் விதிப்பயனுக்கு ஏற்ப கர்ம அடிப்படையில் அவர்களுக்கு செல்வத்தை அளிக்க வேண்டும் என்கிற பொறுப்பையும் ஒப்படைத்தார்.

- Advertisement -

வடக்கு திசையில் அழகாபுரி என்கிற அற்புத அரண்மனையை விஸ்வகர்மா அவருக்கென பிரத்தியேகமாக உருவாக்கிக் கொடுக்க அதில் கம்பீரமாக அமர்ந்து இன்றும் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு கணக்குப் பிள்ளையாக நியமிக்கப்பட்டவர்கள் சங்கநிதி மற்றும் பதும நிதி. இவர்கள் முறையே தாமரையும், சங்கும் கையில் வைத்திருப்பார்கள். எனவே குபேர பூஜை செய்யும் பொழுது தாமரை பூ மற்றும் சங்கு ஆகியவற்றை வைத்தே பூஜிப்பது முறையாகும்.

தனக்கென எந்த விதமான எதிர்பார்ப்புகளும் ஆற்ற குபேரன் தியாகத்தின் மறு உருவமாக தேவர்களுக்கு காட்சி அளித்தார். இதனால் தேவர்களுக்கு நிதி அமைச்சராகவும் பொறுப்பு ஏற்க செய்தார். திருவேங்கட மலையில் காட்சி தரும் வெங்கடாசலபதியின் திருமணத்திற்கு கடன் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்த குபேரனின் அருளை நாம் வியாழன்தோறும் அவரை போதிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

- Advertisement -

ஒவ்வொரு வியாழன் கிழமை அன்றும் குபேரன் படத்தை வைத்து தாமரை மலர், சங்கு ஆகியவற்றை இருபுறமும் வைத்துக் கொள்ள வேண்டும். நாணயங்களில் அர்ச்சனை செய்யும் பொழுது குபேரர் மனம் மகிழ்கிறார். எனவே 108 ஐந்து ரூபாய் நாணயங்களை இதற்கென தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பூஜை செய்யும் பொழுது குபேரனுக்கு குபேர விளக்கு ஏற்றி, 108 நாணயங்கள் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

முக்கியமாக செல்வ அதிபதி குபேரன் தன் சொத்துக்களையெல்லாம், நாடு நகரங்களை எல்லாம் ஒருமுறை இழந்த பொழுது ஈசனிடம் என்ன செய்வது? என்று கேட்கும் பொழுது, சிவ பெருமானோ நெல்லி மரத்தை வளர்க்க அறிவுறுத்தினார். நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. எனவே நெல்லிமரம் வளர வளர அவருடைய இழந்த சொத்துக்களும், நாடு நகரங்களும் திரும்பக் கிடைத்தன. எனவே குபேர பூஜையின் பொழுது கட்டாயம் ஒரு நெல்லிக்கனியை வைத்து வழிபட வேண்டும் என்பது சிறப்பிற்குரியது. நம்முடைய நியாயமான தியாகம் மிகுந்த செயல்களுக்கு மற்றும் கர்ம வினைப் பயனுக்கு ஏற்ப செல்வத்தை வழங்கும் குபேரனை வியாழன் கிழமையில் வழிபாடு செய்து அவரின் அருளை இப்படியும் பெற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -