வறுமை நீங்கி செல்வம் பெறுக உதவும் குபேரன் காயத்ரி மந்திரம்

kuberanl

சிலரது வீட்டில் ஏதோ ஒரு காரணத்தால் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் சேருவதில்லை. அதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் செல்வத்திற்கு அதிபதியாக திகழும் குபேரனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் நீங்கி வீட்டில் செல்வம் நிறைய துவங்கும். வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க கூற வேண்டிய குபேரன் காயத்ரி மந்திரம் இதோ.

kubera

குபேரன் காயத்ரி மந்திரம்
ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைஸ்ரவ ணாய தீமஹி!
தந்நோ குபேர ப்ரசோதயாத்

kuberan

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறுவது சிறந்தது. சொந்தமாக தொழில் புரிவோர் தாங்கள் தொழில் புரியும் இடத்தில் காலையில் இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு தொழிலை துவங்கலாம்.

குபேர வழிபாடு

- Advertisement -

அழகாபுரி நகரத்தின் அதிபதியாகவும், மிக பெரும் செல்வந்தனாகவும் குபேரன் இருக்கிறார். மனிதர்கள் அனைவரும் தங்களின் வாழ்வில் அதிக வருமானம் பெறவும், செல்வம் சேமிக்கவும் செல்வங்களின் அதிபதியான குபேரனின் அருள் தேவைப்படுகிறது. அந்த குபேரனை தினமும் அவருக்கு உரிய காயத்திரி மந்திரம் துதித்து வழிபட்டு வருவதால் உங்களுக்கு சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான செல்வங்கள் வசதிகள் அதிகரிக்கும். குபேர வழிபாடு செய்ய நினைப்பவர்கள் செப்புத் தகட்டில் செய்யப்பட்ட குபேர எந்திரத்தை வாங்கி வந்து வெள்ளிக்கிழமைகளில் குபேர எந்திரத்தின் நான்கு முனைகளிலும் மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு, பூக்கள் சாற்றி, எந்திரத்திற்கு முன்பாக ஒரு தட்டில் சிறிது மஞ்சள் அட்சதை அரிசியை வைத்து தூபங்கள் கொளுத்தி, குபேர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதித்து வருவதால் நீங்கள் விரும்பிய பணவரவு அதிகரிக்கும். செல்வம் பெருகும்.

kubera

குபேர வழிபாட்டிற்குரிய தினங்கள்

நம் வாழ்வில் பணத்தின் தேவை தினந்தோறும் இருக்கிறது. எனவே குபேர பகவானை தினமும் அவருக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபடலாம். அப்படி தினந்தோறும் குபேரனை வழிபட முடியாதவர்கள் வாரங்களின் இறுதியில் வருகின்ற வெள்ளிக்கிழமை தினத்தில் மட்டும் குபேரனின் சிறிய அளவு படத்திற்கு பழம் மற்றும் இனிப்பு நைவேத்தியம் செய்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி குபேர காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபடுவதால் நன்மைகள் ஏற்படும். குபேரனின் அருளை முழுமையாகப் பெற நினைப்பவர்கள் ஒரு போதும் தங்களின் செல்வ வசதிகளை குறித்து கர்வம் கொள்ளக்கூடாது. மேலும் நம் மனதில் பேராசை, சுயநலம் போன்ற எண்ணங்கள் நிறைந்து இத்தகைய குபேர பூஜை செய்வதால் குபேரன் அருள் கிடைக்காமல் போய்விடும் நிலையும் ஏற்படும்.

kubera

குபேர வழிபாடு பயன்கள்

வாழ்க்கைக்கு மிக அத்தியாவசிய தேவையான பணம் அல்லது செல்வத்திற்கு அதிபதியாக குபேரன் இருக்கிறார். எனவே அவரின் அருள் நமக்கு பூரணமாக கிடைப்பதால் செல்வ வசதிகள் பெருகி மகிழ்வான வாழ்க்கை வாழலாம். பிறரிடம் கடன் வாங்கி வாழும் நிலை ஏற்படாமல் தடுக்கும். வாங்கிய கடனையும் விரைவில் திருப்பி செலுத்தக்கூடிய அமைப்பு உண்டாகும். வீண் பண விரயங்கள் ஏற்படாமல் காக்கும்.

இதையும் படிக்கலாமே:
கிருஷ்ணரின் 108 பெயர்கள் மற்றும் போற்றி

இது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English overview:
This article is about Lord Kuberan gayatri mantra in tamil. If one chant this mantra then he will be wealth. This mantra can be chanted in home and in workplace. Kuberan gayathri manthiram can be chanted 108 times daily.