பண வரவு ஏற்பட பிரதோஷ மந்திரம்

siva lingam kuberar
- Advertisement -

பிரதோஷ வழிபாடு என்றாலே நம்முடைய பாவங்களும் தோஷங்களும் நீங்கி சிவனை அடிபணிவது இந்த பிரதோஷத்தில் முக்கிய சாராம்சம். சிவனை வணங்குவதற்கே அவன் அருள் இருந்தால் தான் முடியும். அத்தகைய அருள் மிக்க சிவபெருமானை பிரதோஷ வேளையில் வழிபட்டு நாம் எதை மனம் உருகி கேட்டாலும் அதை உடனே அருள் புரிவார் என்பதில் சந்தேகமே இல்லை.

அந்த வகையில் இன்றைய தை மாத தேய்பிறையில் வந்திருக்கும் புதன்கிழமை குபேர பிரதோஷத்தில் சிவபெருமானுக்கு சொல்ல வேண்டிய மந்திர வழிபாட்டை குறித்து ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பணம் வரவிற்கு பிரதோஷ வேளையில் சொல்ல வேண்டிய மந்திரம்

இன்றைய பிரதோஷ தின வழிபாட்டை முழு விரதம் இருந்து இருப்பவர்கள் காலை முதல் மாலை பிரதோஷ நேரம் முடியும் வரை இருக்க வேண்டும். முழு விரதம் இருக்க முடியாதவர்கள் பால் பழம் என எளிமையான உணவு எடுத்துக் கொண்டு விரதம் இருங்கள்.

இன்றைய தினத்தில் காலை முதல் சிவசிவ சிவ சிவ குபேராய நமக என்ற இந்த நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருங்கள். உங்களுடைய பணிகள் எதுவாயினும் அதை செய்து கொண்டே மனதிற்குள் இந்த ஒரு மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருங்கள். மாலை பிரதோஷ வேளையில் இந்த வழிபாடு ஆலயத்திலும் செய்யலாம் உங்கள் வீட்டிலும் செய்யலாம்.

- Advertisement -

வீட்டில் செய்வதாக இருந்தால் பிரதோஷ வேளையில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து சிவபெருமான் படம் லிங்கம் இருப்பின் வில்வார்ச்சனை செய்யுங்கள். அது இல்லாத பட்சத்தில் ஒரு வெற்றிலையில் சிறிதளவு மஞ்சள் எடுத்து விநாயகரும் அதே போல சிவபெருமானை நினைத்தும் சிவனையும் மஞ்சளை கொண்டு பிடித்து வைத்து விடுங்கள் இதையே சிவபெருமானாக பாவித்து வழிபாடு செய்யுங்கள்.

சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக பச்சைப்பயிறு சுண்டல் செய்து வைத்து விடுங்கள். மஞ்சள் நிறத்திலான இனிப்பை செய்து சிவபெருமானுக்கு படைக்க வேண்டும் அந்த நேரத்தில் சிவபெருமானுக்கு உகந்த இந்த மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

- Advertisement -

ஓம் நமசிவாய நம நம நமசிவாய குபேராய நமக

இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு முடிந்த பிறகு தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள் அதன் பிறகு நெய்வேத்தியத்தை பிரசாதமாக விரதம் இருப்பவர்கள் முதலில் சாப்பிட்ட பிறகு மற்றவர்களுக்கு சாப்பிட கொடுங்கள். பிடித்து வைத்த மஞ்சள் தண்ணீரில் கலந்து வீட்டில் தெளித்து விட்டு மீதம் இருக்கும் தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள்.

இதே வழிபாடு ஆலயத்தில் செய்வதென்றால் வெறும் நெய்வேத்தியத்தை மட்டும் கொண்டு சிவபெருமானுக்கு வைத்து படைத்து விட்டு இந்த மந்திரத்தை சொல்லி வழிபடலாம். வியாழக்கிழமை தானே குபேரருக்கு உகந்த தினம். புதன்கிழமை எப்படி குபேரர் பிரதோஷம் என தோன்றலாம்.குபேரர் சிவபெருமானின் பரம பக்தர். இவர் சிவபெருமானின் வணங்கி வணங்கியே குபேர கடாட்சத்தை பெற்றவர்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர நெல்லிமர வழிபாடு

அவ்வாறு அவர் குபேர கடாசத்தை பெற்ற தினம் புதன்கிழமை. ஆகையால் தான் இந்த புதன்கிழமை குபேர புதன்கிழமையாக அனுஷ்டிக்க படுகிறது. இத்தகைய சக்தி வாய்ந்த நாளில் நாமும் நம்முடைய பண பிரச்சனை நீங்க சிவபெருமானை இந்த முறையில் வணங்கி வளம் பெறலாம்.

- Advertisement -