எப்போது பார்த்தாலும் உங்களை அவமானப்படுத்தி, குறை சொல்லி, துன்பப்படுத்தி, துரோகம் செய்து கொண்டே இருப்பவர்களை 5 நிமிடத்தில் ஒழித்துக்கட்ட 1 சொம்பு தண்ணீர் போதும்.

enemy
- Advertisement -

நமக்கு அமையக் கூடிய வாழ்க்கை நல்ல வாழ்க்கையாக அமைவதற்கும், பிரச்சனைகள் சிறந்த வாழ்க்கையாக அமைவதற்கும் நாம் செய்த கர்ம வினைகள் தான் முதல் காரணம். உங்கள் கர்மாவை பொறுத்து தான் உங்களுடைய வாழ்க்கை சூழலும் இருக்கும். நிறைய பேர் குடும்பத்தில் இன்றைய சூழ்நிலையில் நிறைய பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. மாமியார்க்கு மருமகளை கண்டால் பிடிப்பது கிடையாது. மருமகளுக்கு மாமியாரைப் பார்த்தாலே வெறுப்பு. நாத்தனார், மச்சினன், தம்பியின் மனைவி, அண்ணனின் மனைவி என்று ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு குறை கூறிக் கொண்டு, ஒருவரை ஒருவர் வாழவிடாமல் பிரச்சனைகளை தூண்டி விட்டுக் கொண்டே இருப்பது. நிறைய பேருடைய வீடுகளில் நிலவி வரும் சூழ்நிலை இதுதானே.

family2

ஆனால், இதில் யார் மீது குறை உள்ளது என்று அலசி ஆராய்ந்து தீர்ப்பு சொல்ல பஞ்சாயத்திற்கு யாராவது ஒருவர் சென்றால் அவர்கள் அவ்வளவுதான். நடுவில் அவர்களுடைய தலை உருள ஆரம்பித்து விடும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வே கிடையாதா என்று கேட்பவர்களுக்காக ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரம் இந்த பதிவின் மூலம் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு ஒருசில விஷயங்களை கட்டாயமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

நீங்கள் ஒருவரை அடிக்கடி குறை சொல்லிக்கொண்டே திட்டிக் கொண்டே இருக்கும் பட்ச்சத்தில் உங்களுடைய புண்ணியத்தை, அவர்களுக்கு நீங்கள் தாரை வார்த்து கொடுப்பதற்கு சமம். அதாவது நீங்கள் ஒருவரை திட்டத்தட்ட ‘உங்களுடைய புண்ணியம் எல்லாம், நீங்கள் யாரை திட்டிக் கொண்டே இருக்கிறீர்களோ அந்த நபருக்கு போய் சேர்ந்து விடும்’. ‘உங்களிடம் யார் திட்டு வாங்கிக் கொண்டே இருக்கிறார்களோ, அவர்களுடைய பாவம் எல்லாம் கர்ம வினைகள் எல்லாம் உங்களை வந்து சேர்ந்துவிடும்’.

family

‘அடுத்தவர்களை திட்டி திட்டி உங்களுடைய பாவ கணக்கை நீங்கள் கூட்டிக்கொண்டே செல்கிறீர்கள்.’ ‘உங்களிடம் திட்டு வாங்கி வாங்கி உங்களுடைய எதிராளி, அவர்களுடைய பாவ கணக்கை, கர்மாவை கழித்துக் கொண்டே வருகிறார்கள்’. இதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வீர்கள் என்பது தெரியாது. ஆனால் இதுதான் உண்மை.

- Advertisement -

இனி யார் உங்களை திட்டினாலும், உங்கள் பாவம் குறைகிறது என்று மனதில் நினைத்துக் கொண்டு பதிலுக்கு அவர்களை எதுவும் பேசாதீர்கள். பொறுத்துப் போங்கள்.

women1

இது ஒரு பக்கமிருக்க ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டே இருக்கும் போது, ஒருவர் மற்றவரை திட்டும் போது, ஒருவர் மற்றவரின் மீது பழி சொல்லும்போது, அவரவருக்கு அவரவர் செய்யும் செயல் நியாயமானதாக இருக்கும். பொதுப்படையாக அந்த இடத்தில் யார் தவறு செய்கிறார்கள், யார் சரியாக நடந்துகொள்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது.

- Advertisement -

sombu

உங்கள் மனசாட்சிப்படி நீங்கள் எந்த தவறையும் செய்யாமல் இருந்தால், உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் மட்டும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய வேண்டும். இப்படி செய்தால் உங்கள் எதிரி நிச்சயமாக உங்கள் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள். உங்களுடைய சொந்த பந்தங்கள் யாரை நினைத்து வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். கட்டாயமாக உங்கள் பக்கம் நியாயம் இருக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அநியாயம் செய்து விட்டு பரிகாரத்தை செய்து, அதன் பின்பு பரிகாரம் பலன் அளிக்கவில்லை என்று சொல்லக்கூடாது.

sembu-sombu-salt

நீங்கள் கிழக்கு பார்த்து அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சுத்தமான தண்ணீராக இருக்கட்டும். உங்களுடைய உள்ளங்கைகளில் ஒரு கைப்பிடி அளவு உப்பு, வரமிளகாய் 3, பெருங்காயப்பொடி, வெந்தயம், மிளகு, சீரகம், மஞ்சள் தூள், இந்த நான்கு பொருட்களிலிருந்து ஒவ்வொன்றிலும் அரை ஸ்பூன் அளவு எடுத்து கல் உப்புடன் வைத்து, உங்கள் தலையை மூன்று முறை வலப்புறமாக சுற்றி கையில் இருக்கும் பொருட்களை உங்கள் முன்பு உள்ள தண்ணீரில் கரைத்து விடுங்கள். (உங்கள் தலையை சுற்றும் போது, உங்களை யார் உங்களை யார் திட்டிக் கொண்டே இருக்கிறார்களோ, உங்களிடம் யார் சண்டைக்கு வந்துகொண்டே இருக்கிறார்களோ, அந்த நபரின் பெயரை மனதார நினைத்துக்கொள்ளுங்கள்.)

dry-chilli-milagai

இந்த தண்ணீரை கொண்டு போய் அப்படியே கால் படாத இடத்தில் வீட்டுக்கு வெளியே கொட்டி விடுங்கள். அவ்வளவு தான். வாரத்தில் ஒருநாள் உங்களுக்கு எப்போது சவுகரியமோ, இதே போல 5 வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால், உங்களைப் பற்றி குறை சொல்லி உங்களை திட்டி கொண்டே இருப்பவர்கள் வாய் அடையும்.

பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு கைகால்களை முகத்தை அலம்பிக் கொண்டு பூஜை அறைக்குள் சென்று உங்களுடைய குலதெய்வத்தை வேண்டி விபூதியை நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் இந்த பரிகாரத்தைற்க்கான பலனை உங்களால் பெற முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -