பரம்பரை பரம்பரையாக தொடரும் குடும்ப கஷ்டம் நீங்க பரிகாரம்

amman3
- Advertisement -

சில பேருடைய குடும்பத்தில் எல்லாம் சில கஷ்டங்கள் பரம்பரை பரம்பரையாக தொடரும். நமக்கு முன் வாழ்ந்த முன்னோர்களும் அதே கஷ்டத்தை அனுபவித்து இருப்பவர்கள். அந்த கஷ்டம் இப்போது நம்முடைய குடும்பத்தை தொடரும். நம்முடைய பிள்ளைகளுக்கும் அந்த கஷ்டம் வந்து சேர்ந்திருக்கும். இப்படி யாரோ ஒருவர் செய்த தவறுக்காக, கர்ம வினைக்காக நம்முடைய பரம்பரையே பாதிக்கப்பட்டிருக்கும்.

இப்படி பின் தொடரக்கூடிய அந்த கஷ்டத்திலிருந்து நாம் விடுபட ஒரு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உதாரணத்திற்கு கொள்ளு பாட்டனுக்கு இருந்த நோய், நம்முடைய அப்பாவுக்கு இருக்கும். நம்முடைய அப்பாவுக்கு இருந்த அந்த நோய் நம்முடைய பிள்ளைக்கும் இருக்கும். இது பரம்பரை வியாதியால் நம் குடும்பத்திற்கு இருக்கும் கஷ்டம். சில குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக கடன் சுமை இருக்கும்.

- Advertisement -

சில குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக யாராவது ஒருவருக்கு திருமணம் நடக்காமல் இருக்கும். ஒருவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும். இப்படி நம் குடும்பத்திற்கு என்று ஒரு சில கஷ்டங்கள் தொடரும். அல்லது ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு சின்ன குழந்தை இறக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இப்படி உங்களுடைய குடும்பத்திற்கு எந்த கஷ்டம் இருந்தாலும், பின் சொல்லக்கூடிய வழிபாட்டை மறக்காமல் செஞ்சிடுங்க. அந்த கஷ்டம் அன்றோடு உங்களை விட்டு போய்விடும்.

பரம்பரை பரம்பரையாக தொடரும் கஷ்டம் நீங்க வழிபாடு

இந்த வழிபாட்டை நீங்கள் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று செய்ய வேண்டும். அதிலும் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் உத்திரட்டாதி நட்சத்திரம். வியாழக்கிழமையுடன் சேர்ந்து வரும் உத்திரட்டாதி நட்சத்திரம் வந்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. அப்படி உங்களுக்கு நாட்கள் கிடைக்கவில்லை. வேறு கிழமைகளில் தான் உத்திரட்டாதி நட்சத்திரம் வந்திருக்கிறது இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் என்றால் யோசிக்கவே யோசிக்காதீங்க.

- Advertisement -

எந்த கிழமையில் உத்தரட்டாதி நட்சத்திரம் வந்தாலும் இந்த வழிபாட்டை உங்க வீட்டில் செஞ்சிருங்க. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தொடங்கிய இந்த வழிபாட்டை 5 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த விளக்கை பூஜை அறையில் ஏற்ற வேண்டும். உத்திரட்டாதி நட்சத்திரம் அன்று காலை நேரத்தில் ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்.

சர்க்கரை பொங்கல் செய்து ஒரு தாம்பல தட்டின் மேல் வைத்து, அந்த சர்க்கரை பொங்கலுக்கு மேல் கொஞ்சமாக அருகம்புல் வைக்கவும். இரண்டு வாழைப்பழம் அல்லது அதற்கு மேற்பட்ட வாழைப்பழங்கள் வைக்கலாம். இப்படி பூஜை அறையை அலங்காரம் செய்துவிட்டு, உங்களை பின்தொடரும் அந்த கஷ்டம் உங்களை விட்டு நீங்க வேண்டும் என்று மனம் உருகி குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு, தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வழிபாட்டின் போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருப்பது சிறப்பு. முடியாதவர்கள் குடும்பத் தலைவனோ தலைவியோ இந்த வழிபாட்டை செய்யுங்கள். பிறகு இந்த சர்க்கரை பொங்கல் வாழைப்பழம், அருகம்புல், அத்தனையும் கொண்டு போய் அப்படியே பசு மாட்டிற்கு சாப்பிட கொடுத்து விட வேண்டும். வழிபாடு இவ்வளவுதான். உத்திரட்டாதி நட்சத்திரம் அன்று நீங்கள் தொடங்கிய இந்த வழிபாட்டை தொடர்ந்து ஐந்து நாட்கள் செய்யணும்.

அதுபோல பிளான் பண்ணிக்கோங்க. ஐந்து நாட்களில் ஒரு நாள் கூட இடைவெளி விடக்கூடாது. ஐந்து நாளும் மேல் சொன்ன இதே வழிபாட்டு முறையைத்தான் பின்பற்றி பசுமாட்டிற்கு அந்த சக்கரை பொங்கல் வைக்க வேண்டும் சர்க்கரை பொங்கல் செய்வது மட்டும் கொஞ்சம் நிரைவாக செய்யுங்கள். ஏனென்றால் பசு மாட்டிற்கு நாம் அதை கொடுக்க போகின்றோம். ரொம்ப குறைவாக செய்யாமல் கால் கிலோ பச்சரிசியிலாவது சர்க்கரை பொங்கல் செய்து வைக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கஷ்டப்படாமல் பணத்தை சம்பாதித்து சேர்க்க பரிகாரம்

வழிபாடு இவ்வளவுதான் உத்திரட்டாதி நட்சத்திரத்தை தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்த விளக்கை ஏற்றி குலதெய்வத்தை வேண்டி இந்த சர்க்கரை பொங்கலை பசு மாட்டிற்கு கொடுத்து விட்டால், உங்கள் குடும்பத்தை தொடரும் அந்த பிரச்சனைக்கு ஒரு விடிவு காலத்தை அந்த இறைவன் கொடுத்து விடுவார். பிறகு உங்களுடைய குடும்பம் அந்த பிரச்சனையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு நிம்மதி அடையும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -