குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் நீங்கி ஒற்றுமையோடும், அன்போடும் இருக்க இந்த 5 விஷயங்களை கடைப்பிடித்தால் போதுமே!

vilakku-murugan-fight
- Advertisement -

குடும்பம் என்றால் அங்கு பிரச்சனைகளும் இருக்க தான் செய்யும். யார் வீட்டில் தான் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள்? ஏதாவது ஒரு சூழ்நிலையில் சண்டை, சச்சரவுகள் வரத்தான் செய்யும். அவற்றையெல்லாம் அனுசரித்துச் செல்வதே வாழ்க்கை. ஆனால் ஒரு சில வீடுகளில் எல்லாம் சதா சண்டை போட்டுக் கொண்டே மன நிம்மதியை இழந்து கொண்டு இருப்பார்கள். பெற்றோர்களுடைய சண்டை, பிள்ளைகள் வரை பாதிக்கும். இது போன்று இருக்கும் குடும்பங்களில் இந்த 5 விஷயங்களை செய்தால் நிச்சயம் குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும் நிலவும். அத்தகைய எளிய பரிகாரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

sani bagavaan

குடும்ப ஒற்றுமைக்கு முதலில் குடும்பத்தில் இருக்கும் யாருடைய ஜாதகத்தில் ஆவது சனி தோஷம் இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும் அல்லது சனி பகவான் கெடு பலன்களை கொடுக்கிறாரா? என்பதையும் கவனிக்க வேண்டும். அப்படி யாருக்காவது சனி தோஷம் இருந்தால் சனிக் கிழமைகளில் சனி பகவான் வழிபாடு செய்வது, குடும்ப ஒற்றுமையை நிலைநாட்ட செய்யும். அவருக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது, தயிர் சாதம் தானம் செய்வது போன்றவற்றை பரிகாரமாக மேற்கொள்ளலாம்.

- Advertisement -

அங்காரகன் கோபத்திற்கு காரகனாக விளங்குகிறார். எனவே குடும்பத்தில் ஒற்றுமை இல்லை என்றால் முருகன் வழிபாடு செய்வதும், அவருடைய வேல் வழிபாடு செய்வதும் சிறந்த பலன்களை கொடுக்கும். வேல் வைத்திருப்பவர்கள் உங்கள் விரல் அங்குல அளவை விட குறைவான அளவில் வைத்திருப்பது தோஷம் இல்லை. அது போல் வேல் வைத்திருப்பவர்கள் கட்டாயம் மாதம் இருமுறையாவது அதற்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். சஷ்டியில் வேல் வழிபாடு செய்பவர்கள் உடைய இல்லத்தில் சண்டைக்கும், சச்சரவிற்கும் இடமிருக்காது. எனவே வேல் வழிபாடு செய்து குடும்ப ஒற்றுமையை நிலை நாட்டலாம்.

vel

உங்களுடைய வீடு சொந்த வீடாக இருந்தால் வீட்டின் மீது பெரிய கட்டிடங்கள் உடைய நிழல் அல்லது கோபுரத்தின் நிழல் விழுமாறு இருக்கிறதா? என்பதை கவனியுங்கள். அப்படி கட்டிடங்கள், கோபுரங்கள் நிழல் உங்கள் வீட்டின் மீது விழும்படி அமைந்து இருந்தால் நிச்சயம் அந்த வீட்டில் சண்டை, சச்சரவிற்கு பஞ்சமே இருக்காது. எலியும், பூனையுமாக தான் கணவனும், மனைவியும் இருப்பார்கள். எனவே இது போன்ற இல்லங்களில் பெரிய அளவிலான நிழல் தரும் மரங்களை வளர்க்க வேண்டும். இம்மரம் அந்த நிழலை தடுத்து நிறுத்துமாறு செய்து விட்டால் உங்களுடைய பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று நினைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

மேலும் வீட்டின் வாசலில் மஞ்சளில் கோலம் போட்டு அதன் மீது வேப்பிலைகளை வைத்து வெள்ளிக் கிழமையில் இரண்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எவ்வளவு சண்டை, சச்சரவுகள் இருந்தாலும் அவைகள் சுலபமாக நீங்கி ஒற்றுமையுடனும், அன்புடனும் இருக்கக்கூடிய சூழல் உருவாகும்.

kanji-periyava

காஞ்சி பெரியவர் போன்ற மகான்கள் உடைய பக்தர்களாக இருந்தால் அவர்களுடைய படங்களை வைத்து வழிபடலாம் மேலும் சித்தர்கள் வழிபாடு செய்வது, குலதெய்வ வழிபாடு செய்வது போன்ற வழிபாடுகள் மூலமும் குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் நீக்கி, உங்கள் இல்லம் இனிய இல்லமாக மாற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -