குடும்ப பிரச்சினை தீர பரிகாரம்

parangikai
- Advertisement -

வீட்டிற்கு வெளியே ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் வீட்டிற்குள் மனநிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருந்தால்தான் அந்த குடும்பம் குடும்பமாக இருக்கும். அதை தவிர்த்து விட்டு குடும்பத்தில் இருக்கும் நபர்கள் எப்போதும் சண்டை சச்சரவுடன் இருந்தால் வீட்டிற்குள் வருவதற்கு பிடிக்காமல் போய்விடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பரங்கிக்காயை வைத்து எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு வகையான பிரச்சனைக்கும் நவகிரகங்களே காரணமாக திகழ்கின்றன. அந்த நவகிரகங்களுக்குரிய பொருட்களை நாம் தானமாக வழங்குவதன் மூலம் அந்த பிரச்சினைகளில் இருந்து நம்மால் எளிதில் வெளிவர முடியும். அதிலும் குறிப்பாக நவகிரகங்களுக்குரிய பொருட்களை அன்னதானத்திற்காக வழங்குவதன் மூலம் பல மடங்கு பலன்களை நம்மால் பெற முடியும்.

- Advertisement -

குடும்பம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் குரு பகவானின் அருள் வேண்டும். அப்படிப்பட்ட குரு பகவானின் அருளை பெற்ற பொருளாக பரங்கிக்காய் திகழ்கிறது. அதாவது மஞ்சள் பூசணிக்காய் திகழ்கிறது. இந்த பரங்கிக்காயை வைத்து செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

இந்த பரிகாரத்தை குரு பகவானிற்குரிய கிழமையான வியாழக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். ஒரு முழு பரங்கிக்காயை வாங்கிக் கொள்ள வேண்டும். அதாவது மஞ்சள் பூசணியை வாங்கிக் கொள்ள வேண்டும். அதை நன்றாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்ல வேண்டும்.

- Advertisement -

அந்த சிவாலயத்தில் நடக்கக்கூடிய அன்னதானத்திற்கு எடுத்துச் சென்ற பரங்கிக்காயை தானமாக தர வேண்டும். முதல் நாளே பரங்கிக்காயை வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டு மறுநாள் காலையில் கோவிலுக்கு கொண்டு போய் கொடுக்க வேண்டும். அருகில் இருக்கும் சிவாலயத்தில் அன்னதானம் நடைபெறாமல் இருந்தால் அந்த கோவில் அர்ச்சகர் இடம் இந்த பரங்கிக்காயை தானமாக தர வேண்டும்.

இவை இரண்டுமே செய்ய இயலாதவர்கள் வறுமையான சூழ்நிலையில் இருக்கும் அந்தணருக்கு தானமாக தர வேண்டும். இப்படி தொடர்ந்து ஏழு வாரங்கள் இந்த தானத்தை தர வேண்டும். ஒரே கோவிலுக்கு தான் தானமாக தர வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. தங்களால் இயன்றால் வேறு வேறு கோவில்களுக்கு கூட சென்று தானமாக தரலாம். வேறு நபர்களுக்கும் தானமாக தரலாம். ஆனால் அர்ச்சகர் அல்லது அந்தணர் இவர்கள் இருவருக்கு மட்டும் தான் தானமாக தரவேண்டும். மற்றவர்களுக்கு தானமாக தரக்கூடாது.

- Advertisement -

இவ்வாறு செய்வதன் மூலம் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீரும். சண்டை சச்சரவுகள் நீங்கும். விபத்து ஏற்படுவது தவிர்க்கப்படும். ஒற்றுமை மேம்படும். வாய் தகராறுகள் நீங்கும். வீட்டிற்குள் ஒருவித நேர்மறை ஆற்றல்கள் உண்டாகி அனைவரும் ஒற்றுமையிடனும் சந்தோஷத்துடனும் வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே: வாஸ்து தோஷம் நீக்கும் ஸ்படிகக்கல்

இந்த பரங்கிக்காயை நாம் தானமாக சிவாலயத்திற்கு தருவதன் மூலம் நம்முடைய குடும்பம் ஒற்றுமையுடனும், நிம்மதியுடனும் வாழும் என்பதை உணர்ந்து அன்னதானத்திற்காக தானம் செய்வதை வழக்கமாகக் கொள்வோம்.

- Advertisement -