உங்கள் குடும்பம் தலைதூக்க முடியாமல் போக என்றோ யாரோ விட்ட சாபமாக கூட இருக்கலாமே! இதற்கு பரிகாரம் என்ன தெரியுமா?

bramma-pakku
- Advertisement -

சாபம் என்பது சாதாரணமாக வார்த்தைகளால் ஒருவர் மற்றவர்களுக்கு கூறுவது கிடையாது. உண்மையிலேயே ஒருவர் இன்னொருவரால் அனைத்தையும் இழந்து, எதுவும் செய்ய முடியாமல், அத்தனை வேதனைகளையும் அனுபவிக்கும் பொழுது வயிற்றெிச்சலுடன் சொல்லப்படும் அந்த வார்த்தைகளுக்கு அதீத சக்தி உண்டு. இத்தகைய வார்த்தைகள் சாபமாக அந்த மனிதனுக்கு மாறும் பொழுது அது அவனை மட்டுமல்லாது, அவனை சார்ந்த அவனுடைய அடுத்த சந்ததியினர் வரை பயணம் செய்கிறது. இதனால் நாம் நல்லதையே செய்தாலும் நம் வாழ்க்கையில் சில சமயங்களில் நல்லது நடக்காமல் போய் விடுகிறது. இத்தகைய சாப நிவர்த்தி பெற செய்யக்கூடிய எளிய பரிகாரம் என்ன? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் மேற்கொண்டு தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

sabam

சாபங்கள் பதிமூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. ஆனால் இன்னும் எத்தனையோ சாபங்கள் எண்ணில் அடங்காமல் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. இத்தகைய சாபங்களால் நம் குடும்பத்தில் எந்த ஒரு விஷயமும் நல்லபடியாக நடக்காமல் போகலாம். குடும்பத்தில் திருமண தடைகள் ஏற்படலாம். யாராவது ஒருவருக்கு திருமணம் தள்ளிக் கொண்டே செல்லும் பொழுது இது போன்ற சாப நிவர்த்தி செய்வது சிறந்த பரிகாரமாக அமையும்.

- Advertisement -

திருமணம் ஆகியிருந்தாலும் அவர்களுக்கு பிள்ளை வரம் உண்டாவதில் தடை இருக்கும். வேலை கிடைப்பதில் தடை இருக்கும். இப்படி ஏதாவது ஒரு தடைகள் தொடர்ந்து ஒரு குடும்பத்தில் வந்து கொண்டு இருந்தால் அந்த குடும்பம் தலைதூக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்தால், அங்கு இது போன்ற சாபங்கள் யாரோ, என்றோ விட்ட சாபம் பின் தொடர்வதாகவும் கொள்ளலாம்.

munivar

யாரோ எதற்கோ விட்ட சாபங்கள் இன்று ஏன் நம்மை ஆட்டிப் படைக்க வேண்டும்? என்று நீங்கள் கேள்வி கேட்கலாம் ஆனால் சந்ததியினர் என்பது லாப, நஷ்டங்களை அனுபவிப்பதற்கு தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் செய்த சாபம் பிள்ளைகளை சாரும் என்பதும் நியாயம் இல்லை தான் ஆனால் அவர்கள் சொத்தில் உங்களுக்கு பங்கு இருக்கும் பொழுது அவர்களுடைய பாவத்திலும் பங்கு இருப்பது நியாயம் தானே? அது போல ஒரு விஷயம் தான் இதுவும்.

- Advertisement -

இந்த சாபத்தை நிவர்த்தி செய்து கொள்ள பூஜை அறையை சுத்தம் செய்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு இஷ்டமான நல்லதொரு வெள்ளிக்கிழமையில் இதனை செய்வது சிறப்பு. பூஜை அறையில் ஒரு தாம்பூலத் தட்டை வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மீது சுத்தமான சிகப்பு நிற பட்டுத் துணியை விரித்து கொள்ளுங்கள். அதன் மீது பிரம்ம அம்சமாக விளங்கும் கொட்டைப் பாக்கை மூன்று என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். பிரம்மனுக்கு மூன்று தலைகள் இருப்பதால் 3 கொட்டைப் பாக்குகள் வைக்க வேண்டும். நம் தலையெழுத்தை மாற்ற கூடியவர் அவரே, எனவே கொட்டைப் பாக்கை வைத்து இப்பரிகாரத்தை செய்வது பலன் தரும்.

kottai-pakku

பின்னர் ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சரிசியை எடுத்து குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சமாக போடுங்கள். பின்னர் குங்குமம் கொஞ்சம் போடுங்கள். இப்படி அனைவருடைய கைகளாலும் பட்ட இந்த பொருட்களை ஒரு முடிச்சாக கட்டி அதனை உங்கள் பூஜை அறையில் ஏதாவது ஓரிடத்தில் மறைவாக வைத்துக் கொள்ளுங்கள். சுமார் ஒரு வருடம் கழித்து அந்த முடிச்சை கை படாமல் எடுத்து ஓடும் தண்ணீரில் விட்டு விட வேண்டும். ஓடும் தண்ணீரில் மட்டுமே விட வேண்டும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்து வருவதன் மூலம் நம் குடும்பத்தில் இருக்கும் சாப தோஷங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -