குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்பட பரிகாரம்

kuladheivam
- Advertisement -

நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் பலரின் விருப்பம். அந்த நிம்மதியான வாழ்க்கையை அனைவரும் தேடுவது அவர்களின் இல்லத்தில் தான். வீட்டை விட்டு வெளியில் செல்பவர்கள் பலதரப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஆளாகி நிம்மதியாக வந்து இருக்க வேண்டும் என்று நினைப்பது அவர்களின் இல்லத்தில் தான். அப்படி நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் வீட்டில் ஏதாவது ஒரு ரூபத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் அல்லது தடைகளும் தடங்கல்களும் ஏற்பட்டாலும் அதனால் பெரிதும் பாதிக்கப்படுவது அந்த குடும்பத்தில் இருக்கும் நபர்கள்தான். அப்படிப்பட்டவர்கள் தங்களின் குலதெய்வ கோவிலுக்கு எதை தானமாக தந்தால் தங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி நல்ல நிம்மதியான முன்னேற்றமான வாழ்க்கை அமையும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகளால் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த எதிர்மறை சக்திகள் பிறராலும் ஏற்படலாம் அல்லது அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய சில பிரச்சனைகளாலும் ஏற்படலாம். எதனால் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரித்தது என்று ஆராய்வதோடு மட்டுமல்லாமல் அதை விரட்டி அடிக்க என்ன செய்ய வேண்டும் என்றும் தான் யோசிக்க வேண்டும். அப்படி யோசிக்கும் பொழுது நம்முடைய குலத்தை காக்கும் தெய்வத்தால் மட்டும்தான் நம்முடைய இல்லத்தையும் காக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் குலதெய்வ கோவிலுக்கு போய் வழிபட வேண்டும்.

- Advertisement -

அப்படி குலதெய்வ கோயிலுக்கு போகும் பொழுது வீட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கு குத்து விளக்கை தானமாக தர வேண்டும். இரண்டு குத்து விளக்குகளை வாங்கி அதை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு மலர்கள் சூட்டி சுத்தமான பசு நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றிய படியே குலதெய்வ கோவிலில் தானமாக தர வேண்டும். அந்த குத்து விளக்கை அங்கு இருக்கும் அச்சகர்கள் தெய்வத்திற்கு பக்கவாட்டில் வைக்கும் பொழுது நம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி முன்னேற்றமான வாழ்க்கை அமையும் என்பது உண்மை.

இப்படி குத்து விளக்கை தானம் தர இயலாதவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் ஆராத்தி தட்டை எடுத்து அதில் சிறிது மஞ்சளை போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதற்கு நடுவில் சிறிய அகலில் நெய் தீபம் ஏற்றி வீட்டு வாசலுக்கு வெளியில் வைக்க வேண்டும். அதாவது நிலை வாசலுக்கு வெளியில் வைக்க வேண்டும்.

- Advertisement -

நிறைவாசலுக்கு வெளியில் வைக்க வசதி இல்லாதவர்கள் நிலை வாசலை திறந்தவுடன் இருக்கும் இடத்தின் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தினமும் தீபம் ஏற்றி வர வீட்டில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள், தடைகள், தடங்கல்கள், தாமதங்கள் என்று என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ அவை அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் நிம்மதியும் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: முன் கோபம் குறைய முருகன் வழிபாடு

குலதெய்வம் தெரியாதவர்கள் தங்களின் இஷ்ட தெய்வத் கோயிலுக்கு குத்துவிளக்கை தானமாக தரலாம். நம்பிக்கையுடன் செய்யக்கூடிய எந்த பரிகாரமாக இருந்தாலும் அந்த பரிகாரம் கண்டிப்பான முறையில் வெற்றி அடையும். நம்முடைய பிரச்சினைகளை தீர்க்கும்

- Advertisement -