குலதெய்வத்தின் கோபத்தைத் தணிக்க இந்த தினத்தில் வழிபாடு செய்யுங்கள்.

kula-dheivaml

பொதுவாகவே ஒரு குடும்பம் தன் குலதெய்வத்தை மறப்பது என்பது மிகவும் தவறான ஒன்று. நம் வீட்டு குலதெய்வத்தை நாம் மறக்காமல் வழிபட்டால் தான் மற்ற தெய்வங்களின் ஆசீர்வாதம் கூட நமக்கு கிடைக்கும். குலதெய்வத்தை வழிபடாமல் மற்ற தெய்வத்தை வழிபட்டால் அதில் நமக்கு பலன் கிடைக்குமா? என்று கேட்டால் அது சந்தேகம்தான். எடுத்துக்காட்டாக ஒரு வீட்டில் கணவன், மனைவியின் பிறந்தநாளை மறந்தாலோ! மனைவி, கணவனின் பிறந்த நாளையோ அல்லது திருமண நாளை மறந்து விட்டாலோ! எவ்வளவு பிரச்சனை நடக்கின்றது. இப்படி இருக்க நம் குலத்தை காக்கும் குல தெய்வத்தை மறந்து விட்டோம் ஆனால் அது எவ்வளவு பெரிய குற்றம்? குலதெய்வத்தை மறந்துவிட்டால், அந்த தெய்வம் முழுமையாக நம்மை தண்டித்து விடும் என்பது அர்த்தமில்லை. குல தெய்வத்தை நாம் மறந்து விட்டோம் என்பதை உணர்த்துவதற்கு, சில சங்கடங்களை நமக்கு கொடுக்கும் அது ‘நீ குல தெய்வத்தை மறந்து இருக்கிறாய் என்பதை உணர்த்துவதற்காக தானே தவிர, உன்னை துன்பப் படுத்துவதற்காக இல்லை’. இப்படியாக நீங்கள் குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகி இருந்தால், இந்த சின்ன பரிகாரத்தின் மூலம் அதை நிவர்த்தி செய்து விடலாம். குலதெய்வத்தின் கோபத்தைத் தணித்து நம் குடும்பத்திற்கு நல்லது நடக்க இந்த சின்ன பரிகாரத்தைச் செய்தாலே போதும். அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

kuladheivam 1

நம்முடைய வீட்டில் புதியதாக ஒரு வேலையை தொடங்க வேண்டும் என்றால், முதலில் குலதெய்வத்தை தான் வழிபட வேண்டும். வீட்டில் திருமணம் வைத்திருந்தாலோ அல்லது வேறு ஏதாவது சுபகாரியங்களை நடத்த வேண்டியதாக இருந்தாலோ முதலில் குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வருவார்கள். இதன் அடிப்படையில் நாம் புதுவருடத்தில் காலடி எடுத்து வைக்கும் சித்திரை முதல் நாளன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று அவரவர் வீட்டு முறைப்படி அபிஷேக ஆராதனை செய்து படையலிட்டு குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று. சித்திரை மாத பௌர்ணமி தினத்தில் குலதெய்வத்தை நினைத்து வழிபட்டால், நம் குலத்தை, குலதெய்வம் எந்த கஷ்டமும் ஏற்படாமல் காக்கும் என்பது உண்மையான ஒன்று. மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் குல தெய்வத்தை வழிபடுவது மிகவும் சிறந்தது. நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் எல்லாம் நீங்க பங்குனி மாத பௌர்ணமி தினத்தில் குல தெய்வத்தை வழிபட வேண்டும். இதன் மூலம் நம் குடும்பத்தில் ஒற்றுமையும் அதிகரிக்கும்

அவரவர் சொந்த ஊரில் தான் அவரவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை. வேலை தேடி, பிழைப்பைத் தேடி, மற்ற ஊர்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. பல பேருக்கு குலதெய்வம் தங்களது சொந்த ஊரில் இருக்கும். பலபேருக்கு வெகு தூரத்தில் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் குலதெய்வத்தை நேரில் சென்று வழிபடுவதில் சில சிரமங்கள் இருக்கும். எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும்.

kula dheivam

சரி. குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் என்ன செய்யலாம்? அதற்கும் நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். பங்குனி மாத பவுர்ணமி, சித்திரை மாத பௌர்ணமி இந்த இரண்டு தினங்களிலும் உங்களது வீட்டில் குலதெய்வத்தின் திருவுருவப் படத்தை வைத்து, உங்களது வீட்டு முறைப்படி எப்படி படையல் வைத்து பூஜை செய்கிறார்களோ! அதே போல் பூஜை செய்துவர வேண்டும். ‘சூழ்நிலை காரணமாக என்னால் உன் கோவிலுக்கு வர முடியவில்லை. உன்னை நினைத்து பூஜை புனஸ்காரங்களை மனதார என் வீட்டிலேயே செய்கின்றேன். நான் அறியாமல் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன்.’ என்றவாறு குலதெய்வத்தை வழிபட்டாலே போதும். உங்களுக்கு குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தோடு, உங்களது முன்னோர்களின் ஆத்மாக்களும் உங்களை ஆசீர்வதிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். முடிந்த வரை வருடத்திற்கு ஒருமுறை என்ற கணக்கு கூட பார்க்காமல் உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் குலதெய்வக் கோவிலுக்கு சென்று வந்தாலும் அதில் எந்த ஒரு தவறும் இல்லை. அப்படி கோவிலுக்கு செல்லும் போது அண்ணன், தம்பி, உற்றார் உறவினர்களை சேர்த்துக்கொண்டு குலதெய்வக் கோவிலுக்கு செல்வது என்பது மிகவும் சிறப்பான ஒன்று.

இதையும் படிக்கலாமே
தசாவதாரத்தின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தின் அதிசய வைக்கும் உண்மைகள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kula dheivam. Kula deivam arul pera Tamil. Kula deivam valipadu Tamil. Kula deivam vazhipadu.