குலதெய்வத்தின் அருள் கிடைக்க வழிபாடு

kula dheivam dheepam
- Advertisement -

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் நிம்மதியான வாழ்க்கையும் வாழ வேண்டுமெனில் அங்கு குலதெய்வத்தின் அருள் கட்டாயமாக இருக்க வேண்டும். குலதெய்வத்தின் அருள் இல்லாது போனால் நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது என்பது ஆணித்தரமான உண்மை. ஆகையால் தான் நம்முடைய வழிபாட்டு முறைகளில் குலதெய்வ வழிபாட்டிற்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இப்படியான குலதெய்வத்தின் அருள் அத்தனை எளிதில் நமக்கு கிடைத்து விடாது. அதற்கான வழிபாடுகளை முறைப்படி நாம் செய்ய வேண்டும். அப்படி வழிபட்டும் நம்முடைய பிரச்சனைகள் குறையவில்லை என்றால் குலதெய்வம் அருள் நம் வீட்டில் இல்லை என்று தான் அர்த்தம் அது என்ன காரணமாக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது நம் முன்னோர்களின் ஏற்பட்ட காரணமாகவும் இருக்கலாம்.

- Advertisement -

எப்படி இருப்பினும் குலதெய்வத்தின் அருள் நமக்கு அவசியம் தேவை அந்த அருள் கிடைக்க செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம் இந்த வழிபாட்டை குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் கூட செய்யலாம் அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குலதெய்வ அருள் கிடைக்க தேங்காய் தீபம்

பொதுவாக இந்த தேங்காய் தீபம் வாராகி, பைரவர் போன்று அதை உக்கிரமான தெய்வங்களுக்கு ஏற்றுவதை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் குலதெய்வ வழிபாட்டிற்கும் இந்த தேங்காய் தீபம் நல்ல ஒரு பலனை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு நீங்கள் 5 தேங்காயை வாங்கி உடைத்து உடைத்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து 9 தேங்காய் மூடிகளை மட்டும் தனியாக எடுத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக இந்த தேங்காயில் சுத்தமான பசு நெய் வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் குலதெய்வ ஆலயம் அருகில் இருந்தால் கட்டாயமாக ஆலயத்திற்கு சென்று இந்த தீப வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ஒரு வேளை வெகு தொலைவில் உள்ளது என்றால் தெய்வத்தை நினைத்து வீட்டிலே கூட இந்த தீபத்தை ஏற்றலாம். 9 தேங்காய் மூடிகளையும் வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி விடுங்கள்.

நெய்வேதியமாக உங்கள் குல தெய்வத்திற்கு எதை செய்து படைப்பீர்களோ அதை வைத்து வழிபாடு செய்யுங்கள். இந்த தீபம் எறியும் போது குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்று பரிபூரணமாக வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் குலதெய்வம் ஆண் தெய்வமாக இருப்பின் அமாவாசை தினத்தில் இந்த தீபத்தை ஏற்றுங்கள். பெண் தெய்வமாக இருப்பின் பௌர்ணமி தினத்தில் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த தீப வழிபாட்டை 9 பௌர்ணமி அல்லது 9 அமாவாசை தினங்களில் தொடர்ந்து மேற்கொள்ளும் பொழுது குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களும் மனதார உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு அருள் வேண்டும் என்று நினைத்து ஏற்றங்கள் நிச்சயம் பலன் உண்டு.

இதையும் படிக்கலாமே: பண வரவை தரும் பஞ்சமி வழிபாடு

இந்த பரிகார தீப முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -