வெள்ளிக்கிழமை இந்த விளக்கை ஏற்றினால், குலதெய்வத்தின் ஆசிர்வாதத்துடன் ஐஸ்வர்யமும் சேரும்.

amman vilakku
- Advertisement -

எந்த தெய்வத்தை நாம் வணங்கினாலும் குலதெய்வத்தின் அருள் இருந்தால்தான் நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் குலதெய்வம் நம்மை காப்பாற்றும். அப்படிப்பட்ட குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை நாம் பெறுவதற்கு குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை அன்றாடம் மேற்கொள்ள முடியுமா என்று கேட்டால் அது சந்தேகமே? இருப்பினும் நம் இல்லத்தில் எந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபட்டால் குலதெய்வத்தின் அருளோடு, ஐஸ்வரியமும் நமக்கு கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குலதெய்வம் அருள் பெற

குலதெய்வத்தின் அருள் நமக்கு கிடைத்தால் நமக்கு வரக்கூடிய தடங்கல்கள், பிரச்சினைகளில் இருந்து நம்மை காப்பாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது. ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்கு அது மட்டுமே பத்தாது அல்லவா? ஐஸ்வர்யமும் கிடைத்தால் தானே முழுமை அடையும். அவ்வாறு ஐஸ்வரியம் பெறுவதற்கும் அதே சமயம் குலதெய்வத்தின் அருளையும் பெறுவதற்கு உரிய அருமையான எளிய பரிகார முறையை பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் தெய்வ வழிபாட்டை மேற்கொள்வார்கள். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று மங்களகரமாக காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி தூப தீப ஆராதனை காட்டுவார்கள். அவ்வாறு பூஜையை மேற்கொள்ளும் பொழுது மாலை நேரத்தில் மகாலட்சுமி தாயாருக்கு என்று தனியாக ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும்.

அவ்வாறு ஏற்றும் தீபமானது அகல் விளக்கில் ஏற்றப்பட வேண்டும். மேலும் அந்த அகல் விளக்கில் சுத்தமான பசு நெய்யை ஊற்ற வேண்டும். இயலாதவர்கள் நல்லெண்ணையை ஊற்றலாம். மஞ்சள் நிற பஞ்சு திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இதே போல் மற்றொரு தீபத்தை நம் வீட்டு நிலை வாசலில் ஏற்ற வேண்டும். நிலை வாசலில் மகாலட்சுமி தாயார் இருப்பதாக ஐதீகம் என்றாலும் அதே நிலை வாசலில் தான் நம்முடைய குல தெய்வமும் வாசம் செய்கிறார்கள். நம்முடைய குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டு நிலை வாசலில் ஒரு அகலில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த தீபத்தை நாம் ஏற்றுவதற்கு முன்பாக அந்த அகலில் சிறிது கற்பூரத்தை நாம் சேர்த்து ஏற்ற வேண்டும். தீபமானது எரியும் பொழுது கற்பூரத்தின் வாசனை நம் இல்லம் முழுக்க பரவும். அவ்வாறு பரவும் அந்த வாசனைக்கு தெய்வத்தை ஈர்க்கக்கூடிய சக்தி இருப்பதால், நாம் எந்த தெய்வத்தை நினைத்து இந்த தீபத்தை ஏற்றுகிறோமோ அந்த தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: முருகன் கோவிலுக்கு இந்த நாளில் போய் வேண்டுதல் வைத்தால், கேட்ட வரம் உடனே கிடைக்கும். கேட்ட உதவியும் உடனே கிடைக்கும்.

மிகவும் எளிமையான இந்த தீபத்தை நம்முடைய இல்லங்களில் வெள்ளிக்கிழமை தோறும் மாலை நேரத்தில் பெண்கள் விளக்கேற்றுவதால் சகல ஐஸ்வரியங்களும் பெறுவதோடு குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தையும் நாம் பெற முடியும்.

- Advertisement -