குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு கிடைக்க வில்லையா? அப்படியானால் இந்த பொருள்களை வைத்து வணங்குங்கள் போதும். குலதெய்வத்தின் அருள் உங்கள் ஏழு தலைமுறைக்கும் கிடைக்கு

- Advertisement -

நாம் எத்தனை தெய்வங்களை எத்தனை விதமாக வழிபட்டாலும், ஒருவரின் குலத்தை காக்கக் கூடிய முதல் தெய்வம் அவர்களின் குலதெய்வம் தான். நாம் எந்த நல்ல காரியத்தை தொடங்கினாலும் முதலில் நம் குலதெய்வத்தை வணங்கிய பிறகு தான் தொடங்க வேண்டும். குல தெய்வத்தின் ஆசி நமக்கு முழுமையாக கிடைக்கா விட்டால் என்ன பூஜை புனஸ்காரங்கள் செய்தாலும், அதற்கான பலனை நம்மால் முழுமையாக அடைய முடியாது. அப்படிப்பட்ட குல தெய்வத்திதை வணங்கும் போது இந்த பொருட்களை வைத்து வணங்கினால் அவர்களின் ஆசீர்வாதம் அருளும் உங்களுக்கு உடனே கிடைக்கும் அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குலதெய்வம் என்ற ஒன்று இல்லாமல் யாரும் இருக்கவே முடியாது. குலதெய்வம் எதுவென்று தெரியாமல் வேண்டுமானால் இருக்கலாமே ஒழிய, கட்டாயமாக ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் இருக்கும். அந்த தெய்வத்தை தான் நாம் முதலில் வணங்க வேண்டும், வணங்குவதோடு மட்டும் இல்லாமல் அவர்கள் இருக்கும் இடத்திற்கு நாம் அடிக்கடி சென்றும் வர வேண்டும். நம் குலத்தையும் நம்மையும் காக்க வேண்டியது எப்படி குல தெய்வங்களின் கடமையோ, அதைப் போல அவர்கள் இருக்கும் இடங்களை தேடி சென்று அவர்களுக்கானதை செய்ய வேண்டியதும் நம் கடமை. இதை தொடர்ந்து செய்து வருபவர்கள் வாழ்க்கை எந்த சூழ்நிலையிலும் நொடிந்து விடாமல் நல்ல முறையில் வாழலாம். அப்படி செய்து வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு இதில் இருக்கும் உண்மை நன்றாகவே புலப்படும்.

- Advertisement -

இப்போது இந்த குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது என்ன எடுத்து செல்ல வேண்டும் அதை வைத்து எப்படி வணங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது நீங்கள் எடுத்து செல்ல வேண்டியது மூன்று பொருள்கள் ஒன்று ஒரு மண்பானை அடுத்து ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ நாட்டுச்சக்கரை (இதற்கு வெள்ளை சர்க்கரை பயன்படுத்தக் கூடாது நாட்டுச்சக்கரை நாம் பயன்படுத்த வேண்டும்). இந்த மூன்றையும் நம் குலதெய்வ கோவிலுக்கு எடுத்துச் சென்று அரிசியையும் நாட்டுச்சர்க்கரையும் நீங்கள் வாங்கிச் சென்று மண்பானையில் முழுவதுமாக வரும்படி நிரப்ப கொட்ட வேண்டும். அதற்கேற்றார் போல் பானை வாங்கிக் கொள்ளுங்கள். இவைகளை நிரப்பிய அந்தப் பானையை குலதெய்வத்தின் முன் வைத்து நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லபடியாக வாழ வேண்டும், அதற்கு உங்களின் அனுகிரகம் வேண்டும் என்று குல தெய்வத்தை வணங்கிய பிறகு, அந்த மண் பானையில் இருக்கும் அரிசியும், வெல்லத்தையும் உங்கள் குலதெய்வ கோவிலின் உள்ளே ஏதாவது ஒரு இடத்தில் எறும்புக்கு இந்த பொருட்களை வைத்து விட வேண்டும்.

எறும்புகள் இந்த அரிசியையும் நாட்டுச்சர்க்கரை எடுத்துச் சென்று தங்கள் இருப்பிடத்தில் வைத்துக் கொண்டு உண்ணும். எறும்புகள் அந்த அரிசியை உண்ணும் நேரத்தில் எல்லாம் இந்த உணவை வைத்தவரும் அவர் குடும்பம் ஏழு தலைமுறைக்கு நன்றாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிவிட்டு தான் இந்த அரிசியையும் சர்க்கரையும் சாப்பிடுமாம்.

- Advertisement -

இந்த அரிசியை மற்ற இடத்தில் வைப்பதை காட்டிலும் நம் குலதெய்வம் இருக்கும் இடத்தில் வைக்கும் போது அந்த வேண்டுதல் தினம் தினம் குலதெய்வத்தின் இடமே சேரும். இதன் மூலம் நம் குடும்பம் ஏழு தலைமுறையும் வாழும் என்பதில் துளியும் சந்தேகம் கொள்ள வேண்டாம். குலதெய்வம் கோவில் அருகில் இருந்தால் அடிக்கடி சென்று வரலாம். அதிக தூரத்தில் இருந்தால் வருடத்திற்கு மூன்று முறையாவது கட்டாயம் இந்த குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும். அப்படி சென்று வர வர தான் குடும்பம் இன்னும் நல்ல நிலைமைக்கு மாறும். இனி குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது மறக்காமல் இந்த பொருட்களைக் கொண்டு எறும்புக்கு வைத்து வாருங்கள்.

மனிதர்களுக்கு செய்யும் தானத்தை விட சிறந்தது இது போல சிறு சிறு உயிர்களுக்கு செய்யும் தானம் தான். இந்த ஒரு சிறிய விஷயத்தால் உங்கள் வருங்கால சந்ததியினர் வரை வளமாக வாழ்வார்கள் எனும் பொழுது இந்த தானத்தை தாராளமாக செய்யலாம் தானே, நீங்களும் இதை செய்து உங்கள் குடும்பமும் வருங்கால சந்ததியினர் வளமாக வாழுங்கள்.

- Advertisement -