குலதெய்வம் வீட்டிற்கு வர தீபம்

amman dheepam
- Advertisement -

நம்முடைய வழிபாடுகளில் தீபத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தீபத்தின் ஒளியிலே தெய்வம் வாசம் செய்வதாகத் தான் நாம் இன்றளவும் நினைத்து தீபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். அதே போல் ஒவ்வொரு வீட்டிலும் குலதெய்வ வழிபாட்டிற்கு முக்கிய பங்கு உண்டு. நம்முடைய வழிபாட்டின் ஆதாரமான குலதெய்வத்தையும் தெய்வத்தின் சொரூபமான தீபத்தையும் வைத்து எளிமையான ஒரு வழிபாட்டு முறையை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இந்த தீப வழிபாடானது குலதெய்வத்தை நம் வீடு தேடி வர வைக்க செய்வதோடு மட்டுமின்றி, குலதெய்வம் நம் வீட்டிற்கு வந்து விட்டதா? என்பதையும் நமக்கு உணர்த்தி விடும். அத்தகைய சக்தி வாய்ந்த இந்த குலதெய்வ தீப வழிபாட்டை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

குலதெய்வம் வீட்டிற்கு வர

இந்த தீப வழிபாட்டை செய்ய உங்கள் குல தெய்வத்திற்கு உகந்த நாள் எதுவோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாடு செய்யும் நாளன்று காலையில் எழுந்து குளித்து முடித்து பிரம்ம முகூர்த்த வேளையிலே பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு குலதெய்வ படம் இருந்தால் அதற்கு மணம் மிக்க மலர்களை சூட்டி அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

இப்போது ஒரு சிறிய மண் குடுவையில் தண்ணீரை முழுவதுமாக நிரப்பி விட்டு அந்த குடுவைக்கு முன் புறமாக ஒரு அகல் தீபம் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றுங்கள். அடுத்து இதே போல் இன்னொரு மண் குடுவை எடுத்து அதிலும் முழுவதுமாக தண்ணீரை நிறுத்தி அதில் பச்சை கற்பூரம், ஏலக்காய் போன்ற நறுமணமிக்க பொருட்களை போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து அதில் முழுவதுமாக பச்சரிசியை நிரப்பி அதன் மேல் நீங்கள் இரண்டாவதாக தயார் செய்து மண் குடிவை வைத்து விடுங்கள். இப்போது இரண்டு மண் குடுவைகள் தண்ணீருடன் தயாராக உள்ளது. ஒன்று குலதெய்வம் வந்து இறங்க, இன்னொன்று குலதெய்வத்திற்காக நாம் வைக்கும் தண்ணீர். நீங்கள் ஏற்றிய தீபத்தின் முன் அமர்ந்து உங்கள் குல தெய்வத்தின் பெயரை 108 சொல்லி முறை போற்றி என்ற வார்த்தையை சேர்த்து சொல்ல வேண்டும்.

அந்த நேரத்தில் குலதெய்வம் எங்கள் வீட்டில் வந்து தங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வேண்டுதலை கண் மூடிக் கொண்டே வேண்டுங்கள். உங்கள் வேண்டுதல் முடிந்த பிறகு அந்த குடுவை தண்ணீர் லேசாக அசைந்தாலும் அல்லது காற்று அடிக்கும் போது தீபம் கொஞ்சமும் அசையாமல் எரிந்தாலோ குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டது என்று அர்த்தம்.

- Advertisement -

இப்படி ஏதும் நிகழவில்லை என்றால் குலதெய்வம் இன்னும் உங்கள் வீட்டிற்கு வரவில்லை என்று பொருள். இப்படி நடக்கும் பட்சத்தில் நீங்கள் 48 நாட்கள் குலதெய்வத்திற்கு விரதம் இருந்து காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் முதலில் தயார் செய்தது போல ஒரே ஒரு பானை தண்ணீரை மட்டும் வைத்து தீபம் ஏற்றி குலதெய்வம் பேரை சொல்லி 108 முறை போற்றிகள் சொல்லி வணங்கி வர வேண்டும்.

அதன் பிறகு 48வது நாள் முதல் செய்தது போல பச்சரிசி வைத்து அதன் மேல் கலச சொம்பு தயார் செய்து வைத்து தீபம் ஏற்றி வழிபட்டால் நிச்சயம் உங்கள் வேண்டுதலுக்கு இணங்கி குலதெய்வம் நீங்கள் வீடு தேடி வந்து விடும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வருமானம் பெருக பரிகாரம்

குலதெய்வத்தை வீட்டிற்கு வர வைப்பது அத்தனை எளிமையான காரியம் அல்ல. அதை இவ்வளவு எளிதான ஒரு வழிபாட்டால் செய்ய முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -