பத்தே நிமிடத்தில் குலதெய்வம் உங்கள் இல்லத்தை தேடி வந்து அருள் புரிய ஒரு கைப்பிடி மண்ணை வைத்து இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். இது வரை வராமல் ஒதுங்கி நின்ற தெய்வம் கூட மனமிரங்கி வந்து அருள் புரியும்

kuladheivam
- Advertisement -

குலதெய்வத்தின் அருள் ஒரு குடும்பத்திற்கு முழுவதுமாக இருக்கும் எனில் அந்த குடும்பம் எப்பேர்பட்ட பிரச்சனைகளையும் எளிதில் வென்று நல்ல வளமான வாழ்க்கையை வாழும் இதில் எந்த வித சந்தேகமும் கிடையாது. ஆகையால் தான் நம் முன்னோர்கள் குலதெய்வ வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். நம்முடைய குலத்தைக் காக்க நம் மூதையர்கள் முதல் கொண்டு வணங்கிய இந்த தெய்வம் தான் நம்முடைய முதல் தெய்வமாகவும் இருக்கும். அப்பேர்ப்பட்ட குலதெய்வமே வீட்டிற்குள் இல்லை எனில் அந்த குடும்பத்தின் நிலை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. இந்த குலதெய்வம் எந்த சூழ்நிலையால் ஒதுங்கி இருந்தாலும் அவர்களை நம் வீட்டிற்கு வரவழைக்க ஒரு எளிய பரிகார முறையை ஆன்மீகம் நமக்கு தந்திருக்கிறது. அதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

குலதெய்வம் வீட்டிற்கு வர
இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு ஒரு கைப்பிடி மண் தேவை. இந்த மண் நாம் குடியிருக்கும் வீட்டின் எல்லைக்குள் இருக்க வேண்டும். வீட்டு வாசல் படிக்கு வெளியே சென்று எடுக்கக் கூடாது. ஒரு வேளை அப்பார்ட்மெண்ட்ஸ் போன்றவற்றில் குடியிருப்பவர்களுக்கு மண் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் வீட்டில் சேரும் மண்ணையே தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து ஒரு கைப்பிடி வரும் வரை வைத்திருந்து அதன் பிறகு இந்த பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த மண் ஒரு கைப்பிடி அளவு சேர்ந்த பிறகு இதில் மூன்று கிராம்பு, மூன்று காய்ந்த மிளகாய் கொஞ்சம் கல்லுப்பு அனைத்தையும் சேர்த்து இந்த மண்ணுடன் ஒரு சிகப்பு நிற துணியில் மூட்டையாக கட்டி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். இந்த மூட்டை உங்கள் பூஜை அறையில் மூன்று நாட்கள் வரை இருக்க வேண்டும். இந்த மண் எடுப்பது மூட்டை கட்டுவது பூஜை அறையில் வைப்பது இவையெல்லாம் எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம்.

மூன்று நாட்கள் கழித்து அன்றைய தினம் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இருள் சூழும் நேரத்தில் இந்த மண் மூட்டையை எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டு வாசலுக்கு வெளியே சென்று வீட்டை மூன்று முறை திருஷ்டி சுற்றுவது போல வீட்டை சுற்றுங்கள். அதன் பிறகு உங்கள் வீட்டில் இருந்து வடக்கு திசை எதுவோ அந்த திசையில் பத்து நிமிடம் செல்லுங்கள். இந்த பத்து நிமிட பயணம் நடந்தோ அல்லது ஏதோ வாகனத்தை பயன்படுத்தியோ செல்லலாம். 10 நிமிடம் நடந்த பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக இருந்தால் அங்கேயே இந்த மூட்டையை போட்டு விடுங்கள்.

- Advertisement -

ஒரு வேளை பத்து நிமிடம் நடந்த பிறகும் அப்படியான இடம் வரவில்லை என்றால் மேற்கொண்டு நீங்கள் அது போல ஆள் நடமாட்டம் இல்லாத இடம் வரும் வரை செல்லலாம். அங்கு இந்த மூட்டையை தூக்கி போட்ட பிறகு திரும்பி பார்க்காமல் உங்கள் வீட்டிற்கு வந்து விடுங்கள். வீட்டிற்கு வந்தவுடன் நேராக உள்ளே செல்லாமல் கை கால் முகம் அளவில் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டுக்குள் செல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: என்றென்றைக்கும் குறையாத செல்வ வளத்துடன் வாழ இந்த நான்கு தெய்வங்களையும் ஒன்றாக வணங்கக்கூடிய அற்புதமான இந்த நாளை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த நாளை தவற விட்டால் இது போல ஒரு நாள் கிடைப்பது அரிது.

இதை செய்தால் நீங்கள் நடந்து சென்ற அந்த பத்து நிமிடத்திற்குள்ளாகவே குலதெய்வம் நீங்கள் இருக்கும் இல்லத்தைத் தேடி வீட்டுக்குள் வந்திருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகார முறை மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. குலதெய்வம் எது என தெரியாதவர்களும் குலதெய்வத்தின் அருள் இல்லாதவர்களும் இந்த பரிகாரத்தை செய்யும் போது அவர்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பலன் அடையலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -