என்றென்றைக்கும் குறையாத செல்வ வளத்துடன் வாழ இந்த நான்கு தெய்வங்களையும் ஒன்றாக வணங்கக்கூடிய அற்புதமான இந்த நாளை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த நாளை தவற விட்டால் இது போல ஒரு நாள் கிடைப்பது அரிது.

lakshmi narachimmar varagi
- Advertisement -

புரட்டாசி மாதம் என்றாலே அது வழிபாட்டிற்குரிய மாதம் தான். இந்த மாதத்தில் சிறப்பு கூறிய தெய்வமாக நாம் வணங்குவது பெருமாளை. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சதுர்த்தி திதி, சுவாதி நட்சத்திரம், பஞ்சமி திதி இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வந்திருப்பது மிகவும் விசேஷமானது. அற்புதமான இந்த நாளை தவிர விடாமல் நம்முடைய துன்பம் கடன், பிரச்சனைகள் தீர்ந்து செல்வ செழிப்புடன் வாழ இவர்களை வணங்கி வழிபாடு செய்வது நல்லது. அப்படியான வழிபாட்டை எளிதாக எப்படி செய்வது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

லட்சுமி நரசிம்மர் வழிபாடு
புரட்டாசி மாதத்தில் சுவாதி நட்சத்திரம் அதுவும் செவ்வாய்க்கிழமை வந்திருப்பது கடன் அடைய நமக்கு பெரும் வாய்ப்பாக இருக்கிறது. இன்றைய நாளில் நாம் லட்சுமி நரசிம்மரை வணங்க வேண்டும். இதன் மூலம் நம்முடைய கடன் அடைவதோடு செல்வ நலன் பெருகும். இன்றைய தினம் வீட்டில் லட்சுமி நரசிம்மர் படம் இருந்தால் எடுத்து அவருக்கு பூஜை செய்யுங்கள். அது இல்லாத பட்சத்தில் ஒரு பெரிய அகண்ட அகல் விளக்கை வாங்கி அதில் எண்ணெய் ஊற்றி ஒன்பது திரிகள் கொண்ட தீபம் ஏற்றுங்கள். அத்துடன் அவருக்கு துளசியால் அர்ச்சனையும், பானக நெய்வேத்தியமும் படைத்து வணங்குங்கள். பூஜையை முடித்த பின்பு அருகில் உள்ள பெருமாள் ஆலயத்திற்கு சென்று வணங்கி வாருங்கள்.

- Advertisement -

பிரச்சனைகள் தீர வாராகி வழிபாடு
அடுத்து இன்றைய தினம் மாலை பஞ்சமி திதி உள்ளதால் வாராகி அன்னையை வணங்குவதும் மிகவும் விசேஷம். வாராகி அன்னை ஆலயம் அருகில் இருந்தால் அங்கு சென்று வழிபடுங்கள். அது இல்லாத பட்சத்தில் வீட்டிலே ஒரு அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி இந்த விளக்கிற்கு நான்கு திரி கொண்ட தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு வாராகி அன்னைக்கு நெய்வேத்தியம் படைத்து இவருக்கும் பானகமே நைவேத்தியமாக வைக்கலாம். வாராகி அன்னையின் போற்றிகளை சொல்லி வணங்கி வழிபடுங்கள். இதன் மூலம் கடன் அடைவதுடன் வாழ்க்கையில் உள்ள தீராத பிரச்சனைகள் கூட தீர்ந்து விடும்.

செல்வம் பெருக மகாலட்சுமி தாயார் வழிபாடு
அடுத்து இன்றைய தினம் மகாலட்சுமி தாயாரை வணங்குவது மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது. இதற்கு மகாலட்சுமி தாயாருக்கு மல்லிகை மலர் அல்லது வாசம் மிக்க வேறு மலர்களால் மாலை அணிவித்துக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக சக்கரை பொங்கல் செய்து வழிபடுங்கள். அத்துடன் அன்னைக்கு இரண்டு நெய் தீபம் அகல் விளக்கில் ஏற்றி வைத்து லட்சுமி தாயாரின் போற்றிகளையோ அல்லது அவருடைய நாம அர்ச்சனைகளையும் சொல்லி வணங்குங்கள். அத்துடன் அருகில் உள்ள மகாலட்சுமி தாயார் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருவது நம்முடைய குடும்பம் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு வழிவகுக்கும்.

- Advertisement -

நினைத்தது நடக்க சதுர்த்தி வழிபாடு
இன்றைய தினம் சதுர்த்தி திதியும் உள்ளதால் விநாயகரை வணங்குவதும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இன்று விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செம்பருத்தி இலை அர்ச்சனை, செம்பருத்திப்பூ அர்ச்சனை, போன்றவற்றை செய்வது மிகவும் நல்லது. இன்றைய தினம் விநாயகருக்கும் நான்கு திதி கொண்ட தீபம் ஏற்றி வணங்குவது விசேஷமான பலனை தரும். அது மட்டும் என்று விநாயகருக்கு பிடித்த நெய்வேத்தியங்களை படித்து அவருடைய நாமங்களை சொல்லி வழிபாடு செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் நினைத்தவை யாவும் நிறைவேறுவதற்கான வாய்ப்பு பெருகும்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது யாவும் உடனே கிடைக்க இன்று அங்காரா சதுர்த்தி நாளில் விநாயகருக்கு இப்படி பூஜை செய்தால் போதும். இது ஓராண்டு நீங்கள் சதுர்த்தி விரதம் இருந்து பூஜை செய்ததற்கான பலன் கிடைக்கும்.

இத்தகைய பல நலன்களை கொண்ட இந்த நாளை தவிர விடாமல் இவர்களை ஒன்றாக அதுவும் ஒரே நாளில் வணங்கும் போது நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து செல்வ நலம் பெறுவதற்கான வாய்ப்பாக உள்ளது. இந்த வழிபாடுகளை செய்து அனைவரும் இந்த தெய்வங்களின் அருள் ஆசிகளை எல்லாம் ஒரு சேர பெற்று வளமாக வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -