குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது இந்த ஒரு பொருளை கொண்டு போனால் திரும்ப வரும் போது குலதெய்வம் உங்களுடனே வீட்டுக்கு வந்து விடும்.

- Advertisement -

நம் எல்லோருக்கும் குலதெய்வம் என்ற ஒன்று நிச்சயமாக இருக்கும். ஒரு வேளை சிலருக்கு அது தெரியாமல் இருக்கலாமே அன்றி குலதெய்வம் இல்லாமல் இருக்காது. அந்த குலதெய்வத்தை நாம் எப்படி வழிபட்டால் தெய்வம் நம்முடனே இருக்கும் என்பதற்கு ஒரு சில வழிமுறைகள் உண்டு. அது என்ன என்பதை இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இன்றைய கால சூழ்நிலையில் எல்லோருக்கும் குலதெய்வம் என்ற ஒன்று இருப்பதையே மறந்து மற்ற தெய்வங்களை வணங்கி தொடங்கி விட்டார்கள். அது மட்டுமின்றி யார் எந்த தெய்வத்தை வழிபட சொன்னாலும் அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து வழிபட தொடங்கி விட்டார்கள். இப்படி செய்வது தவறா என்று கேட்டால் அது தவறு தான்.

- Advertisement -

தெய்வங்களை வணங்குவது எப்படி தவறாகும் என்று உங்களுக்கு தோன்றலாம். தெய்வங்களை வணங்குவது ஒரு நாளும் தவறாகாது. ஆனால் குலதெய்வத்தை வணங்காமல் மற்ற தெய்வங்களை வணங்குவது நிச்சயம் தவறு தான். நம் குலதெய்வத்தின் ஆசிர்வாதங்கள் இல்லாமல் மற்ற தெய்வங்கள் நமக்கு எந்த அருளையும் தராது. நமக்கு எந்த ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றாலும், அதற்காக நீங்கள் எந்த பூஜை எந்த தெய்வத்தை வணங்கினாலும் அவர்களும் குலதெய்வத்தின் அனுமதியுடனே நமக்கு அருள் புரிவார்கள். எனவே குலதெய்வத்தை மறந்து மற்ற தெய்வங்களை வணங்குவது நிச்சயம் நம் குடும்பத்திற்கு நல்லதல்ல.

குலதெய்வத்தின் அருள் கிடைக்க:
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய நெய்வேத்தியங்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை முடிந்த வரையில் நம் வீட்டில் இருந்தே செய்தோ அல்லது இங்கிருந்தோ தான் வாங்கி கொண்டு சொல்ல வேண்டும். கோவில் இருக்கும் இடத்திற்கு சென்று அங்கேயே வாங்கிக் கொள்ளலாம். இங்கிருந்து எதற்கு அனைத்தையும் சுமந்து கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்க கூடாது. குலதெய்வத்திற்கு செய்வது என்பது நாம் என்ன செய்கிறோம் என்பது கிடையாது. அதை எந்த மாதிரியான மனநிலையில் எவ்வளவு பக்தியுடன் நாம் அவர்களுக்காக செய்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள தான் இந்த வழிபாடே.

- Advertisement -

இப்படி நீங்கள் குலதெய்வத்திற்காக என்ன கொண்டு சென்றாலும், அத்துடன் ஒரு வெல்ல கட்டியை தவறாமல் கொண்டு செல்லுங்கள். நீங்கள் படைக்கும் நெய்வேத்தியத்துடன் இந்த வெல்லக்கட்டியையும் குலதெய்வத்திற்கு வைத்து படைத்த பிறகு அதை வீட்டிற்கு கொண்டு வந்து அந்த வெல்ல கட்டியில் இனிப்பு செய்து கொடுங்கள்.

இங்கிருந்து கொண்டு செல்லும் இந்த வெல்லக்கட்டி குலதெய்வத்தின் முன் வைக்கும் போது நம்முடைய தரித்திரம் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி அவர்களுடைய ஆசிர்வாதம் பெற்ற பொருளாக அது மாறி விடும். அது மறுங நம் இல்லத்திற்கு வந்து அதில் இனிப்பு செய்து சாப்பிடும் போது நம்முடைய துன்பம் எல்லாம் மறைந்து நம்முடைய வாழ்க்கை இனிதாக இருப்பதற்கு அவர்களே நம்முடன் வந்து அருள் புரிவதற்கு ஈடாகும்.

இதையும் படிக்கலாமே: பணத் தேவை பூர்த்தி அடைய வெள்ளிக்கிழமையில் தவறாமல் செய்ய வேண்டிய சில விஷயங்கள் என்ன? இதையும் தெரிஞ்சு வச்சுக்கோங்க!

குலதெய்வ ஆலயத்திற்கு செல்லும் போது மறக்காமல் ஒரு வெல்லக் கட்டியை கொண்டு சென்று பூஜை செய்து வீட்டிற்கு கொண்டு வந்து விடுங்கள். இதனால் குலதெய்வமே உங்களுடன் வந்து உங்கள் வீட்டில் இருந்து உங்களை ஆசீர்வதிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு இனி இந்த ஒரு காரியத்தை மறக்காமல் செய்து அவர்களின் பரிபூரண ஆசீர்வாதத்துடன் வளமான வாழ்வை வாழலாம்.

- Advertisement -