பணத் தேவை பூர்த்தி அடைய வெள்ளிக்கிழமையில் தவறாமல் செய்ய வேண்டிய சில விஷயங்கள் என்ன? இதையும் தெரிஞ்சு வச்சுக்கோங்க!

lakshmi-cash
- Advertisement -

எல்லா நாட்களைப் போலவும் வெள்ளிக்கிழமை சாதாரணமாக கடப்பதில்லை. வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமான ஒரு திருநாளாக இந்துக்களிடையே கொண்டாடப்படுகிறது. வாரத்தில் இருக்கும் ஆறு நாட்களில், வீட்டில் விளக்கு ஏற்றாவிட்டாலும், இந்த வெள்ளிக்கிழமையில் மட்டுமாவது வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுவது உண்டு. இறையருள் நிறைந்த இந்த வெள்ளிக்கிழமையில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் என்னென்ன? என்கிற ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக வெள்ளிக்கிழமையில் கல் உப்பு வாங்கினால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் அன்றைய தினத்தில் கல் உப்பு மட்டும் அல்ல, தயிர் வாங்கினால் கூட அதிர்ஷ்டம் வரும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. தயிர் மட்டும் அல்லாமல் வெள்ளிக்கிழமையில் அரிசி வாங்குவது, நல்லெண்ணெய் வாங்குவது போன்றவற்றையும் செய்யலாம். ஆனால் அரிசியை வறுக்கவோ, புடைக்கவும் அன்றைய தினம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தப்படுகிறது.

- Advertisement -

வெள்ளிக்கிழமையில் வாங்க வேண்டிய பொருட்களில் மொச்சையும் ஒன்று! மொச்சையை சுக்கிர ஹோரையில் வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் காசு கொடுத்து வாங்கி வந்து வீட்டில் வையுங்கள். இப்படி செய்தால் மகாலட்சுமியின் வருகை நம் வீட்டில் இருக்கும் என்று நம்பப்படுகிறது. சுக்கிர ஹோரையில் காலை அல்லது மாலை வேளையில் மகாலட்சுமிக்கு மொச்சை பயறு அல்லது பச்சை பயறு ஆகியவற்றில் சுண்டல் செய்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

பின்னர் குடும்பத்தில் இருக்கும் நபர்கள் மட்டும், அந்த பிரசாதத்தை தவறாமல் சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் செய்து வந்தால், வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த பயறு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், மகாலட்சுமியின் அருளையும் பரிபூரணமாக பெற்று தரக்கூடியது. இவற்றை வெள்ளிக்கிழமை அல்லாத மற்ற நாட்களில் எளியவர்களுக்கு தானம் செய்தால் பட்ட துன்பங்களுக்கு எல்லாம் விடிவு காலம் கிடைக்கும் என்கிற ஒரு குறிப்பு ஆன்மீக நூல்களில் உள்ளன.

- Advertisement -

மேலும் வெள்ளிக்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்குள்ள தாயாருக்கு அபிஷேகம் செய்ய இல்லத்தில் சுபிட்சம் நிலைத்து நிற்கும். பால் வாங்கி அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். இப்படி செய்யும் பொழுது பணமானது பெருக துவங்கும், வருமானம் ஆனது உயர துவங்கும் என்று நம்பப்படுகிறது. சனிக்கிழமையில் துளசி மாலை சாற்றி வழிபட்டு வந்தால் துன்பங்கள் தொலையும் என்பதும் உண்டு.

மேலும் இந்த பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு பச்சை வளையல் அணிவித்து வந்தால், பணவரவிற்கு குறைவில்லாமல் இருக்கும். வீண் செலவுகள் வராது, நஷ்டங்கள் ஏற்படாது என்றும் நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமையில் மாத்திரை, மருந்துகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இவைகளால் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

இதையும் படிக்கலாமே:
துரத்தும் துரதிருஷ்டத்தை விரட்டி அடிக்க அதிர்ஷ்டம் தேடி வர வீட்டில் இந்த ஒரு பழத்தை இப்படி செஞ்சு தூக்கி போட்டுருங்க!

அன்றைய நாளில் பாசிட்டிவான விஷயங்களை செய்து வந்தால், இறையருள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அதனால் தான் அன்றைய நாள் பெண்கள் வீட்டில் அழக்கூடாது என்றும் கூறுவார்கள். அழுகை சத்தம் அன்றைய நாளில் குடும்பத்திற்கு நல்லது கிடையாது. வழி இல்லாத பட்சத்தில் நீங்கள் மருந்து, மாத்திரைகள் வாங்கிக் கொள்ளலாம். கூடுமானவரை முந்தைய நாளே வாங்கி வைப்பது நல்லது.

- Advertisement -