தலைமுறை தலைமுறையாய் தொடரும் குலதெய்வ சாபம் விலக, உங்கள் குழந்தைகளுக்கு சாபம் தொடராமல் இருக்க, இதை மட்டும் செய்தால் போதும். நிச்சயம் வாழ்க்கையில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும்.

kuladeivam
- Advertisement -

இந்த காலத்தில் பலரும் தங்களது குலதெய்வத்தை தெரிந்து வைத்திருப்பதில்லை, அப்படியே தெரிந்து வைத்திருந்தாலும் முறைப்படி வணங்குவதில்லை. வாழ்க்கையில் தீர்க்க முடியாத சில கஸ்டங்கள் வரும்பொழுது தான் பலருக்கு குலதெய்வத்தின் நினைவே வருகிறது. அப்படியான சமயங்களில் குலதெய்வத்தின் மனதை குளிரவைத்து, குலதெய்வ சாபத்தில் இருந்து விடுபடுவது எப்படி என்பதை இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

kuladheivam

குலதெய்வ சாபம் உள்ளதா என்பதை கண்டறிவது எப்படி?
தலைமுறை தலைமுறையாக குலதெய்வ வழிபாடு விடுபட்டிருந்தால், அந்த தலைமுறையில் பிறக்கும் வாரிசுகள் அனைவருக்கும் குலதெய்வ சாபம் நிச்சயம் இருக்கும். அது போன்றவர்களின் ஜாதகத்தை வைத்தே அவர்களுக்கு சாபம் உள்ளதா என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். குறிப்பாக ஜாதகத்தில் குரு கெட்டுப் போய் இருந்தால் அந்த ஜாதகருக்கு குலதெய்வ சாபம் உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.

- Advertisement -

இது தவிர சிலருக்கு இந்த தலைமுறையில் தான் குலதெய்வ சாபம் ஏற்பட்டிருக்கும். அதற்க்கு பல காரங்கள் உண்டு. அது போன்றவர்களுக்கு குலதெய்வ சாபம் உள்ளதா இல்லையா என்பதை ஜாதகம் கொண்டு அறிய முடியாது. அப்படியானவர்கள் பிரசன்னம் மூலம் தங்களுக்கு குலதெய்வத்தின் அருள் உள்ளதா? குலதெய்வ சாபம் ஏதாவது உள்ளதா என்பதை கண்டறியலாம்.

jathagam astro

குலதெய்வ சாபம் விலக பரிகாரம்:
குலதெய்வ சாபம் உள்ளவர்கள் நேரடியாக குலதெய்வ கோவிலுக்கு செல்வதன் மூலம் மட்டுமே சாபம் விலகிவிடுமா என்றால் அது சந்தேகம் தான். அதற்க்கு முன்பாக குலதெய்வத்தை சாந்த படுத்த வீட்டிலேயே பரிகாரம் செய்து, குலதெய்வத்திடம் அனுமதிபெற்று கோவிலுக்கு சென்று பூஜை செய்வதன் மூலம் நிச்சயம் சாபம் விலகும்.

- Advertisement -

பரிகார முறை:
உங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் அரிசிமாவினால் குலதெய்வத்தின் பெயரை எழுத வேண்டும். குலதெய்வத்தின் பெயரை எழுதும்பொழுது குலதெய்வம் வீற்றிருக்கும் ஊரின் பெயரையும் சேர்த்து எழுதுவது முக்கியம். அதேபோல குலதெய்வத்தின் பெயர் தெற்கு திசையில் தொடங்கி வடக்கு திசையில் முடியுமாறு எழுதவேண்டும்.

arisi mavu

பிறகு, பெயரின் ஆரம்பத்திலும், நடுவிலும், இறுதியிலும், அகல் விளக்கு அளவிற்கு சிறிய ஒரு வாழை இலை போட்டு அதற்கு மேல் 2 பச்சரிசி நெல்லை போடவேண்டும். நெல் இல்லை என்றால் பச்சரிசியை போடலாம். பிறகு 3 அகல் விளக்கு எடுத்துக்கொண்டு, விளக்கின் நான்கு திசைகளிலும் பொட்டு வைத்து அதை அந்த வாழை இல்லை மேல் வைத்து அதற்குள் கலப்படம் இல்லாத தூய்மையான நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

deepam2

பிறகு, உங்கள் குலதெய்வத்தை மனதார வாய் விட்டு வேண்டி, ஒரு நல்ல முகூர்த்த நாளை சொல்லி, அந்த நாளில் நிச்சயம் உன் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்கிறோம். இனி வருடம் தவறாமல் வழிபாட்டை தொடர்கிறோம். எங்களுக்கு ஏற்பட்டுள்ள சாபத்தையும், துன்பங்களையும் நீக்கிக் கொடுங்கள் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

kula-dheivam

இந்த வழிபாட்டை தொடர்ந்து 9 நாட்கள் செய்யவேண்டும். இந்த 9 நாட்களில் உங்கள் குலதெய்வம் மனம் இறங்கி உங்களுக்கு ஒரு நல்ல சகுனத்தை காட்டுவார்கள். அதன் பிறகு தெய்வத்திடம் வாக்கு கொடுத்தது போல குறித்த நாளில் குலதெய்வ கோயிலிற்கு சென்று வழிபாடு செய்யவேண்டும். இப்படி செய்வதன் மூலம் குலதெய்வ சாபம் விலகி சுபிச்சம் பெருகும். அதோடு அடுத்த தலைமுறைக்கு குலதெய்வ சாபம் தொடராமல் இருக்கும்.

- Advertisement -