குலதெய்வ அருள் இல்லாதவர்கள் இந்த ஒரு செயலை வீட்டில் செய்தால் 9 நாட்களில் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் நீங்கி, நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்!

kula-dheivam-manjal

எல்லா தெய்வங்களை காட்டிலும் குலதெய்வம் ஒருவருக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. குலத்தைக் காக்கும் தெய்வமாக விளங்கும் குலதெய்வத்தை வணங்கி விட்டு தான் எந்த ஒரு செயலையும் நாம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் எந்த ஒரு செயலும் தோல்வி அடைவதில்லை. முந்தைய காலத்தில் எல்லாம் குல தெய்வ வழிபாடு என்பது மிக மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது. ஆனால் இன்று பலரும் தங்களுடைய குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் கூட இருக்கிறார்கள் என்பது வருத்ததிற்கு உரியது.

kula dheivam

குலதெய்வம் என்பது நம்முடைய முன்னோர்கள் வழிவழியாக தெய்வமாக மாறி நம்முடன் குலத்தை காக்க குலதெய்வமாக இருப்பதாக ஐதீகம் உள்ளது. அத்தகைய குலதெய்வ அருள் இல்லாதவர்களுக்கு கூட வீட்டில் இந்த ஒரு செயலை செய்வதால் குலதெய்வம் வீட்டிற்கு வந்து நீங்கள் நினைத்தது அத்தனையையும் நிறைவேற்றி தருவார்கள். நாம் அப்படி வீட்டில் என்ன தான் செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை மேலும் படியுங்கள்.

நம் உயிரை எடுக்க வரும் எமன் கூட நம் குல தெய்வத்தின் ஒப்புதலை பெற்றுக் கொண்டு தான் உயிரை பறிக்க செய்வார்களாம். நமக்கு வர இருக்கும் ஆபத்துகளை நாம் பிரார்த்தனை செய்யாமல் கூட நம்முடனேயே இருந்து எப்பொழுதும் காக்கும் அரணாக விளங்குவது குலதெய்வம் தான். கூப்பிட்ட குரலுக்கு சட்டென வந்து நிற்கும் குலதெய்வத்தை மறந்தவர்களுக்கு வாழ்க்கையில் நிறைய துன்பங்கள் வரும். எந்த ஒரு தீராத பிரச்சினைக்கும் குலதெய்வ வழிபாடு 100% நிச்சயமாக நல்ல தீர்வு தரும்.

thiruchendur

வீட்டில் நிம்மதி இல்லை, மனதில் மகிழ்ச்சி இல்லை, தொடர்ந்து துன்பங்கள் அடுக்கடுக்காக வந்து கொண்டு இருக்கிறது எனும் பொழுது அந்த இடத்தில் குலதெய்வ அருள் இல்லை என்பது பொருளாகும். குல தெய்வ குற்றம் இருந்தால் திருச்செந்தூர் முருகப் பெருமானை சென்று வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அது போல் காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்து விட்டு வந்தாலும் குலதெய்வ அருள் கிடைக்கும். நம் வீட்டிலேயே குலதெய்வத்தை வரவழைக்க இந்த எளிமையான பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

சிறிதளவு மஞ்சள் தூளுடன் பன்னீர் சேர்த்து குழைத்துக் கொள்ளுங்கள். அதில் சதுர வடிவில் வெட்டிய சுத்தமான காட்டன் வெள்ளை துணியை எடுத்து நன்கு தோய்த்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அதனை உலர வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள் கொம்பு ஒன்றை வைத்து அதற்கு குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். பின்பு இதனை ஒரு மூட்டையாக கட்டி மஞ்சள் நூல் கொண்டு முடிந்து கொள்ளுங்கள். அதற்கும் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இதனை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டு விளக்கு ஏற்றிக் கொள்ளுங்கள்.

manjal-mudichu

பின்னர் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு அதனை எடுத்து செல்லுங்கள். உங்கள் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு குலதெய்வம் உங்கள் வீட்டை காக்குமாறு மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை மீண்டும் வீட்டிற்கு எடுத்து வந்து நிலை வாசல் படியில் கட்டிவிட்டால் போதும். 9 நாட்களுக்குள் உங்களுடைய குலதெய்வம் உங்கள் வீட்டைத் தேடி வரும். நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவு காலம் பிறக்கும். முடிந்தால் இதை செய்த பின் 48 நாட்களுக்குள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் விளக்கு ஏற்றும் எண்ணையில் இதை போட்டு வைத்தால் மகாலட்சுமி நிரந்தரமாக உங்கள் வீட்டிலேயே தங்கி விடுவாள்! போதும் போதும் என்கிற அளவிற்கு பண மழை பொழியும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.