அமாவாசை என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது முன்னோர்களின் வழிபாடு தான் இன்றைய தினத்தில் நம் வீட்டில் இறந்த முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபாடு செய்வது நாம் காலம் காலமாக பின்பற்றி வரும் ஒரு வழக்கம். அப்படி பின்பற்றப்படும் வழக்கத்தோடு அன்றைய நாள் செய்யப்பட வேண்டிய வேறு சில விஷயங்களும் குலதெய்வ வழிபாடும் பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
அமாவாசையில் செய்ய வேண்டிய குலதெய்வ வழிபாடு
இன்றைய தினத்தில் முதலில் நாம் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும் வெள்ளிக்கிழமை உடன் வந்திருந்தாலும் கூட பித்ருகளுக்கு படையல் இட்டு வழிபாடு செய்வதை தான் இன்றைய தினத்தில் முதலாவதாக செய்ய வேண்டும். இந்தப் படையல் வைத்து வணங்கும் போது இளநீர் வைத்து வணங்குவது சிறந்தது.
இதன் மூலம் பித்ருக்களின் ஆசிர்வாதம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் இன்றைய நாளில் நீங்கள் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு ஆலயத்திற்கு சென்று மாலை வேலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது உங்கள் குடும்பத்திற்கு மேலும் நன்மைகளை உண்டாக்கி தரும். அதே போல் வாய்ப்புள்ளவர்கள் இன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது மிகவும் நல்லது.
அப்படி குலதெய்வ ஆலயம் செல்ல முடியாதவர்கள் வீட்டிலே வழிபாடு செய்யலாம். அதற்கு மாலை வேலையில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு குலதெய்வ படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள் உங்கள் குலதெய்வத்திற்கு பிடித்து நெய்வேத்தியத்தை வைத்து விட்டு நீங்கள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு உங்கள் குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
இப்படி பிரார்த்தனை செய்யும் நேரத்தில் உங்கள் குலதெய்வத்தின் பெயரை சொல்லி வசி வசி என்ற வார்த்தையும் சேர்த்து சொல்லுங்கள். குலதெய்வமே தெரியாது என்பவர்கள் ஓம் குலதெய்வமே வசி வசி என்ற இந்த மந்திரத்தை மட்டும் சொன்னால் போதும். இதை எத்தனை முறை உங்களால் சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள்.
இந்த முறையில் இன்று குலதெய்வ வழிபாடு செய்யும் பொழுது குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைப்பதுடன் வருமான தடைகள் நீயும் குடும்பத்தில் உள்ள சகல பிரச்சனைகளும் தீரும் என்றும் சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி இன்றைய தினத்தில் ஏதேனும் ஒருவருக்காது நீங்கள் அன்னதானம் செய்வது உங்கள் முன்னோருக்கே கொடுத்தது போன்ற பலனை பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நிறைவேற பொட்டு வழிபாடு
அமாவாசையில் திருஷ்டி கழிப்பது, முன்னோர் வழிபாடு செய்வது போன்றவற்றுடன் இது போன்ற சில காரியங்களும் சேர்த்து செய்யும் போது நம் குடும்பத்தில் மேலும் நன்மைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாடு முறைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.