குலதெய்வ கோவிலுக்கு இதை செய்யலாம், என்ற நினைப்பு மனதில் வந்தாலே போதும். கெட்ட நேரம் உங்களை விட்டு கடந்து செல்ல போகிறது என்று அர்த்தம்.

sambrani-kuladheivam
- Advertisement -

குலதெய்வத்தை மறந்து விட்டு, ரொம்ப நாள் கழித்து குலதெய்வத்தின் நினைப்பு மனதில் எழுகிறது எனும்போது அது உங்களுக்கு நல்ல நேரமாக தான் இருக்கும். ஆனால் குலதெய்வத்தை மறப்பது என்பது அவ்வளவு நல்லது அல்ல. அது ரொம்ப ரொம்ப தவறு. குலதெய்வத்தை மறந்து விட்டோமே என்ற அந்த சூழ்நிலைக்கு நாம் என்றுமே தள்ளப்படக்கூடாது. நமக்கு கெட்டது வரப்போவதாக இருந்தால் தான், நாம் குல தெய்வத்தை மறந்து விடுவோம். அந்த கெட்ட நேரம், கெட்ட சகுனம், கெட்ட சக்தி, நம் மனதில் இருந்து குலதெய்வத்தை மறக்க செய்துவிடும். இதற்காகத்தான் குலதெய்வ வழிபாடு தினம் தினம் வீட்டில் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் குலதெய்வத்தின் பெயரை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது அவர்களுடைய வாயால் உச்சரிக்க வேண்டும்.

சில குடும்பங்களுக்கு தொடர் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்போது குலதெய்வ கோவிலுக்கு நாம் ஏதாவது வேண்டிக் கொள்ளலாம் என்ற நினைப்பு, அந்த வீட்டில் இருக்கும் குடும்ப தலைவனுக்கோ, குடும்பத் தலைவிக்கோ தானாக எழுவது இயற்கைதான். அப்படி யோசிக்கும்போது குலதெய்வ கோவிலுக்கு விளக்கு ஏற்றுவதற்கு எண்ணெய் வாங்கிக் கொடுக்க வேண்டும். குலதெய்வ கோவிலில் அபிஷேகம் நடக்கும். அப்போது சுவாமிக்கு எண்ணெய் தேய்த்து அபிஷேகம் செய்வார்கள். அதற்கு தேவையான எண்ணெயை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றினாலே அது நல்ல சகுனம் தான். தோன்றிய எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக நல்லெண்ணையை வாங்கி கோவிலுக்கும் கொடுத்து விட்டீர்கள் என்றால், அன்றைய நாளிலிருந்து உங்களுக்கு நல்ல நேரம் பிறந்து விட்டது என்று அர்த்தம். இந்த சின்ன பரிகாரத்தை செய்து பாருங்கள் குடும்பத்தில் நிச்சயமாக நல்லது நடக்கும்.

- Advertisement -

அடுத்தபடியாக சில பேருடைய குல தெய்வங்கள் காட்டுக்குள் இருக்கும். சில தெய்வங்கள் ஊர் எல்லையில் இருக்கும். ஒரு சில பேருக்கு ரொம்பவும் பிரபல்யமான கோவில் கூட குலதெய்வமாக இருக்கும். உங்கள் வீட்டு குலதெய்வம் காட்டுக்குள் இருக்கிறது. ஊரை விட்டு ரொம்பவும் தள்ளி செல்ல வேண்டும். அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்காது என்று வைத்துக் கொள்வோம். உங்கள் குலதெய்வமே இன்னும் கூட நிறைய பேருக்கு குலதெய்வமாக இருக்கும். ஆக அந்த குலதெய்வத்தை காண்பதற்கு அந்த இடத்திற்கு நிறைய பக்தர்கள் வந்து செல்வார்கள் அல்லவா.

இப்படி பக்தர்கள் வந்து குலதெய்வத்தை தரிசனம் செய்ய ஏதாவது ஒரு விஷயம் சிரமமாக இருக்கும். அந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் குடிக்க குடிதண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். சில இடங்களில் கழிவறை வசதி இருக்காது. சில இடங்களில் நடைபாதை கூட சரியாக இருக்காது. சில இடங்களில் அந்த கோவிலே பராமரிப்பு இல்லாமல் சீரமைப்பு இல்லாமல் இடிந்து போய் நலிந்து போயிருக்கும். சில கோவிலில் அந்த தெய்வத்திற்கு தினம் பூஜை செய்ய ஒரு பூசாரி கூட இருக்க மாட்டாங்க.

- Advertisement -

உங்களுடைய குல தெய்வமும் இப்படிப்பட்ட ஒரு சூழலில் இருந்தால், அந்த கோவிலை சீரமைப்பதற்கு, அந்தக் கோவிலை பராமரிப்பதற்கு, அந்தக் கோவிலில் இருக்கும் உங்கள் குலதெய்வத்திற்கு தினசரி ஒரு கால பூஜை செய்வதற்கு, உங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். உங்களால் என்றால் நீங்கள் மட்டும் இவ்வளவு பெரிய விஷயங்களையும் செய்துவிட முடியாது. உங்களுடைய அங்காளியே பங்காளி ஊர் உறவினர்களுக்கு எல்லாம் அந்த தெய்வம் தானே குல தெய்வம்.

எல்லாரையும் கூட்டி ஒன்று சேர்த்து உங்களால் முடிந்த தொகையை வசூல் செய்து அந்தக் கோவிலுக்கு ஒரு நல்ல வழியை செய்து வைத்தால், அது மிக மிக பெரிய புண்ணியத்தை உங்களுடைய குடும்பத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் இப்படி பராமரிப்பு பணிக்கு உங்களால் இயன்ற உதவியை செய்துதான் பாருங்களேன். நிச்சயமாக நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -