குலதெய்வ கோவிலுக்கு செல்பவர்கள் இதை மறக்காமல் எடுத்து வைத்துக் கொண்டால், வீட்டில் பூஜை செய்வதற்கு வசதியாக இருக்கும். குலதெய்வ கோவிலில் இருக்கும், இந்த ஒரு விஷயம் நம் வீட்டில் இருந்தால் தொழிலில் நல்ல லாபம், படிப்படியான முன்னேற்றம், அடுத்த கட்ட உயர்வு போன்றவற்றை நோக்கி சென்று கொண்டே இருக்கலாம். தொழில் சிறக்க குலதெய்வ வழிபாடு எப்படி மேற்கொள்வது? என்பது போன்ற தகவல்களைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
நம் குலத்தை காக்கும் குலதெய்வத்தை தொடர்ந்து வணங்கி வந்தால் வாழ்க்கையில் எவ்விதமான சிக்கல்களையும் எளிதில் சமாளிக்க முடியும் என்பது நம்பிக்கை. எந்த தெய்வம் கைவிட்டாலும், நம் குலதெய்வம் நம்மை கைவிடுவது கிடையாது. குலதெய்வ அருள் இருந்தால் தான் நம் உயிரை எமதர்மனும் பறிக்க முடியும். அந்த அளவிற்கு உயர்வான இந்த குலதெய்வ வழிபாட்டிற்கு குலதெய்வ கோவிலில் கிடைக்கக் கூடிய இந்த ஒரு பொருள் போதும்.
குலதெய்வ கோவிலுக்கு சென்று வருபவர்கள் அங்கு தரக்கூடிய திருமண், திருநீறு, குங்குமம் போன்றவற்றை வீட்டிற்கு எடுத்து வருவார்கள். ஆனால் குலதெய்வ கோவிலில் இருக்கக் கூடிய மண்ணை எடுத்து வர வேண்டும். திருக்கோவில்களில் இருக்கும் மண், அக்கோவிலில் வாசம் செய்யும் தெய்வத்தினுடைய மறுரூபமாக இருக்கும். பல கோவில்களுடைய மண்ணை எடுத்து வந்து பூஜைகள், யாகங்கள் போன்றவை நடத்தப்படுவது உண்டு.
அது போல நம் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது கொஞ்சம் மண்ணை எடுத்து வர வேண்டும். நீங்கள் கோவிலில் இருந்து மண் எடுக்கும் பொழுது யாருடைய கால்களும் படாத இடத்திலிருந்து மண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மஞ்சள் துணியில் போட்டு மூட்டையாக கட்டி எடுத்து வாருங்கள். ஒரு கைப்பிடி மண் எடுத்தால் கொண்டு வந்தால் போதும்.
இந்த மண்ணை இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு பாதியை ஒரு மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள். மறுபாதியை இன்னொரு மஞ்சள் துணியில் போட்டு மூட்டையாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த குலதெய்வ மண் நிறைந்த மூட்டைக்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை அறையில் வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு மூட்டையை பூஜை அறையில் மேற்பகுதியில் கட்டி தொங்க விட வேண்டும், இது குலதெய்வ அருளை உங்களுக்கு பரிபூரணமாக பெற்று தரும். அதே போல மற்றொரு மூட்டையை உங்களுடைய நிலை வாசலில் நடுப்பகுதியில் மேற்புறத்தில் கட்டி தொங்க விடுங்கள்.
இதையும் படிக்கலாமே:
துடைப்பம் வாங்க அதிர்ஷ்ட நாள்
அடுத்த முறை நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் வரை, இந்த மூட்டை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். அன்றாடம் நீங்கள் பூஜை செய்யும் பொழுது, இந்த மூட்டைக்கும் குலதெய்வமாக நினைத்து தூப, தீப, ஆரத்தி காண்பித்து வந்தால் போதும். இப்படிச் செய்யும் பொழுது குலதெய்வ அருளால் தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும். தொழில் முன்னேற்றம் என்பது விரைவாகவே நடக்கும். எந்த தொழில் செய்பவர்களாக இருந்தாலும், எந்த வேலை செய்பவர்களாக இருந்தாலும் உங்களுடைய குலதெய்வ அருள் இருக்கும் பொழுது அதில் தடை இன்றி தொடர்ந்து முன்னேற்றத்தை பெற முடியும். தினமும் வேலைக்கு செல்லும் முன்னர் இந்த குலதெய்வம் மண் நிறைந்த சக்தி பொருந்திய மூட்டையை ஒரு முறை தொட்டு வணங்கி விட்டு செல்லுங்கள், நன்மைகள் பல உங்களை நாடி வரும்.