குலதெய்வ மண் எடுக்கும் முறை

kuladheiva
- Advertisement -

ஒருவருக்கு குலதெய்வ அருள் இல்லை என்றால் அவர் எடுத்த காரியத்தில் வெற்றிகள் ஏற்படாது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் மேலூங்கும். எந்தவித சுப நிகழ்ச்சிகளும் நடைபெறாது. அதையும் மீறி நடைபெற்றாலும் அதில் ஏதாவது பிரச்சினைகள் உண்டாகும். வம்ச விருத்தி ஏற்படாது. குழந்தைகள் பெற்றோர்களின் சொல்லை கேட்டு நடக்க மாட்டார்கள். இப்படி பல வகைகளில் குடும்பத்தில் எந்தவித மகிழ்ச்சியும் இல்லாத சூழ்நிலையே ஏற்படும். இந்த சூழ்நிலையை மாற்றுவதற்கு குலதெய்வ கோவிலில் இருந்து மண்ணை எந்த முறையில் எடுத்து வந்து வீட்டில் வைத்து வழிபட்டால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குலதெய்வத்தின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. இப்படி குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டாலும் பலரின் வாழ்க்கையில் குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும். இதற்கு ஜாதகரீதியான காரணங்களும் இருக்கிறது.

- Advertisement -

பௌர்ணமி தினத்தன்று தான் குலதெய்வ கோவிலில் இருந்து பிடி மண்ணை எடுக்க வேண்டும். குலதெய்வத்திற்கு நேராக எந்த இடத்தில் மண் இருக்கிறதோ அந்த இடத்தில் ஒரு கற்பூரத்தை ஏற்றி வைத்து குலதெய்வத்தை மனதார வேண்டி குலதெய்வத்தின் பெயரைக் கூறி போற்றி என்று ஒன்பது முறை கூற வேண்டும். இப்படி கூறிவிட்டு கற்பூரம் முழுவதும் எரிந்து முடிந்தவுடன் அந்த கற்பூரம் ஏற்றி வைத்த மண்ணை எடுக்க வேண்டும்.

இந்த மண்ணை வீட்டில் இருக்கக்கூடிய திருமணம் ஆன சுமங்கலி பெண்கள் தான் எடுக்க வேண்டும். ஆண்கள் எடுத்தால் அதில் பலன் இருக்காது. அது மட்டுமல்லாமல் இந்த மண்ணை எடுத்து வரும் பொழுது பிளாஸ்டிக் கவரையோ மற்ற பொருட்களிலோ வைத்து எடுக்கக் கூடாது. வீட்டிலேயே சுத்தமான ஒரு வெள்ளை துணியை எடுத்து அதில் மஞ்சள் தடவி நன்றாக காய வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். அதில் தான் இந்த மண்ணை எடுத்து வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி எடுத்த இந்த மண்ணை வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாளத்தை வைத்து அதற்கு மேல் பச்சரிசியை பரப்பி அதற்கு மேல்தான் அந்த மஞ்சள் துணையுடன் மண்ணை வைக்க வேண்டும். தினமும் நாம் வீட்டில் பூஜை செய்யும் பொழுது இந்த மண்ணிற்கும் கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். வெள்ளிக்கிழமைகளிலும், பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களிலும் இந்த மண்ணிற்கு நம்மால் இயன்ற ஏதாவது ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும். தட்டில் இருக்கும் பச்சரிசியை மாதத்திற்கு ஒருமுறை வரக்கூடிய அமாவாசை தினத்தன்று புதிதாக மாற்றி வைக்க வேண்டும். பழைய அரிசியை எறும்புகள் இருக்கும் இடத்தில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: எதிரியை வீழ்த்தும் திருப்பல்லாண்டு பாடல் வரிகள்.

இந்த முறையில் நாம் குலதெய்வ மண்ணை எடுத்து வந்து பூஜை செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் குலதெய்வம் நம் வீட்டிற்கு வந்து நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளையும் நீக்கி நன்மைகளை தருவார்கள்.

- Advertisement -