எதிரியை வீழ்த்தும் திருப்பல்லாண்டு பாடல் வரிகள்.

perumal3
- Advertisement -

ஒரு மனிதனுக்கு நிச்சயமாக, நேர்முகமாகவும் மறைமுகமாகவோ எதிரிகள் இருப்பார்கள். அதிலும் ஒருவன் சீக்கிரம் முன்னேறி விடுகின்றான் எனும்போது, அவனைப் பார்த்து பொறாமை படக்கூடிய எதிரிகள் இந்த கலியுகத்தில் ஏராளம். பெரிய பெரிய வேலை செய்பவர்கள், பெரிய பெரிய தொழில் அதிபர்கள், பணக்காரர்களுக்கு மட்டும்தான் எதிரி இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

10 பேருடன் ஒரு சின்ன அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் எதிரி இருப்பார்கள். 5 பேர், ஒன்றாக இருக்கும் இடத்தில் நான்கு பேர் ஒன்றாக கூட்டு சேர்ந்து கொண்டு, ஒருத்தரை விலக்கி வைப்பார்கள். நிறைய ஆண்கள் வேலை செய்யும் இடத்தில், பல ஆண்களின் மத்தியில் ஒரு பெண் மட்டும் உயர் அதிகாரியாக இருந்தால் அந்த பெண்ணுக்கு சொல்ல முடியாத அளவுக்கு எதிரி இருப்பார்கள். சொந்த பந்தங்களே கூட எதிரியாக மாறும்.

- Advertisement -

உங்கள் சொந்தத்தை விட, நீங்கள் ஒரு படி பொருளாதாரத்தில் உயர்ந்து ஒரு வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து பாருங்கள். உங்க அக்கா தங்கச்சி கூட உங்க கிட்ட பேச மாட்டாங்க. அந்த அளவுக்கு இன்றைய சூழ்நிலையில் பொறாமையால் எதிரிகள் தினம் தினம் முளைத்து வருகிறார்கள். இந்த எதிரி தொல்லையில் இருந்து தப்பிக்க எதிரிகளை நம் பாதத்தில் சரண் அடைய வைக்க ஆன்மீகத்தில் ஒரு வழி உள்ளது. அது என்ன வழி பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எதிரியும் நண்பனாக மாற திருப்பல்லாண்டு பாடல் வரி

பெருமாளுக்கே பல்லாண்டு பாடிய புகழ் இந்த பெரியாழ்வாருக்கு உண்டு. வைணவ ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர். அதில் பெரியாழ்வாரும் ஒருவர். வைணவத்தை போற்றும் வகையில் அமைந்துள்ள பாடல் வரிகள், இந்த பல்லாண்டு பாடலில் இடம்பெற்றுள்ளது. இந்த திருப்பல்லாண்டு மொத்தம் 12 பாடல்களை உள்ளடக்கியது. அதிலிருந்து ஒரு பாசுரத்தை மட்டும் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதாவது வாழ்வில் எதிரி தொல்லையில் இருந்து விடுபட்டு மேலும் மேலும் செல்வ வளம் அதிகரிக்க இந்த பாடலை தினமும் பாராயணம் செய்யலாம்.

- Advertisement -

நெய்யெடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே.

தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பெருமாளுக்கு பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த பாசுரத்தை படியுங்கள். இது உங்களுடைய எதிரி தொல்லையை நீக்குவதோடு சேர்த்து பொன் பொருள் சேர்க்கையையும் அதிகரிக்கும். வாழ்க்கையில் தன தானியத்திற்கு எந்த ஒரு வகையிலும் பஞ்சமில்லாமல் இருக்கும். அந்த எம்பெருமான் உங்களுக்கு தேவையான செல்வ வளத்தை எல்லாம் வாரி வழங்கி விடுவார்.

- Advertisement -

பாடலின் சுருக்கமான விளக்கம்:

சாதத்தில் தான் எல்லோரும் நெய் விட்டி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த பாசுரத்தை படித்தால் நெய்யில் நீங்கள் சாதத்தை போட்டு சாப்பிடலாம். அந்த அளவுக்கு உங்களுக்கு செல்வ வளம் கொழிக்கும். கழுத்தில் அணிந்து கொள்ள தங்க ஆபரணங்கள், காதில் குண்டலம் போன்ற அணிகலன்களும் சேரும். நன்றாக சாப்பிட்டுவிட்டு, தாம்பூலம் தரிக்க வெற்றிலை பாக்கு கிடைக்கும். வாசத்துடன் தேஜஸ் ஆக வாழ சந்தனமும் கிடைக்கும். ‘நாகத்திற்கு பகையாக இருக்கக்கூடிய கருடனை’, கொடியாக வைத்திருக்கும் பெருமாளுக்கு பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.

உங்களுக்கு அர்த்தம் புரிந்ததா. கருடனும் நாகமும் எதிரியாகவே இருந்தாலும், இந்த இரண்டு உயிரினமும் பெருமாளிடம் வந்து விட்டால் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரிகள் அல்ல. இரண்டும் பெருமாளிடம் இருக்கக்கூடிய உயிர் இனங்கள் தானே. இவை இரண்டும் பெருமாள் இடத்தில் இருக்கும் போது, எதிரிகள் அல்ல.

இதையும் படிக்கலாமே: கஷ்டம் தீர பசு நெய் தானம் செய்யும் முறை

ஆனால் பெருமாளை விட்டு தூரம் வந்து விட்டால், இரண்டும் பெரும் எதிரிகள். அப்படித்தான் நாமும், பெருமாளோடு நெருங்கி இந்த பாடலை படித்து வந்தால் நம்மிடம் எந்த எதிரியும் நெருங்க முடியாது. பெருமாளை விட்டு விலகி விட்டால் எதிரிகள் நம்மை சூழ்வார்கள். வறுமையும் நம்மை சூழும். இதுதான் பெருமாள் வழிபாட்டின் சிறப்பு அம்சம். புரிந்தவர்கள் இந்த ஆன்மீகம் சொல்லும் இந்த பாடலை படித்து பலன் பெறலாம்.

- Advertisement -