குலதெய்வத்திற்கு நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு நேரம் காலம் கைகூடி வரவில்லையா? வேண்டுதலை சீக்கிரமே நிறைவேற்ற இதை செய்தால் போதும்.

pooja-room-kula-dheivam
- Advertisement -

கஷ்டம் வரும்போது குலதெய்வத்திற்கு வேண்டுதல் வைப்பது நம்முடைய வழக்கம். சில சமயம் வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றும் நேரமும் காலமும் கை கூடி வந்துவிடும். ஆனால் சில சமயம் வேண்டுதலை நிறைவேற்றி வைக்க முடியாத சூழ்நிலை இருக்கும். எப்போதோ செய்துகொண்ட வேண்டுதல் பாக்கி இருக்கும். குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு கூட வருவார்கள். ஆனால் குறிப்பிட்ட அந்த வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் இருக்கும். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், குலதெய்வத்துக்கு வைத்த  நிறைவேற்ற முடியாத வேண்டுதலை, கூடிய சீக்கிரம் நிறைவேற்ற வேண்டும் என்றால் நாம் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kuladheivam

ஒரு நாள் உங்கள் வீட்டில் இருக்கும் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து, வீட்டிலேயே குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அந்த வழிபாட்டை உங்கள் குல தெய்வத்திற்கும் உகந்த கிழமையில் செய்யுங்கள். உங்கள் வீட்டு குல தெய்வம் ஆண் குல தெய்வமாக இருந்தால், ஒரு மஞ்சள் துணியில், 1 ரூபாய் நாணயத்தை மட்டும் வைத்து சுருட்டி முடிச்சு போட்டு அதை உங்கள் வீட்டில் இருக்கும் குலதெய்வ திருவுருவப் படத்தின் பாதங்களில் வைத்து, மனதார குடும்பத்தோடு பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். சீக்கிரமாக வேண்டுதலை நிறைவேற்ற கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி தர சொல்லி.

- Advertisement -

உங்கள் வீட்டு குலதெய்வம் பெண் குலதெய்வமாக இருந்தால், அந்த ஒரு ரூபாய் நாணயத்துடன் ஒரு விரலி மஞ்சளை வைத்து மஞ்சள் துணியில் முடிந்து, குலதெய்வத்தின் பாதங்களில் வைத்துவிட்டு மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். வேண்டுதலை நிறைவேற்றி வைக்க சீக்கிரமே நேரம் காலம் அமைய வேண்டும் என்று.

kuladheivam

மனமுருகி இப்படி பிரார்த்தனை செய்து கொண்டால், நிச்சயமாக நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றி வைக்க, ஒரு நல்ல காலம் பிறக்கும். சரி முடிந்து வைத்த இந்த முடிச்சை என்ன செய்வது? பிரார்த்தனை நிறைவேற்றுவதற்காக கோவிலுக்கு செல்லும்போது அந்த முடிச்சை கோவில் உண்டியலில் செலுத்தி விட்டு வர வேண்டும்.

- Advertisement -

குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது உங்களால் இயன்ற பொருட்களை வாங்கிக்கொண்டு போய் கொடுப்பீர்கள். அந்த வரிசையில் குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது ஒரு மணி, அதாவது பூஜைக்கு பயன்படுத்தும் மணி இருக்கின்றது அல்லவா? அந்த மணி ஒன்றை வாங்கிக் கொள்ள வேண்டும். அதில் நூல் கோர்த்து கட்டும் அளவிற்கு சிறிய மணி பூஜை ஜாமான்கள் கடையில் விற்கும்.

mani

அதாவது சபரிமலையில் நூல் கோர்த்து மணி கட்டுவார்கள் பார்த்திருப்பீர்கள். அதேபோல ஒரு சிறிய மணியை வாங்கி உங்கள் குலதெய்வ கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் மரத்திலோ அல்லது கோவிலுக்கு வெளிப்புறம் இருக்கும் வேறு இடத்திலோ, அந்த மணியை கட்டி விட்டு வந்து விட வேண்டும். ஏதாவது தீராத கஷ்டம் தீர வேண்டும் என்று உங்கள் வேண்டுதலை வைத்து, இந்த மணியை கட்டினால் ஒரு வருடத்திற்குள் அந்த வேண்டுதல் பளிப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு.

kuladheivam 1

இப்படி கோயிலில் கட்டும் அந்த மணியை பித்தளையில், செம்பில் இப்படி உங்களால் எந்த உலோகத்தில் வாங்கி கட்ட முடியுமோ அந்த உலோகத்தில் வாங்கி கட்டுவது நன்மை தரக்கூடிய விஷயமாக சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி நல்ல பலனை அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -