மனதில் நினைத்த நல்ல காரியம் உடனே நிறைவேற, குலதெய்வத்தின் உண்டியலில் இதை மட்டும் போடுங்க போதும்.

kuladheivam1

நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக, நாம் நினைக்கும் நல்ல காரியங்கள் எல்லாம் வெற்றி அடைய வேண்டுமென்றால் முதலில் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் கைவிடக்கூடாது. இதோடு சேர்த்து குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் நமக்கு தேவை. அந்த இறைவனின் ஆசிர்வாதம் இல்லாமல் இந்த பூலோகத்தில் ஒரு அணுவும் அசையாது என்பதுதான் உண்மை. பலபேரின் மனது இதை ஏற்க மறுக்கின்றது. இருப்பினும் உண்மையை மாற்ற யாராலும் முடியாது அல்லவா? நீங்கள்  நினைத்த அந்த நல்ல காரியம் உடனடியாக நிறைவேற வேண்டும் என்றால் உங்கள் குலதெய்வத்திடம் எப்படி வேண்டுதல் வைக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kamatchi-amman

இந்தப் பரிகாரத்தின் வெற்றியே முழு நம்பிக்கையில் தான் உள்ளது. இப்படி செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? என்ற சந்தேகத்தோடு இந்த பரிகாரத்தை யாரும் செய்யக்கூடாது. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்தால் நிச்சயமாக நல்ல பலனைப் பெற முடியும். பரிகாரங்கள் பூஜைகள் என்றாலே அதை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வது நல்லது. அதே போல் தான் இந்த பரிகாரத்தையும் முடிந்தவரை சூரிய உதயத்திற்கு முன்பாகவே உங்களுடைய வீட்டில் செய்ய வேண்டும்.

காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றப்பட வேண்டும். இந்த தீபம் முற்றிலும் குலத்திற்காக மட்டுமே ஏற்றப்பட வேண்டும். குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து விட்டு, அதன் பின்பு அந்த தீபத்தை ஒளிர விடுங்கள்.

dheepam-compressed-1

உங்கள் வீட்டில் கட்டாயம் குலதெய்வத்தின் திருவுருவப்படம் இருக்கவேண்டும். அந்த படத்திற்கு முன்பாக பிரத்தியேகமாக இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு,  முழுமனதோடு ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து, நீங்கள் எதில் சாதிக்க விரும்புகிறீர்களோ, எந்த நல்ல காரியம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை ஒரு வரியில் எழுதவேண்டும். வெள்ளை காகிதத்திற்கு நடுவே ஒரு மஞ்சள் பொட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த காகிதத்தில் பிள்ளையார் சுழி மிகவும் முக்கியம். எந்த ஒரு காரியத்திலும் தடங்கல் ஏற்படாமல் இருக்க விநாயகரை வழிபட மறந்துவிட வேண்டாம். அதன் பின்பு ஒரே வரியில் உங்களது கோரிக்கையை எழுத வேண்டும் ‘புதிய தொழில் தொடங்க வேண்டும். கல்வியில் முன்னேற்றம் வேண்டும். கடன் தொல்லை தீர வேண்டும். நிரந்தர வருமானம் கிடைக்க வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டும். குழந்தை வரம் வேண்டும். திருமணம் நடக்க வேண்டும்.’ இப்படியாக உங்களுக்கு எது தேவையோ ஒரு வரியில் எழுதி மடித்து, உங்கள் குலதெய்வத்தின் பாதங்களில் அந்த காகிதத்தை வைத்து விடுங்கள்.

virutcham-temple

முடிந்தவரை குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்குள் இந்த காகிதத்தை கொண்டுபோய் உங்களது குலதெய்வத்தின் உண்டியலில் சேர்க்க வேண்டும். உங்கள் குலதெய்வம் எவ்வளவு வெகு தூரத்தில் இருந்தாலும் நம்பிக்கையோடு இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். நீண்டநாட்களாக உங்களால் செய்யவே முடியாது என்று நினைத்துக்கொண்டிருந்த விஷயங்கள் கூட கைகூடி வருவதற்கு பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

money2

நம்முடைய கோரிக்கையை நாம் குலதெய்வத்திடம் சேர்த்து விட்டோம். இனி எல்லாமே நல்லதாகவே நடக்கும் என்ற அந்த நேர்மறை ஆற்றல் ஒன்று போதும். உங்கள் வாழ்க்கையை கைதூக்கி விட! உங்களால் முடிந்தால் அந்த காகிதத்தோடு, முடிந்த காணிக்கையை 11 ரூபாயை வைத்துக் கூட உண்டியலில் போடலாம். வெறும் 1 ரூபாயை வைத்துக் கூட உண்டியலில் போடலாம். அது உங்களுடைய இஷ்டம் தான்.

undiyal

குலதெய்வத்தின் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த காகிதத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அந்த முடிச்சினை கொண்டு போய் உங்கள் குலதெய்வத்தின் உண்டியலில் சேர்க்க வேண்டும். குலதெய்வத்தை தரிசனம் செய்யும்போது உங்கள் கையில் இந்த காகிதம் இருக்க வேண்டும். தரிசனத்தை முடித்து விட்டு வெளியே வரும்போது தான் உண்டியலில் உங்கள் வேண்டுதல் எழுதியிருக்கும் காகிதத்தை செலுத்திவிட்டு, வேண்டுதலை நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் குழப்பமான நேரத்தில், முடிவு எடுக்க தெரியாத இடத்தில் சரியான முடிவு எடுக்க என்ன செய்ய வேண்டும்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.