நீங்கள் குழப்பமான நேரத்தில், முடிவு எடுக்க தெரியாத இடத்தில் சரியான முடிவு எடுக்க என்ன செய்ய வேண்டும்?

ramayanam-bahabaratham
- Advertisement -

குருஷேத்திரப் போரில் பல திருவிளையாடல்களைப் புரிந்து பாண்டவர்களை வெற்றி அடைய செய்த கிருஷ்ணன் அதர்மத்தை செய்திருந்தாலும் அதுவும் தர்மம் ஆகவே பார்க்கப்பட்டது. சூழ்ச்சிகள் புரிந்து வஞ்சகத்தால் வெற்றி கொண்டாலும், தர்மத்தின் வழியில் அதுவும் நியாயமாகவே மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது ஏன்? சூழ்ச்சிகள் புரிவது தவறென்றால், கிருஷ்ண பரமாத்மா செய்ததும் தவறு தானே? எது சரி? எது தவறு? என்று ஏதோ ஒரு கட்டத்தில் நமக்கு முடிவெடுக்கத் தெரியாமல் திணறும் பொழுது இந்த புராணங்களின் கதைகளை ஒரு முறை சிந்தித்துப் பார்த்தால் சரியான முடிவை எடுத்து விடலாம். அதைப் பற்றிய புராணக்கதைகளை இப்பதிவின் மூலம் பார்ப்போம் வாருங்கள்.

karnan

மிகப் பெரும் காப்பியங்களில் ராமாயணம், மகாபாரதம் இரண்டும் இரண்டு கண்கள் போன்று இன்றும் நிலைத்து நிற்கின்றன. இதில் பாரதப்போரில் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட கர்ணன் தன்னுடைய மரணத்திற்கு பின் என்ன செய்தார் தெரியுமா? கர்ணன் இறந்த பின்பு தன் தந்தையான சூரிய தேவனிடம் சரணடைந்தான். அவன் தன் தந்தையிடம் தான் கிருஷ்ணனின் சூழ்ச்சியால் தந்திரமாக கொல்லப்பட்டேன் என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தான். நான் துரியோதனனுக்கு செஞ்சோற்று கடன் தீர்க்க நியாயமான முறையில் தானே போர் புரிந்தேன். அப்படி இருக்கும் பொழுது சூழ்ச்சியால் கொல்லப்பட்டது ஏன்? என்று கேள்வி கேட்டான்.

- Advertisement -

அதற்கு சூரிய பகவான் கர்ணனிடம் கூறியது இது தான்! நீ செஞ்சோற்று கடன் தீர்க்க துரியோதனனுக்காக போர் புரிந்தது தர்மம் தான் என்றாலும் அதைவிட சிறந்த தர்மமாக விளங்கியது கிருஷ்ணன். குழப்பமான சூழ்நிலையில் தர்மமா? அல்லது சிறந்த தர்மமா? என்கிற கேள்வி வரும் பொழுது சிறந்த தர்மத்தின் பக்கம் நாம் நிற்கும் பொழுது தான் அது உண்மையில் தர்மம் ஆகிறது என்றாராம்.

karnan-death

தர்மமா? அதர்மமா? எனும் பொழுது தர்மத்தை எளிதாக தேர்ந்தெடுத்து விடலாம். ஆனால் தர்மமா? சிறந்த தர்மமா? எனும் முரண்பாடு ஏற்படும் பொழுது அங்கு குழப்பம் உண்டாகிறது. ‘தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்று கூறுவார்கள். அப்படி பார்த்தால் பிரகலாதன் தன்னுடைய தந்தை இரணியனின் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டிருக்க வேண்டும். தந்தையை மீறி விஷ்ணுவை ஏற்றுக் கொண்டது எப்படி?

- Advertisement -

ராவணனுடைய தம்பியாக விளங்கும் விபீஷணன் தன் சகோதரனுக்கு உறுதுணையாக இல்லாமல், ஸ்ரீராமரை ஏற்றுக் கொண்டது எப்படி? ராமனுக்கு அநீதி இழைத்த கைகேயிக்கு மகனாக இருந்தாலும் பரதன் கைகேயியை விடுத்து, ராமனை சரணடைந்தது எதனால்?இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று தான். அது தர்மத்தை விட சிறந்த தர்மமே தர்மமாகும் என்பதை தான்.

vibhishanan

ஒரு வீட்டில் அல்லது உங்களுடைய வாழ்க்கையில் ஒரு பிரச்சனை நடக்கிறது என்றால் முடிவெடுக்க சிரமமாகத் தான் இருக்கும். முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலையில் எது சரி? எது தவறு? என்று தெரியாத நேரத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். அவரை நினைத்து, அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம் என்று அவரிடம் விட்டு விடுங்கள். முடிவெடுக்கக் கூடிய சக்தி உங்களுக்கு தானாகவே கிடைக்கும்.

- Advertisement -

krishnar

கட்டிய கணவனாக இருந்தாலும், பெற்ற பிள்ளையாக இருந்தாலும், ஈன்றெடுத்த தாயாக இருந்தாலும் தவறு செய்தால் தட்டிக் கேளுங்கள். தட்டி கொடுக்காதீர்கள். அவர்களை காப்பது தர்மமல்ல, அதை விட சிறந்த தர்மத்தின் பக்கம் நின்றால் மோட்சம் உங்களுக்கு தான். நியாயம், தர்மம் எல்லாம் வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, அதுவே உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதை மறக்காதீர்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த செடியை மட்டும் உங்கள் வீட்டில் வைத்திருந்தால் நிச்சயம் கடன் தொல்லையும், கணவன்-மனைவி பிரச்சனையும் ஏற்படும். தவறியும் இந்த தவறை செய்து விடாதீர்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -