இந்த தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், குலதெய்வத்திடம் வைக்கும் வேண்டுதல் அடுத்த நாளே நிறைவேறும்.

amman-vilaku
- Advertisement -

நமக்கு எது நல்லதோ, அதை நாம் கேட்டாலும் கேட்கவில்லை என்றாலும், நம்முடைய குலதெய்வம், நமக்கு தேவையான வரத்தை கட்டாயம் கொடுக்கும் என்பதில் ஒரு துளி அளவு கூட சந்தேகம் இல்லை, எவரொருவர் குலதெய்வத்தை மறவாமல் நினைவில் வைத்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு! நீங்களும் உங்கள் வீட்டு குலதெய்வத்தை தினந்தோறும் மனதார நினைத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வழிபாடு செய்ய மறந்து விடாதீர்கள். அதேசமயம் சில கிரக தோஷங்களின் காரணமாகவும், நம்முடைய கர்ம வினையின் காரணமாகவும், நம்முடைய சில வேண்டுதல்கள் அவ்வளவு சீக்கிரத்தில் பலிக்காது.

kuladheivam-vinayagar

நமக்கு கிரக சூழ்நிலைகள் சரியாக அமையாத சமயத்திலும், கஷ்டகாலம் இருக்கும் சமயத்திலும், நம்முடைய வேண்டுதல் நம் வீட்டு குலதெய்வத்திற்கு கேட்க வேண்டும் என்றாலும், நம்முடைய வேண்டுதல் விரைவாக பளிக்க வேண்டும் என்றால், ஆன்மீக ரீதியாக எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

காலமும் சூழ்நிலையும் நேரமும் நமக்கு சாதகமாக இல்லாத சமயத்தில் நம்முடைய வழிபாட்டு முறைகளில் சின்ன சின்ன மாற்றங்களை கொண்டு வருவதில் தவறொன்றும் கிடையாது. உங்கள் வீட்டு குல வழக்கப்படி குல தெய்வத்தை வழிபாடு செய்து, இந்த தீபத்தையும் கூடவே ஏற்றவேண்டும். இது நம்முடைய கஷ்டத்திற்கு உடனடியான தீவினை தேடித்தரும்.

kuladheivam 1

கஷ்டத்தில் இருந்தாலும் நஷ்டத்தில் இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் வருடத்திற்கு ஒரு முறை குலதெய்வ தரிசனம் செய்ய மறந்துவிடாதீர்கள். சரி, வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாத நிலையில், நீங்கள் தவித்துக் கொண்டிருக்கும் நேரம் உங்களுக்கு இருந்தது என்றால், வளர்பிறையில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அல்லது வெள்ளிக் கிழமைகளில் குல தெய்வத்தை வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

கோவிலுக்கு செல்வதற்கு முன்பே உங்களுடைய வீட்டில் இந்த மண் அகல் விளக்கை நீங்கள் தயார் செய்து எடுத்து செல்லவேண்டும். புதியதாக ஒரு மண் அகல் தீபத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். கொஞ்சமாக மஞ்சள்தூள், புனுகு, கோரோசனை, ஜவ்வாது, இந்த பொருட்களோடு பன்னீர் ஊற்றி நன்றாக குழைத்து, அந்த அகல் விளக்கில் முழுவதும் தடவி நிழலிலேயே உலர வைத்துக் கொள்ளுங்கள். தாமரை திரி அல்லது வாழைத்தண்டு திரி இந்த இரண்டு திரியையும் ஒன்றாக திரித்து கொஞ்சமாக பன்னீரில் நனைத்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும்.

durgai-amman

குலதெய்வ கோவிலுக்கு வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை செல்லும்போது, குலதெய்வத்திடம் உங்களது தீராத கஷ்டத்தை சொல்லி, அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று இந்த தீபத்தில்,  சுத்தமான பசு நெய் ஊற்றி, உங்கள் கையால் தயாரித்த திரியைப் போட்டு  தீபச்சுடரை ஏற்றினால் போதும். தீராத கஷ்டங்களுக்கு கூடிய விரைவில் நல்ல விடிவு காலம் பிறக்கும். இதை குலதெய்வம் வசிய தீபம் என்றும் சொல்லலாம்.

- Advertisement -

Amman deepam

குலதெய்வ கோவிலுக்கு உடனடியாக செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே இந்த தீபத்தை, குலதெய்வத்தை வேண்டி குலதெய்வத்தின் திருவுருவப் படத்திற்கு முன்பாக ஏற்றி வரலாம். வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று ஞாயிற்று கிழமை அன்றும் உங்களுடைய வீட்டில் இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்து வரும் பட்சத்தில் உங்களுடைய வேண்டுதல் கூடிய விரைவிலேயே நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
இந்த கருப்பு கயிறை கையில் கட்டிக்கொண்டால் போதுமே! உங்கள் கைகள் பணத்தை சிக்கனமாக செலவு செய்யும். சேமிப்பு சில நாட்களிலேயே இரட்டிப்பாகும். ட்ரை பண்ணி பாருங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -