இந்தப் பிரச்சனை அடிக்கடி உங்க வீட்டில் வருமா? அப்படி என்றால் குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்க ஏதோ ஒரு இடையூறு இருக்கிறது என்று தான் அர்த்தம்.

amman3
- Advertisement -

ஒவ்வொரு வீடும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், அந்த வீட்டில் குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. பெரும்பாலும் இது நம்மில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். ஒரு சில வீடுகளில் இருக்கக்கூடிய பெண்களுக்கு, ஒரு சில நேரத்தில் குலதெய்வத்தின் நினைப்பாகவே இருக்கும். குலதெய்வ வழிபாடு செய்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியிருக்கும். ஆனால் குலதெய்வ வழிபாட்டை செய்ய முடியாத சூழ்நிலை அமையும். குலதெய்வ கோவிலுக்கு போக முடியாது. குலதெய்வத்தை நினைத்து வீட்டில் பூஜை செய்ய முடியாது. வீட்டில் எந்த ஒரு நல்ல காரியமும் நடக்காது. வீட்டில் இருக்கும் குடும்ப தலைவிக்கு மன சங்கடம் இருக்கும். ஏதோ ஒரு உறுத்தல் மனதளவில் இருந்து கொண்டே இருக்கும்.

இப்படிப்பட்ட சங்கடமான சூழ்நிலையில் உங்களுடைய வீட்டில் பின் சொல்லக்கூடிய பிரச்சனை வருகிறதா என்று கொஞ்சம் கவனியுங்கள். அதாவது  வீட்டில் குலதெய்வம் தங்கக்கூடிய இடம் என்றால் அது நிலைவாசல் படிதான். நிலைவாசல் கதவு என்று கூட வைத்துக் கொள்ளலாம். நிலை வாசல் படி சம்பந்தப்பட்ட பிரச்சனை ஒரு வீட்டில் அதிகமாக இருந்தால், அந்த வீட்டில் குலதெய்வ தங்கவில்லை என்றுதான் அர்த்தம்.

- Advertisement -

நிலை வாசல் கதவு திடீரென்று பழுதடையும். நிலை வாசல் கதவை சரியாக சாத்த முடியாது. நிலைவாசல் படியை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து பூஜை செய்ய முடியாத சூழ்நிலை அமையும். நிலை வாசல்கால் இழந்து காணப்படும். நிலைவாசல் தாழ்ப்பால் சரியாக பூட்டாது. சில வீடுகளில் நிலைவாசல் பூட்டு தாழ்ப்பால் திருடு போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட அறிகுறிகள் எல்லாம் உங்கள் வீட்டில் இருக்கிறது. கூடவே மனக்கசப்பான சூழ்நிலையும் நிலவி வருகிறது என்றால் நிச்சயமாக குலதெய்வ குத்தம் உள்ளது என்றுதான் அர்த்தம். குலதெய்வம் உங்கள் நிலைவாசைலை பாதுகாக்க அந்த இடத்தில் அமரவில்லை என்று தான் அர்த்தம்.

இப்படிப்பட்ட சங்கடமான சூழ்நிலையை சரி செய்ய என்ன செய்வது. உங்களுடைய வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். ஒரு மனப்பலகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே ஒரு சிவப்பு நிற விரிப்பை விழித்துக் கொள்ளுங்கள். அல்லது ஆரஞ்சு நிற விரிப்பு கூட விரிக்கலாம். ஒரு பித்தளை தாம்பூல தட்டு அல்லது செம்பு தட்டை அந்த விரிப்பின் மேல் வைத்து, அந்த தட்டிற்கு மேலே மண் அகல் தீபத்தை வைத்து, இலுப்பை எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி குலதெய்வத்தை முழு மனதோடு அழைக்க வேண்டும். இந்த விளக்குக்கு பக்கத்தில் ஒரு சொம்பு தண்ணீரை வையுங்கள். சுத்தமான அந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம், பழம் மஞ்சள் தூள், பன்னீர் சேர்த்து வாசமான தண்ணீரை குலதெய்வத்திற்காக படைக்க வேண்டும். சொம்பு கட்டாயம் பித்தளை அல்லது செம்பு சொம்பாக இருக்கட்டும்.

- Advertisement -

இப்படி தீபம் ஏற்றி வைத்துவிட்டு இந்த தீபத்தின் முன்பு அமர்ந்து குலதெய்வத்தின் பெயரை 108 முறை உச்சரித்து செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, குலதெய்வத்தை உங்கள் வீட்டிற்குள் வரும்படி சொல்லுங்கள். சீக்கிரம் குலதெய்வ கோவிலுக்கு வந்து முறைப்படி பூஜையை செய்வதாக வேண்டிக் கொள்ளுங்கள். இதே போல தொடர்ந்து 48 நாட்கள் இந்த தீபத்தை ஏற்றலாம். 48 நாட்களும் சொம்பில் இருக்கக்கூடிய பழைய தண்ணீரை மாற்ற வேண்டும். அந்த எலுமிச்சம் பழம் தண்ணீரில் ஊறி நல்ல நிலையை இழக்கும் போது மாற்றினால் போதும். (இடையே பெண்களுக்கு விளக்கு ஏற்ற முடியாத சூழ்நிலை வரும்போது அந்த நாட்களை தவிர்த்து விட்டு நாட்களை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.)

இதையும் படிக்கலாமே: உங்கள் வீடு இப்படி இருந்தால், சனி பகவான் சந்தோஷமாக சம்மணம் போட்டு அமர்ந்து கொள்வார். வீட்டில் சனிபகவானுக்கு பிடித்த இடம் எது?

இப்படி தொடர்ந்து 48 நாள் குலதெய்வத்தை வேண்டி வீட்டிற்குள் அழைக்கும் போது நிச்சயமாக உங்கள் வீட்டிற்குள் குலதெய்வம் வரும். குலதெய்வக் குற்றம் ஏதாவது இருந்தால் கூட அதற்கான மன்னிப்பு வழங்கப்படும். கூடுமானவரை சீக்கிரத்தில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய பாருங்கள். 48 நாட்கள் கழித்து நிச்சயமாக உங்களுடைய மனது நிம்மதி அடையும். நிச்சயமாக குடும்பத்தில் நல்லது நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -