உங்கள் வீடு இப்படி இருந்தால், சனி பகவான் சந்தோஷமாக சம்மணம் போட்டு அமர்ந்து கொள்வார். வீட்டில் சனிபகவானுக்கு பிடித்த இடம் எது?

- Advertisement -

நவகிரகங்களில் ஒருவராக திகழ்பவர் சனி பகவான். இவரின் பெயரை கேட்டதுமே நமக்குள் அப்படி ஒரு பயம் தோன்றி விடுகிறது. உண்மையிலேயே சனி பகவான் அத்தகைய கெடுதல்களை செய்யக்கூடியவரா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஒரு மனிதன் தன் நிலை தவறி தான் இந்த பூமிக்கு வந்த தன் நோக்கம் அறியாமல் தீய வழியில் செல்லும் போது, அவனை சமநிலைப்படுத்தி அவனின் பிறவிப் நோக்கத்தை புரிய வைப்பதே இவரின் பணி. இந்த காலகட்டத்தில் தான் சனி பகவான் ஒருவரை பிடித்து அவர்களுக்கு புரிய வைப்பதற்காக சில சங்கடங்களை தருகிறார். யாராக இருந்தாலும் அவரவர் விதிப்படி அவர் செய்த தீமைக்கான பலனை அனுபவித்து தீர வேண்டும். அப்படி நம் தவறுகளை நமக்கு சுட்டிக்காட்டி திருத்துவது யார்? அத்தகைய வேலையை செய்பவர் தான் சனி பகவான். ஆனால் நீங்கள் நன்றாக ஒரு விஷயத்தை கவனித்தீர்களானால் புரியும் இவர்களின் காலத்தில் படும் துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் இவர் விலகி செல்லும் வேலையில் அனைத்தையும் சுகமாக மாற்றித் தந்த பிறகு தான் இவர் விலகுவார்.

ஆனால் சில நேரங்களில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் இவரை நாமே வலிய சென்று வரவழைத்து கொள்வதும் உண்டு. அப்படியான விஷயங்கள் என்னவென்று தான் இப்போது இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

உங்கள் வீட்டில் எங்கெல்லாம் குப்பை மேடுகளாகவும், அசுத்தமாகவும் காட்சியளிக்கிறதோ, அங்கெல்லாம் நிச்சயமாக சனி பகவானுடைய ஆட்சி இருக்கும். அதே போல் வீட்டின் திரை சீலையை நாம் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். மற்ற அழுக்கு துணிகளை விட இந்த திரை சிலைகளில் தான் சனி பகவானுடைய ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும். அடுத்து நாம் உண்ணும் உணவு மேஜை சாப்பிட்ட பிறகு துடைத்து அந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் சனி பகவான் அங்கேயே குடிகொண்டு விடுவார். வீட்டைச் சுற்றி அழுக்கு நீ தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டை சுற்றியோ அல்லது வீட்டுக்குள்ளே அழுக்கு தண்ணீர் தேங்கி அதில் இருந்து அதில் கெட்ட வாடை வர ஆரம்பித்தால் அப்போதே அங்கு அவரின் ஆட்சி ஆரம்பித்து விடுகிறது.

அனைத்திலும் விட முக்கியமான விஷயம் என்னவென்றால் முழுமை இல்லாத பொருள் அதாவது உடைந்த கண்ணாடி, உடைந்த பொருட்கள், உடைந்த பொம்மை, உடைந்த பாத்திரம், எந்த ஒரு பொருள் அதனுடைய முழு தன்மையை இழந்து இருக்கிறதோ அந்த பொருள்களை எல்லாம் அவரின் வாசம் இருக்கும். அதே போல் எப்போதும் அழுகுரல் கேட்கின்ற வீடு. விளக்கு ஏற்றாமல் இருள் சூழ்ந்த இடம். இவை எல்லாம் சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமானது.

- Advertisement -

அடுத்து தேவையற்ற இரும்புகள் துருவேறி நம் வீட்டில் இருந்தால் நிச்சயமாக அவர் அங்கிருந்து செல்லவே மாட்டார். ஏனெனில் சனி பகவான் ஆட்சி செய்யும் பொருட்களிலே மிகவும் முக்கியம் இரும்பு. நாம் உபயோகிக்காமல் துருவேற வைத்திருக்கும் பட்சத்தில் கட்டாயமாக அவர் சப்பனமிட்டு அங்கேயே அமர்ந்து விடுவார்.

இதையும் படிக்கலாமே: நிற்காமல், பணம் நிலை வாசலுக்குள் வந்து கொண்டே இருக்க வேண்டுமா? நிலை வாசலில் நின்றபடி இந்த முடிச்சை கட்டி தொங்க விடுங்கள்.

நம்முடைய எண்ணமும் செயலும் தான் நம் வாழ்க்கை . நீங்கள் எதை நினைத்து எதை யோசித்து எதைப் பேசிக் கொண்டிருக்கிறீர்களா அதுவாகவே நீங்கள் மாறி விடுவீர்கள். இத்தனை நாள் இது குறித்து விழிப்பு நமக்கு இல்லாமல் இருந்திருந்தால் இந்த பதிவில் படித்து தெரிந்து கொண்ட பிறகு நான் நம் வாழ்க்கை முறையை நல்ல முறையில் மாற்றி அமைத்து நலமான வாழ்வு வாழ்வோம்.

- Advertisement -