குலதெய்வம் உங்கள் வீட்டில் குடி கொள்ளவில்லையா? நிச்சயம் அந்த தெய்வமே உங்கள் வீடு தேடி வரும். இந்த பொட்டை உங்கள் குல தெய்வத்தின் திரு உருவ படத்திற்கு இட்டு அழைத்தால்!

kuladheivam

ஒரு வீடு என்று இருந்தால், அந்த வீட்டையும், அந்த வீட்டில் வாழ்பவர்களுடைய சந்ததியினரையும் காப்பாற்ற குலதெய்வம் என்று ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு வீட்டின் குலதெய்வமானது நிச்சயம், அந்த வீட்டில் குடி கொண்டிருக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் குலதெய்வம் குடிகொண்டுள்ளதா? குலதெய்வம் வீட்டில் இருக்கிறதா? இல்லையா? என்ற சந்தேகம் உங்களுக்கு ஒரு துளி இருந்தால் கூட, நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். அதே சமயம் உங்களுடைய குல தெய்வம் எது என்று தெரியவில்லையா? உங்களுக்காகவும் இந்த பரிகாரம்.

poojai

முதலில் எந்த தெய்வமாக இருந்தாலும் நம் மனம் உருகி உண்மையான பக்தியோடு அழைத்துமேயானால் அந்த தெய்வம் நம் வீடு தேடி வரும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இதை தவிர்த்து சில வீடுகளில் குல தெய்வங்கள், சில எதிர்மறை ஆற்றலின் மூலம் கட்டுப்பட்டு, வீட்டு வாசலுக்கு வெளியே நிற்கும். அதாவது நில வாசலைத் தாண்டி, அந்த குல தெய்வத்தால் வீட்டிற்குள் நுழைந்து, குடும்பத்தில் வரக்கூடிய பிரச்சனைகளைத் தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலை நிலவும்.

தெய்வத்திற்கே இந்த சோதனையா? என்று சில பேர் சிந்திக்கலாம். ஆனால், இதுதான் உண்மை. நிறைய பேர் வீட்டில் குலதெய்வ கட்டு விழுந்திருந்தால் அந்த வீட்டில் பிரச்சினைகள் தலைவிரித்தாடும் என்பதும் நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். சரி, உங்களுடைய வீட்டில் குலதெய்வம் இல்லை என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தாலும் சரி, அப்படி இல்லை என்றால் உங்களுக்கு குலதெய்வமே தெரியாது என்றாலும் சரி, அந்த குல தெய்வத்தை உங்கள் வீட்டிற்கு அழைக்க ஒரு சுலபமான பரிகாரத்தை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

பொதுவாகவே வாசனை நிறைந்த பொருட்கள் என்றால் அது இறைவனுக்கு பிடிக்கும். வாசனை மிகுந்த பொருட்களுக்கு நிச்சயம் அந்த கடவுள் வசப்படுவார் என்றும் சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். அந்த வாசனைப் பொருட்களில் ஒன்று தான் அரகஜா. இந்த அரகஜா அபிஷேகம் செய்யும்போது கோவில்களில், சிலைகளின் மேல் பூசி பயன்படுத்துவார்கள். ஏனென்றால் இறைவன் அந்த இடத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டும் என்பதற்காக.

- Advertisement -

உங்களுடைய வீட்டிலும் பூஜை அறையில் உங்களுடைய குலதெய்வத்தின் திருவுருவப்படம் இருந்தால், அந்த திருவுருவப் படத்திற்கு இந்த அரகஜா வால் பொட்டு வைத்து, அதன்மேல் குங்குமப் பொட்டு வைத்து வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்யவேண்டும். மனமுருகி வெளியில் இருக்கும் தெய்வம் வீட்டிற்குள் நிச்சயம் வரவேண்டும் என்ற பிரார்த்தனையை தொடர்ந்து செய்து வந்தால், வீட்டிற்கு வெளியே நிற்கும் தெய்வம் நிச்சயம் உள்ளே வரும் என்பதில் சந்தேகமே கிடையாது.

sembu-sombu

அடுத்தபடியாக உங்களுக்கு குலதெய்வம் எது என்று தெரியவில்லை. என்ன செய்வது ஒரு பித்தளை கலச சொம்பு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் முழுக்க சுத்தமான தண்ணீரால் நிரப்பி விடுங்கள். அந்த தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை போட்டுக் கொள்ளுங்கள். ஒரு சொட்டு அரகஜாவை அந்த தண்ணீரில் கலந்து விடுங்கள். அந்த பித்தளை சொம்பு சுற்றி, அரகஜாவால் பொட்டு வைத்து, குங்குமப் பொட்டு வைத்து அந்த தண்ணீருக்குள் இரண்டு மாஇலைகளை போட்டு, அதை உங்களுடைய குல தெய்வமாக பாவித்து, எங்களுடைய குலதெய்வம் எது என்று தெரியவில்லை. இருப்பினும், தெரியாத குலதெய்வமாக இருந்தாலும் உன்னை நினைத்து நாங்கள் வழிபாடு செய்கின்றோம் என்று வேண்டிக்கொண்டால், உங்களுடைய குல தெய்வம் உங்கள் வீட்டில் குடிகொள்ளும் என்பதிலும் ஒரு துளிகூட சந்தேகமே கிடையாது.

உங்களுடைய குலதெய்வம் எது என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் குல தெய்வத்திற்கு தெரியும். நீங்கள், தெரியாத குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்யக்கூடிய பக்தி! வீட்டில் தீர்க்கமுடியாத பிரச்சனை இருந்தால், உங்களுடைய குலதெய்வத்தை அரகஜா வைத்து இந்த முறைப்படி அழைத்து, பிரச்சனைகள் தீர வேண்டுமென்று வேண்டிக் கொண்டாலே போதும்.

வீட்டில் தீர்க்க முடியாத பிரச்சினை கவலை உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் இந்த முறைப்படி குலதெய்வத்தை மனதார வேண்டி, வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜை செய்வது போலவே சிறிய பூஜை செய்து, அந்த இறைவனை வீட்டிற்குள் அழைக்கலாம் தவறொன்றும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
எலுமிச்சை பழத்தை கொண்டு உங்களுடைய வீட்டில் இந்த 1 தவறை மட்டும் செய்யாதீர்கள்! உங்களுடைய சந்ததியினரை கஷ்டத்தில் இருந்து யாராலும் காப்பாற்ற முடியாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.