உங்கள் குலதெய்வம், உங்கள் வீட்டில் இல்லை என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்.

sambrani-kuladheivam
- Advertisement -

தெய்வ கடாட்சம் ஒரு வீட்டில் இருக்கின்றதா என்பதை நம்மால் பார்த்த உடனேயே, அந்த வீட்டிற்குள் நுழைந்த உடனேயே, கண்டுபிடித்துவிட முடியும். வீட்டிற்குள் நுழைந்ததும் ஒரு நிம்மதி நமக்கு வரும். நமக்கு மட்டுமல்ல நம் வீட்டிற்குள் நம்மை தவிர வெளியாட்கள் நுழைந்தாலும் அவர்களுக்கு ஒரு கோவிலுக்குள் நுழைந்தது போல உணர்வு ஏற்படும். ‘இந்த வீட்டில் இருந்து வெளியே செல்ல மனம் வரவில்லை. இந்த வீட்டிலேயே தங்கி விடலாம் போல இருக்கிறது, இந்த வீட்டிற்குள் வந்தால் ஏதோ ஒரு வகையில் மனம் நிம்மதியாக உள்ளது’, என்று நம் வீட்டிற்கு வரக்கூடிய நம் சொந்தக்காரர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். இப்படிப்பட்ட வீடானது நிச்சயம் இறையருள் நிறைந்த வீடாகத் தான் இருக்கும்.

kuladheivam

சில வீடுகளுக்குள் நுழைந்து அடுத்த நொடியே, வீட்டில் இருக்க முடியாது. ‘எப்போதுடா இந்த வீட்டிலிருந்து கிளம்பி வெளியே செல்வோம்’ என்ற ஒரு நிலைமைக்கு நாம் வந்துவிடுவோம். இப்படிப்பட்ட வீட்டில் நிச்சயமாக தெய்வங்கள் வாசம் செய்யவில்லை. பதிலாக ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றல் துர்சக்தி தரித்திரம் அந்த வீட்டில் குடியிருப்பதாக தான் அர்த்தம். மேல் சொன்ன இரண்டு விஷயங்களும் பொதுவான கருத்து. நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். இதுதவிர குலதெய்வத்தின் அருள் ஒரு வீட்டிற்கு இருக்கிறதா இல்லையா, குலதெய்வம் ஒரு வீட்டில் வாசம் செய்கிறதா இல்லையா என்பதை எதை வைத்து நாம் தெரிந்து கொள்வது.

- Advertisement -

குலதெய்வத்தின் அருள் இருக்கும் வீட்டில் மன நிம்மதி யானது எப்போதுமே இருக்கும். பெரிய அளவில் கஷ்டங்கள் வராது. அப்படியே மலை போல் கஷ்டம் வந்தாலும், அந்த கஷ்டம் பனிபோல உருகி விடும். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ குலதெய்வக் கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வீட்டில் தெய்வ வழிபாட்டின் மூலம் ஒரு மன நிம்மதி கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு எந்த நேரத்தில் எந்த நல்ல காரியம் நடக்க வேண்டுமோ, அது அது அந்தந்த நேரத்தில் கட்டாயம் சரியான முறையில் நடந்து முடிந்துவிடும். ‌ இவை அனைத்தும் சீரும் சிறப்புமாக ஒரு வீட்டில் நடந்தால் அந்த வீடு குலதெய்வத்தின் ஆசிர்வாதம் பெற்ற வீடாக சொல்லிவிடலாம்.

kuladheivam

நிறைய பேர் வீடுகளில் குலதெய்வ கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்பே அமையாது. குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும், என்று முயற்சிகளை மேற்கொள்வார்கள். குலதெய்வக் கோயிலுக்கு செல்லக்கூடிய தேதியையும் கூட நிர்ணயித்து விடுவார்கள். ஆனால் அந்த தேதியில் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாமல் ஏதோ ஒரு தடை வந்துவிடும்.

- Advertisement -

வீட்டில் குழந்தைகளுக்கு திருமணம் நடக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும். திருமணம் நடந்திருந்தால் குழந்தை பேறு தள்ளிப் போகும். வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு வகையில் நிரந்தரமாக நோய்நொடிகள் வந்து கொண்டே இருக்கும். குலதெய்வம் அல்லாமல் வீட்டில் சாதாரணமாக வெள்ளிக்கிழமை பூஜையை கூட செய்ய முடியாது. அப்படியே கஷ்டப்பட்டு ஏதாவது பூஜை புனஸ்காரங்களை வீட்டில் செய்து விட்டால் அடுத்த நொடியே வீட்டில் சண்டை சச்சரவுகள் பிரச்சனைகள் மன நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். வீட்டில் இருப்பவர்களில் அடுத்தடுத்து யாராவது ஒருவர் எதிர்பாராத துர் மரணத்தால் உயிர் இழப்பார்கள்.

kula-dheivam

இப்படிப்பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஒரு வீட்டில் இருந்தால் நிச்சயமாக அந்த வீடு குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை பெற வில்லை. அந்த வீட்டில் குலதெய்வம் தங்க விலை என்று தான் சொல்லவேண்டும். சரி இவ்வளவு கஷ்டங்கள் வந்துவிட்டது. என்ன செய்வது, குலதெய்வத்தின் பாதங்களில் விழுவதுதான் ஒரே வழி. வீட்டில் குலதெய்வத்தின் திருவுருவப் படத்தை வைத்து 48 நாட்கள் தொடர்ந்து குலதெய்வத்தை முழுமூச்சாக நினைத்து குல தெய்வத்தின் முன், மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து, குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வந்தே ஆகவேண்டும் உங்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று உங்களால் முடிந்த வேண்டுதல்களை வைத்துக்கொள்ள வேண்டும்.

kula-dheivam

வீட்டிலிருக்கும் குடும்பத் தலைவரும் குடும்பத் தலைவியும் குல தெய்வத்தின் நாமத்தை வீட்டில் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆயிரம், பத்தாயிரம் லட்சம் என்ற கணக்கெல்லாம் கிடையாது. கோடி முறை அழைத்து குலதெய்வத்தை உங்கள் வீட்டிற்கு அழையுங்கள். நிச்சயமாக குலதெய்வம் உங்கள் வீடு தேடி வரும். உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -