இந்த ஒரு விஷயத்தை மட்டும் சரியாக செய்தால் போதும் குலதெய்வம் உங்கள் கண் முன்னே வந்து நின்று பேசும்.

sambrani-kuladheivam
- Advertisement -

ஆண்டாண்டு காலமாக நம்முடைய முன்னோர்கள் தலைமுறையில் இருந்து பின்பற்றி வரக்கூடிய ஒரு வழிபாடு தான் இந்த குலதெய்வ வழிபாடு. இத்தனை தலைமுறைகாக அந்த குலதெய்வத்தை நாம் வழிபாடு செய்கின்றோம். என்றாவது அந்த குலதெய்வம் நம் முன்னே வந்து நின்று இருக்கிறதா. கலியுகத்தில் தெய்வம் கண் முன்னே வந்து நிற்காது. அதாவது புற கண் முன்னே வந்து நிற்காது. அக கண்களுக்கு முன்னே வந்து நின்று நிச்சயமாக பேசும். அதாவது வெளியில் இருக்கும் இரண்டு கண்கள், முகத்தில் இருக்கும் இரண்டு கண்களில் குலதெய்வத்தை காண முடியாது. மனக்கண்களால் குலதெய்வத்தை காண ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிய வழிபாடு இதோ உங்களுக்காக.

குலதெய்வத்தை காண செய்ய வேண்டிய வழிபாடு:
குலதெய்வ வழிபாடு செய்வதற்கு ஒரு வளர்பிறையில் நல்ல நாளாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வளர்பிறை வெள்ளிக்கிழமை பௌர்ணமி தினங்களில் இந்த வழிபாட்டை செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. சுத்தமான பசுஞ்சான விபூதியை எடுத்துக்கொண்டு, அதில் கொஞ்சமாக பன்னீர் விட்டு பிசைந்தால் உருண்டை பிடிக்க வரும். சின்ன சின்ன விபூதி உருண்டைகள் கோலிகுண்டு சைஸில் மூன்று உருண்டைகளை தயார் செய்து ஒரு தட்டில் வைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். (வழிபாட்டை தொடங்குவதற்கு முன்பு வழக்கம்போல பூஜைக்கு என்னென்ன எல்லாம் தேவையோ வீட்டை சுத்தம் செய்வது பூஜையே அலங்காரம் செய்வதெல்லாம் உங்கள் வேலை.)

- Advertisement -

அந்த விபூதி உருண்டைகளுக்கு பக்கத்தில் ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீர் வைக்கவும். அடுத்து ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் குல தெய்வத்தின் பெயரை சொல்லி அழைத்து குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

மனம் உருகி உங்கள் குலதெய்வத்தை உண்மையான பக்தியோடு அழைத்தால் அந்த தெய்வம் இந்த விபூதி உருண்டையில் வந்து அமர்ந்து விடும். மூன்று நாட்கள் அந்த விபூதி உருண்டை அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். தினமும் குலதெய்வத்தின் பெயரை 27 முறை உச்சரித்து அதற்கு ஊதுவத்தி காண்பியுங்கள். மூன்று நாட்கள் கழித்து அந்த விபூதி உருண்டை காய்ந்து உடைந்து போனாலும் பரவாயில்லை. தவறு கிடையாது. அதை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு அதில் இரண்டு வேப்ப இலைகளை போட்டு வைத்து கொள்ளுங்கள். தினமும் வீட்டில் இருப்பவர்கள் அந்த விபூதியை குலதெய்வத்தின் நாமத்தை சொல்லி நெற்றியில் இட்டு வர வேண்டும்.

- Advertisement -

தினம் தினம் குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி அந்த விபூதியை நெற்றியில் இட்டு வர, குலதெய்வம் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் உங்களுக்கு காட்சி தரும். அது கனவிலும் காட்சி தரலாம், அல்லது வேறு ஏதாவது ஒரு மனித ரூபத்திலும் உங்களுக்கு வந்து ஒரு வார்த்தையை சொல்லலாம்.

குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய ஏதாவது ஒரு அறிகுறி உங்களுக்கு நிச்சயம் தென்படும்‌. குலதெய்வத்தை தினம் தினம் நினைக்க வேண்டும் அது மட்டும் தான் நம்முடைய வேலை. பிறகு நம் குடும்பத்தை பாதுகாக்க கூடிய வேலையை அந்த குலதெய்வம் செய்ய தொடங்கிவிடும். இது ஒரு மிக மிக எளிமையான பரிகாரம்தான். பூஜைக்கு அந்த ஒரு டம்ளர் தண்ணீர் வைத்திருக்கிறீர்கள் அல்லவா, அதை எடுத்து செடி கொடிகள் உள்ள இடத்தில் ஊற்றி விடலாம் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: மெட்டி போடும் பெண்கள் கவனத்திற்கு! இந்த தவறை மட்டும் நீங்க செய்யாதீங்க. இது குடும்பத்திற்கு கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

குலதெய்வ வழிபாடு செய்யும் போது மணக்க மணக்க சாம்பிராணி தூபம் வாசம் இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் மல்லிப்பு கட்டாயம் வாங்கி குலதெய்வ படத்திற்கு வையுங்கள். குலதெய்வ திருவுருவப்படம் இருந்தால் அதற்கு அலங்காரம் செய்து இந்த பூஜையை செய்வது சிறப்பு. நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான மேல் சொன்ன இந்த விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -