மெட்டி போடும் பெண்கள் கவனத்திற்கு! இந்த தவறை மட்டும் நீங்க செய்யாதீங்க. இது குடும்பத்திற்கு கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

metti
- Advertisement -

நம்முடைய இந்து சாஸ்திரப்படி திருமணம் ஆன பெண்கள் எல்லோருமே காலில் கட்டாயம் மெட்டி அணிந்திருக்க வேண்டும். இதற்கு பின்னால் அறிவியல் ரீதியாக நிறைய காரணங்கள் இருந்தாலும், நம்முடைய சாஸ்திரப்படி திருமணமான பெண்களுக்கு உரிய அடையாளமாக இது சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் திருமணம் ஆன பெண் உங்களை அடுத்த ஆடவர் தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து விடக்கூடாது என்பதற்கான ஒரு அடையாளமும் கூட இது. இந்த மெட்டியை வீட்டில் இருக்கும் பெண்கள் எப்படி பராமரிக்க வேண்டும். எப்படி அணிய வேண்டும், எப்படி அணியக் கூடாது, என்பதை பற்றிய ஆன்மீகம் சொல்லும் சில தகவல்கள் இதோ உங்களுக்காக.

பெண்கள் மெட்டி அணியும் முறை:
பொதுவாக கட்டை விரலுக்கு அடுத்து உள்ள விரலில் தான் மெட்டி அணிவோம். இன்று கட்டை விரலுக்கு அடுத்த விரல், அதற்கு அடுத்த விரல் என்று நிறைய மெட்டி போடுவது வழக்கமாகிவிட்டது. டிசைன் டிசைனாக எத்தனையோ வடிவத்தில் இந்த மெட்டி வந்து விட்டது. ஆனால் அந்த காலத்தில் இருந்து புழக்கத்தில் இருக்கும் உருட்டையான அந்த சாதாரண மெட்டியை பயன்படுத்துவது ரொம்ப ரொம்ப நல்லது.

- Advertisement -

மெட்டி போடும்போது கட்டை விரலுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு விரலில் மட்டும் மெட்டி போட்டுக் கொள்ளுங்கள். அதற்கு பக்கத்தில் இருக்கும் நடு விரலில் கூடுமானவரை மெட்டி போடுவதை தவிர்ப்பது நல்லது. பேஷனுக்காக கொண்டுவரப்பட்ட பழக்கம் தான் இந்த நடு விரலில் மெட்டி போடும் பழக்கம். பெண்கள் கால்களில் மெட்டி இரண்டு விரல்களில் இருக்கக் கூடாது. ஒற்றைப்படையில் தான் இருக்க வேண்டும்‌.

சிலபேர் இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுப்பலாம். அப்போது மூன்று விரல்களில் மெட்டி போடலாமா என்று. மூன்று விரல்களில் மெட்டி போட்டால் சரியா தவறா என்ற விவாதத்திற்குள் செல்வதை விட, கட்டை விரலுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு விரலில் மெட்டி போடுவதே சரி என்று சொல்லாம்.

- Advertisement -

மூன்று விரல்களில் மெட்டி போடலாம் என்று எந்த இடத்திலும் நமக்கு சொல்லி வைக்கவில்லை. அந்த காலத்தில் வாழ்ந்த நம்முடைய அம்மாக்கள், பாட்டிகளும் அப்படிப்பட்ட மெட்டியை போட்டதும் கிடையாது. ஆகவே நம்முடைய முன்னோர்கள் பழக்க வழக்கத்திலேயே நாமும் பின்பற்றிக் கொள்வோம். கட்டை விரலுக்கு பக்கத்தில் மட்டும் மெட்டி போடுங்கள். கூடுமானவரை உரட்டையாக இருக்கும் இரண்டு மெட்டிகளை ஒன்றாக சேர்த்து அணிவது வீட்டிற்கு சுபிட்சத்தை கொடுக்கும்.

அடுத்து, மெட்டியாக இருந்தாலும் சரி, கொலுசாக இருந்தாலும் சரி, அதிக அளவில் தேய்ந்து இருக்கக் கூடாது. அது குடும்பத்திற்கு ஆகாது. மெட்டியை ஆறு மாதத்திற்கு ஒருமுறை, அப்படி இல்லை என்றால் ஒரு வருடத்திற்கு ஒருமுறை புதுசாக மாற்றிக் கொள்ளுங்கள். காலில் போட்டிருக்கும் கொலுசு ரொம்பவும் தேய்ந்து அறுபடும் நிலையில் இருந்தால் கொலுசில் இருக்கும் சங்கிலி எல்லாம் அறுபட்டு இருந்தால் அதை கழட்டி உடனடியாக மாற்றிக் கொள்ளவும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் முன்னேற்றத்தை தடுக்க கூடிய அனைத்தையும் தகர்த்தெறியக் இந்த விளக்கை ஏறினால் போதும். பணத் தடை, வியாபாரத் தடை, காரியத்தடை என அனைத்தையும் போக்கும் அற்புத பரிகாரம்.

மேல் சொன்ன விஷயங்களை கடைபிடிக்கும் போது நிச்சயமாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் நன்மை, அந்த குடும்பத்திற்கும் நன்மையே. ஆன்மீகம், சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த விஷயங்களை எல்லாம் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -