புத்திர தோஷம், குழந்தை இறப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க இதை செய்யுங்கள்

kulanthai-baby

பிறப்புகளில் மனித பிறவி என்பது மிகவும் அற்புதமான ஒரு பிறவி ஆகும். மனிதர்களாக பிறக்க ஒருவர் மிகுந்த புண்ணிய பலன்களை பெற்றிருக்க வேண்டும் என்பது ஞானிகளின் கருத்தாகும். இப்படிப்பட்ட மனித பிறவியை ஒருவருக்கு தருவது அவர்களின் தாய் மற்றும் தந்தை ஆவர். ஒரு சில தம்பதிகளுக்கு மட்டும் குழந்தை இறந்தே பிறப்பது, பிறந்த குழந்தையும் சில நாட்களிலேயே இறப்பது போன்ற நிலை ஏற்படுகிறது. இவற்றிற்கெல்லாம் பரிகாரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Baby

குழந்தை பிறப்பில் சங்கடங்கள் ஏற்பட பல காரணம் இருந்தாலும், ஜோதிட ரீதியான காரணமும் முக்கிய பங்கு வகிக்கிறது. கணவன் – மனைவி ஆகிய இருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 5 இடமான புத்திர பாக்கிய ஸ்தானத்தில் ராகு – கேது கிரகங்கள் இருந்தாலும் அல்லது இருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் கிரகத்திற்கு 4 ஆவது அல்லது 8 ஆவது வீட்டில் செவ்வாய் கிரகம் இருந்தாலும், அந்த செவ்வாயுடன் ராகு சேர்ந்திருந்தாலும் குழந்தைகள் பிறந்து இறந்து விடுவது, அடிக்கடி கருகலைவது போன்ற சங்கடங்கள் ஏற்படும். இத்தகைய தோஷங்களை போக்கும் பரிகாரங்களை இங்கு காண்போம்.

ஒருவருக்கு குழந்தை பாக்கியத்தை தரும் நவகிரக நாயகனாக குரு பகவான் இருக்கிறார். அந்த குரு பகவானுக்குரிய வியாழக்கிழமை தினத்தன்று குழந்தை வரம் வேண்டும் பெண்கள் அவர்களின் வீட்டிற்கு அக்கபக்கத்தில் இருக்கும் குழந்தை பெற்ற பெண்களிடமிருந்து வெற்றிலை பாக்குடன், ஒரு எலுமிச்சம் பழம் சேர்த்து தங்கள் புடவையின் முந்தானையில் தானமாக வாங்கி கொள்ள வேண்டும். அப்பொருட்களை ஒரு வெள்ளை துணியில் முடிந்து பூஜையறையில் வைத்து, ஒன்பது நாட்களுக்கு உங்களுக்கு நீண்ட ஆயுள் கொண்ட குழந்தை வரம் வேண்டி பூஜை செய்ய வேண்டும். பத்தாவது நாளில் அந்த பூஜை செய்யப்பட்ட பொருட்களை ஆறு, ஏரி போன்றவற்றில் வீசி விட வேண்டும்.

baby-movements

மேற்கூறிய பரிகாரத்தை செய்ய சில பெண்களுக்கு சற்று தயக்கமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் அவர்கள் வசிக்கும் வீட்டின் வடக்கு பகுதியில், குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் இருவரும் சேர்ந்து ஒரு ஜான் அளவிற்கு குழி தோண்டி, அதில் கால் லிட்டர் பசும்பாலை ஊற்றி மனதார தங்களுக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய குழந்தை வரம் வேண்டும் என்று கூறி, அக்குழியை மூடி விட வேண்டும். மேலே கூறப்பட்ட இரண்டு பரிகாரங்களை செய்வதால் புத்திர தடை தோஷங்கள் நீங்குவதோடு, கரு கலைந்து விடுவது, இறந்த நிலையில் குழந்தை பிறப்பது, பிறந்த சிறிது காலத்திலேயே குழந்தை இறப்பது போன்ற தோஷங்கள் நீங்கி நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் நிறைந்த குழந்தைகள் பிறக்கும்.

இதையும் படிக்கலாமே:
அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கான பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kulanthai pirappu pariharam in Tamil. It is also called as Puthira dosham neenga in Tamil or Pillai peru pariharam in Tamil or Arokiyamana kulanthai pirakka in Tamil or Kulanthai bakkiyam pariharam in Tamil.