அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் பொருள் வரவு பெருக இவற்றை செய்ய வேண்டும்

hastam-chandran

பகலெல்லாம் சூரியனின் வெப்பம் நம்மை வாட்டி வதக்கினாலும், இரவில் அதிலும் குறிப்பாக பௌர்ணமி தினங்களில் வானில் தோன்றும் முழுமையான சந்திரனின் தோற்றம் நமது மனதை குளிர செய்கிறது.இதனால் தான் நவகிரகங்களில் சந்திரனை மனோகாரகன் என நமது முன்னோர்கள் வகைப்படுத்தினர். அப்படியான சந்திரன் பகவானின் ஆதிக்கத்தில் வரும் ஒரு நட்சத்திரம் தான் “அஸ்தம்” நட்சத்திரம். இந்த நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் பல நன்மைகளை பெற செய்ய வேண்டிய பரிகார முறைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Chandra Baghavan

27 நட்சத்திரங்களின் வரிசையில் பதிமூன்றாவது நட்சத்திரமாக வருவது அஸ்தம் நட்சத்திரம் ஆகும். இந்த அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதியாக சந்திர பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் தேவதையாக சாஸ்தா தெய்வம் இருக்கிறார். அஸ்த நட்சத்திரம் கன்னி ராசிக்குரிய ஒரு நட்சத்திரமாக இருக்கிறது. கன்னியின் ராசியின் அதிபதியான புதன், அஸ்த நட்சத்திர அதிபதியான சந்திரன் ஆகிய இரு கிரகங்களின் தன்மை இருப்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிக சிறந்த அறிவாளியாகவும், பல விடயங்களை கற்றறிந்த பண்டிதர்களாகவும் இருப்பார்கள்.

அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் அனைத்திலும் வெற்றி பெறவும், செல்வ சேர்க்கை உண்டாகவும் திங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வர வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை தஞ்சையில் இருக்கும் சந்திர பகவானின் தலமான திங்களூர் கோயிளுக்கு சென்று இறைவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டு வர வேண்டும்.

chandra bagawan

உங்களால் முடிந்த போதெல்லாம் பசு மாடுகளுக்கு அகத்தி கீரை, புண்ணாக்கு, ஊற வைத்த பச்சை பயிறு போன்றவற்றை சாப்பிட கொடுக்க வேண்டும். பௌர்ணமி தினங்களில் நீங்கள் குளிக்க பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் பசும் பால் விட்டு கலந்து குளிக்க வேண்டும். சிறிதளவு பசும் பாலை முகத்தில் பூசி, பிறகு முகம் கழுவுவதால் சந்திர பகவானின் அருள் உண்டாகும். அத்தி மரம் தல விருட்சமாக இருக்கும் கோயிலுக்கு சென்று அங்குள்ள இறைவனையும், அந்த மரத்தையும் அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் வணங்குவதால் பல மங்களங்கள் அவர்களின் வாழ்வில் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
மாவிளக்கு பூஜை பலன்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Hastham nakshatra pariharam in Tamil. It is also called as Hasta nakshatra in Tamil or Hasta nakshatra adhipathi in Tamil or Hasta natchathiram valipadu in Tamil or Hastam natchathiram rasi in Tamil.