குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்க விநாயகர் வழிபாடு

sivan vinayagar
- Advertisement -

பெற்றோர்களாக இருக்கும் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அப்படி அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்கு தேவையான அனைத்து விதமான நன்மைகளையும் செய்ய முற்படுவார்கள். அவர்களிடம் வருமானம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் கடன் வாங்கியாவது குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்காக பல முயற்சிகளை எடுப்பார்கள்.

இருப்பினும் குழந்தைகளின் சுட்டித்தனத்தால் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்காமலோ அல்லது பெற்றோரின் சொல்பேச்சை கேட்காமலோ இருக்கும் சூழ்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தைகளால் பெற்றவர்களுக்கு பெரிய மனவருத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் விநாயகரையும் சிவனையும் எந்த முறையில் வழிபட்டால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

முழு முதல் கடவுளாக விளங்கக்கூடிய விநாயகர் பெருமானை நாம் பல வேண்டுதல்களுக்காக வழிபடுவோம். ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒவ்வொரு நாட்கள் என்றும் அதேபோல் அந்த வேண்டுதல்களுக்குரிய வழிபாடுகள் என்றும் பல இருக்கின்றன. இதே போல் தான் சிவபெருமானையும் நினைத்து நாம் பல வழிபாடுகளையும் வேண்டுதல்களையும் மேற்கொள்வோம். இவர்கள் இருவரையும் அதாவது தந்தை மகன் இருவரையும் ஒருசேர நாம் வழிபடும் பொழுது எப்படி விநாயகர் சிவபெருமானின் பேச்சைக் கேட்டு நல்ல மகனாக திகழ்கிறாரோ அதேபோல் நம் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளும் பெற்றோரின் சொல் பேச்சைக் கேட்டு மிகவும் நல்ல முறையில் வளர்வார்கள்.

இந்த வழிபாட்டை திங்கட்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். திங்கட்கிழமை அன்று காலையில் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மஞ்சள் கலந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி விநாயக பெருமானுக்கு நாம் அபிஷேகம் செய்யலாம். வீட்டில் கண்டிப்பாக முறையில் விநாயகரின் சிறிய அளவிலாவது ஒன்று இருக்கும். அந்த விநாயகர் சிலைக்கு மஞ்சள் தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக அவருக்கு மிகவும் பிடித்தமான அருகம்புல்லை அவரிடம் வைத்து இரண்டு எருக்க இலையை பறித்து வந்து அதை மஞ்சள் தண்ணீரால் சுத்தம் செய்து காம்பு பகுதி விநாயகரை பார்த்த வாரும் நுனிப்பகுதி நம்மை பார்த்து வாரும் வைத்து இரண்டு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் விநாயகரை பார்த்தபடி எறிய வேண்டும்.

அடுத்ததாக சிவபெருமானுக்கு ஆறு விளக்குகளில் 12 தீபம் ஏற்ற வேண்டும். இதில் ஆறு தீபம் சிவபெருமானுக்கு ஆறு தீபம் நந்திக்கு என்ற வகையில் ஒரு அகலில் இரண்டு திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பிறர் தங்களுக்குத் தெரிந்த 108 போற்றிகளை கூறி சிவபெருமானுக்கு விநாயகர் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நவகிரகத்தால் வரும் பாதிப்புகள் நீங்க நவதானிய பரிகாரம்

இந்த முறையில் தொடர்ந்து ஏழு வாரங்கள் வழிபாடு செய்வதன் மூலம் குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் பெற்றோரின் சொல்பேச்சை கேட்டு கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

- Advertisement -