நன்மைகள் தரும் குலதெய்வ வழிபாடு

kulatheiva pongal
- Advertisement -

நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களை நீக்கி இன்பமான சுகமான வாழ்க்கையை அருளக்கூடிய தெய்வமாக நம்முடைய குலதெய்வம் திகழ்கிறது. ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் என்று ஒன்று கண்டிப்பான முறையில் இருக்கும். அந்த தெய்வத்தை வணங்கினால் தான் மற்ற தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைக்கும் என்பதால் தான் நம் முன்னோர்கள் அன்றைய காலத்திலேயே வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்ற முறையை புகுத்தி இருந்தனர். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அப்படிப்பட்ட குலதெய்வத்தை எந்த முறையில் வழிபட்டால் வாழ்க்கையில் துன்பம் நீங்கி முன்னேற்றம் ஏற்படும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

எந்த தெய்வத்தை நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் வழிபடாமல் இருந்தாலும் நமக்கு நன்மைகள் நடக்க வேண்டும் என்றால் கண்டிப்பான முறையில் குலதெய்வத்தை நினைத்து வழிப்பட வேண்டும். எவர் ஒருவர் தன்னுடைய குலதெய்வத்தை மறவாமல் தினமும் நினைத்து வழிபடுகிறாரோ அவருடைய வாழ்க்கையில் துன்பம் என்ற பேச்சுக்கு இடம் இல்லாமல் போகும். அதையும் மீறி துன்பம் வந்தாலும் அது இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.

- Advertisement -

குலதெய்வத்தை வழிபடுவதற்கு சிறந்த நாளாக கருதப்படுவது பௌர்ணமி தினமே. முடிந்த அளவிற்கு மாதா மாதம் வரக்கூடிய பௌர்ணமி நாளன்று குலதெய்வத்தை வழிபட்டு வந்தாலே பல நன்மைகளை நம் வாழ்வில் நம்மால் உணர முடியும். தீராத துன்பத்தில் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களும் சனிபகவானின் ஆதிக்கத்தால் படாத பாடு பட்டு கொண்டு இருப்பவர்களும் தங்களுடைய பிறந்த நட்சத்திர நாளன்று குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும்.

அங்கு இருக்கக்கூடிய தெய்வத்திற்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பிறகு தங்களால் இயன்ற அளவு நல்லெண்ணையை வாங்கி கோவிலுக்கு தானமாக தர வேண்டும். இவ்வாறு தந்த அந்த நல்லெண்ணையில் கோவிலில் தீபம் ஏற்றுவதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய துன்பம் என்னும் இருளை குலதெய்வமானது நீக்கி நமக்கு நல்ல முன்னேற்றத்தை தரும். இப்படி தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்ய வேண்டும்.

- Advertisement -

வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று அந்தக் கோவிலில் இருக்கக் கூடிய ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு மாலையை வாங்கி தர வேண்டும். இவ்வாறு தந்து வழிபடுவதன் மூலம் அவர்கள் நினைத்த வேலையை குலதெய்வம் அருள் செய்யும். திருமண தடை விலக குலதெய்வ கோவிலில் இருக்கும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஜோடியாக இரண்டு மாலைகளை வாங்கித் தர வேண்டும். இப்படி ஜோடியாக மாலை வாங்கி தருவதன் மூலம் அவர்களும் அடுத்த முறை குலதெய்வ கோவிலுக்கு வரும் பொழுது ஜோடியாக வருவார்கள்.

வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது புது ஆடை அணிந்து குலதெய்வ கோவிலில் சர்க்கரை பொங்கல் வைத்து குலதெய்வத்தை வழிபட்டு வரவேண்டும். இப்படி செய்வதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அவர்களால் அடைய முடியும்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நிறைவேற துளசி வழிபாடு

குலதெய்வ கோவிலுக்கு சென்று மனம் உருகி குலதெய்வத்தை வழிபட்டு வருபவர்களின் வாழ்க்கையில் எந்த துன்பமும் எதுவும் செய்யாது என்பதுதான் பலரும் கண்ட அனுபவ பூர்வமான உண்மை.

- Advertisement -