நினைத்தது நிறைவேற துளசி வழிபாடு

thulasi valipadu
- Advertisement -

தெய்வீக அம்சம் பொருந்திய செடியாக துளசி செடி திகழ்கிறது. மகாவிஷ்ணுவின் பரிபூரண அருளை பெறுவதற்கு துளசிச் செடியை வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எந்த ஒரு வீட்டில் துளசி செடி இருக்கிறதோ அந்த வீட்டில் மகாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணுவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. துளசிச் செடியை வளர்ப்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட துளசி செடியை எந்த முறையில் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பிருந்தாவனம் என்று கூறினால் அதில் கண்டிப்பாக முறையில் ஒரு துளசி செடியாவது இருக்கும். துளசி செடி இருக்கும் இடத்தில் எதிர்மறை சக்திகள் எதுவும் செயல்படாது என்று கூறப்படுகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் அவர்களின் இல்லங்களில் மாடம் கட்டி அதில் துளசி செடியை வைத்து பூஜை செய்து வந்தனர். துளசியில் பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. துளசியை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பதோடு மூளையின் செயல் திறன் அதிகரிக்கும் என்ற கூறப்படுகிறது. அதனால் தான் விஷ்ணு கோவிலுக்கு செல்லும் பொழுது துளசியை சாப்பிடுவதற்காக பிரசாதமாக தருகிறார்கள்.

- Advertisement -

சரி இப்பொழுது நினைத்தது நிறைவேற ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த முறையில் துளசியை வழிபட வேண்டும் என்று பார்ப்போம். மேஷம், சிம்மம், தனுசு இந்த ராசிக்காரர்கள் துளசி செடிக்கு தினமும் தீபம் ஏற்றி வழிபட்டு வர அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும். ரிஷபம், கன்னி, மகரம் இந்த ராசிக்காரர்கள் துளசிச் செடியை ஒன்பது முறை வலம் வந்து துளசிச் செடியின் மண்ணை தொட்டு வணங்க வேண்டும். மேலும் கோவில்களில் இருக்கும் துளசி செடிகளுக்கு மண் வாங்கி கொடுப்பதன் மூலம் அவர்கள் நினைத்தது நிறைவேறும்.

மிதுனம், துலாம், கும்பம் இந்த ராசிக்காரர்கள் துளசி செடிக்கு ஊதுபத்தி மற்றும் கற்பூரம் காட்டி வழிபட்டு வர அவர்கள் நினைத்தது நிறைவேறும். கடகம், விருச்சிகம், மீனம் இந்த ராசிக்காரர்கள் துளசி செடிக்கு ஊற்ற வேண்டிய தண்ணீரை செம்பில் வைத்துக் கொண்டு துளசிச் செடியை மூன்று முறை வந்து துளசி செடிக்கு தங்கள் கைகளால் நீரூற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் நினைத்தது நிறைவேறும்.

- Advertisement -

பொதுவான குறிப்பு: துளசி செடிக்கு நீர் ஊற்ற வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒரு செயலாக கருதப்படுகிறது. மற்ற செடிகளுக்கு ஊற்றுவதை போல் ஏதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து துளசிக்கு ஊற்றக்கூடாது. துளசி செடிக்கு என்று தனியாக ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

அது செம்பு, பித்தளை இப்படி ஏதாவது ஒரு தெய்வீக சம்பந்தப்பட்ட பொருட்களாக பார்த்து அதற்கென்று தனியாக வைத்து அதில் நீரை எடுத்து நம் உள்ளங்கைகளில் படும்படி துளசி செடிக்கு ஊற்ற வேண்டும். அந்த தண்ணீரில் சிறிது மஞ்சள், குங்குமம், பச்சை கற்பூரம் இவற்றை கலந்து ஊற்றுவதன் மூலம் அதன் பலன் பல மடங்கு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: காக்கைக்கு உணவு வைக்கும் முறை

வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை விலக்கி குடும்ப ஒற்றுமையை அதிகரித்து கடன் பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாத்து நமக்குத் தேவையான பண வரவை தரக்கூடிய அற்புத செடியாக துளசி செடி விளங்குகிறது.

- Advertisement -