வெளிநாடுகளில் நடைபெறும் ஒருநாள் போட்டிகளில் இவரே இந்திய அணியின் சிறந்த பவுலர் – பவுலிங் கோச்

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணியுடனான முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக விளையாடி போட்டிகளிலும் பெற்று தொடரை கைப்பற்றியது.

rayudu

இந்த தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்து வருகிறது. கடந்த பல தொடர்களாக இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் சிறப்பாக பந்துவீசி எதிர் அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகின்றனர். இதுகுறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் பரத் அருண் கூறியதாவது : இந்திய அணியின் பந்துவீச்சு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது மிகுந்த பலத்துடன் உள்ளது. இதனால், நம் அணியால் எந்த ஒரு அணியையும் அவர்களது நாட்டில் ஆல்அவுட் செய்யும் அளவிற்கு நம் அணி தகுதியுடன் உள்ளது. பொதுவாக வெளிநாட்டு மைதானங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசுவார்கள்.

kuldeep

ஆனால், நம் அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் அனைத்து வெளிநாடுகளிலும் சிறப்பாக பந்துவீசுகிறார். மேலும், அவரது சிறந்த பந்துவீச்சு அனைத்தும் வெளிநாடுகளில் வந்தவை. எனவே, வெளிநாட்டு மைதானத்தில் இவரே தற்போதைக்கு சிறந்த பவுலர் என்று நான் குறிப்பிடுவேன். என்று பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

கேட்ச் பிடித்த பிறகு நான் தொடையை தட்டுவதன் காரணம் இதுதான் – ரகசியத்தை வெளியிட்ட தவான்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்