கேட்ச் பிடித்த பிறகு நான் தொடையை தட்டுவதன் காரணம் இதுதான் – ரகசியத்தை வெளியிட்ட தவான்

dhawan

இந்திய அணியின் நட்சத்திர துவக்கஆட்டக்காரரான தவான் அனைத்து ஐ.சி.சி நடத்தும் தொடர்களிலும் சிறப்பாக செயல்படுபவர். அதைப்போன்றே வரும் மே மாதம் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு முன் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரில் சிறப்பான பார்மில் உள்ளார் .

dhawan

தவான் மைதானத்தில் பீல்டிங் செய்யும்போது அவர் ஒவ்வொரு முறை கேட்ச் பிடித்தால் அவர் தனது தொடையை உயர்த்தி தட்டுவதை நாம் பலமுறை கண்டு இருப்போம் . அது அவரின் தனி அடையாளமாகவே மாறிவிட்டது. தற்போது தனது தொடையை தட்டி அவர் விக்கெட்டை கொண்டாடுவதன் காரணத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் தவான் கூறியதாவது : நான் ஒவ்வொருமுறை கேட்ச் பிடிக்கும்போதும் எனது தொடையை உயர்த்தி தட்டுவேன் அதன் காரணத்தினை பலரும் என்னிடம் கேட்டனர். அதன் காரணம் யாதெனில், கபடி போட்டிகளில் வீரர்கள் விளையாட தொடங்கும் முன் கோட்டை தொட்டு தொடையை தட்டி ரெய்டுக்கு செல்வார்கள் அதனை நீங்கள் கவனித்து இருக்கலாம்.

team

அதனை சிறிது என்னுடைய ஸ்டைலுக்கு மாற்றி கேட்ச் பிடிக்கும் போது அவ்வாறு தட்டி மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவேன். இது நம் அணிவீரர்கள் பலருக்கு பிடிப்பது மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களுக்கும் பிடித்தமான ஒன்றாக இருப்பதால் அதையே என் அடையாளமாக மாற்றிக்கொண்டேன் என்று தவான் பேட்டியில் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

உலககோப்பை போட்டிகளுக்கு முன் இந்தியாவிற்கு கிடைத்த அடுத்த சூப்பர் ஸ்டார் – கங்குலி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்