குல்தீப் யதாவிற்கு மீண்டும் மறுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருது. எந்த வருத்தமும் இல்லை எனக்கு இதுவே போதும் – குல்தீப்

kuldeep

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது கிரிக்கெட் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டாஸ் 50 ஓவர்கள் முடிவில் 324 ரன்களை குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் 87 ரன்களையும் தவான் 66 ரன்களையும் குவித்து சிறப்பான துவக்கத்தினை அளித்தனர்.

325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் ப்ரேஸ்வெல் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அனைவரும் அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குலதீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருது ரோஹித் சர்மாவிற்கு கிடைத்தது.

பின்னர் பேசிய குலதீப் : இந்த போட்டியிலும் நான் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் ஒரு தருணமாக கருதுகிறேன். மேலும், சென்ற போட்டியில் இந்த போட்டியிலும் எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கவில்லை என்பது பற்றியெல்லாம் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனக்கு தேவை இந்த ஒரு விடயம் மட்டும் தான்.

kuldeep

இந்திய அணிக்காக நான் தொடர்ந்து ஆடவேண்டும். என்னால், அணிக்கு வெற்றி கிடைத்தால் அதுவே எனக்கு போதும் இதைவிட வேறென்ன வேண்டும். இதுபோன்ற தருணங்களை என்னால் மறக்க இயலாது. மேலும், இந்திய அணி தற்போது நல்ல நிலைமையில் மிகச்சிறப்பாக உள்ளது. என்று தனது கருத்தினை தெரிவித்தார் குலதீப் யாதவ்.

இதையும் படிக்கலாமே :

சிறிய மைதானம் ஸ்லோ பிட்ச் போன்றவையெல்லாம் தோல்விக்கு ஒரு காரணம் இல்லை. இதுவே தோல்விக்கு காரணம் – கேன் வில்லியம்சன்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்