பவுண்டரி லைனில் இருந்து கில்லியாக த்ரோ அடித்து ரன் அவுட் செய்த விஜய் ஷங்கர் – வீடியோ

Vijay

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. இதனால் நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்ய வந்தனர்.

Tim seifert

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் சிறப்பாக விளையாடி 36 பந்தில் 42 ரன்களை குவித்தார். அவரது விக்கெட்டினை ரன் அவுட் மூலம் பறிகொடுத்தார். மிட்சல் பந்தை பலமாக அடித்து எல்லைக்கு கோட்டிற்கு செல்ல வைத்தார்.

ஆனால், அங்கு இருந்த விஜய் ஷங்கர் அந்த பந்தை பிடித்து துல்லியமாக த்ரோ செய்தார். பந்து ஸ்டம்பை தகர்த்தது. டெய்லர் ஏமாற்றத்துடன் வெளியேறினார். இதோ அந்த அற்புதமான ரன் அவுட் வீடியோ உங்களுக்காக :

தற்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 97 ரன்கள் தேவை.

இதையும் படிக்கலாமே :

முதல் பந்தில் 6, இரண்டாவது பந்தில் 4, அடுத்த பந்தை உள்ளே போடச்சொன்ன தல தோனி. பேட்ஸ்மேனை தூக்கிய புவி – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்